என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "National College of Engineering"
- துறைத்தலைவர் கலைவாணி, செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும் மற்றும் தொழில்நுட்ப போட்டிகள் குறித்து பேசினார்.
- கருத்தரங்கில் மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த தலைப்புகளில் தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் துறையின் தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது. 2-ம் ஆண்டு மாணவி ஷ்ரியா வரவேற்று பேசினார். துறை மன்றம் குறித்த தகவல்களை மாணவர் மலையரசு தொகுத்து வழங்கினார். கல்லூரி டீன் பரமசிவம் மற்றும் துறைத்தலைவர் வே.கலை வாணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் சென்னை, காக்னி சன்ட் நிறுவனத்தின் மேலாள ரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான சுந்தர ராஜ பெருமாள் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக மாணவர் முத்துகுமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப் படுத்தி பேசினார். துறைத் தலைவர் கலைவாணி, செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும் மற்றும் தொழில்நுட்ப போட்டிகள் குறித்த தகவல்கள் குறித்து பேசினார். இணையதள வடிவமைப்பாளருக்கான தகுதிகள் மற்றும் அந்த துறையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கான வழிமுறை கள் குறித்தும் சிறப்பு விருந்தினர் சுந்தர ராஜ பெருமாள் மாணவர்களுக்கு விளக்கினார். மேலும், மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்ப துறைகளிலும் தங்கள் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். முடிவில் மாணவி பூர்ணிமா நன்றி கூறினார்.
கருத்தரங்கில் மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த தலைப்புகளில் தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல் மற்றும் முதல்வர் கே.காளி தாச முருகவேல் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஒருங்கி ணைப்பாளர் ராம்பிரியா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
- சென்னை, எல்.டி.ஐ. மைண்ட்ரீ நிறுவனத்தின் தொகுப்பு அமலாக்கத் துறையின் மூத்த சிறப்பு நிபுணரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான ப்ளெஸ்டு சிங் தனசிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை தொடக்கி வைத்து பேசினார்.
- மாணவி கவிதா ஸ்ரீநிதி மற்றும் மாணவர் கிசோர் சுரேஷ் ஆகியோர் கூட்டமைப்பின் செயல்பாடுகளை விளக்கினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி எந்திர பொறியியல்துறை கூட்டமைப்பின் 2023-2024-ம் கல்வியாண்டிற் கான தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மென்பொருள் துறைகளில் பணி வாய்ப்பு
இதில், சென்னை, எல்.டி.ஐ. மைண்ட்ரீ நிறு வனத்தின் தொகுப்பு அமலாக்கத் துறையின் மூத்த சிறப்பு நிபுணரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான ப்ளெஸ்டு சிங் தனசிங் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு விழாவினை தொடக்கி வைத்து பேசினார்.
அப்போது தற்போதைய சூழலில் எந்திர பொறியியல் துறையை சார்ந்தவர்கள் எவ்வாறு மென்பொருள் துறைகளில் பணி வாய்ப்பு பெறுவது எப்படி? பின்னர் அவற்றில் எவ்வாறு சிறப்புடன் செயல்படுவது? என்றும் விளக்கமாக பேசி னார். முன்னதாக, கல்லூரி முதல்வர் காளிதாஸ முருக வேல் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் ராஜா தலைமை உரையாற்றினார். மாணவர் பாலாஜி வர வேற்றார். மாணவர் மாணிக்க ரத்தினம் சிறப்பு விருந்தினரை அறிமுகப் படுத்தினார். மாணவி கவிதா ஸ்ரீநிதி மற்றும் மாணவர் கிசோர் சுரேஷ் ஆகியோர் கூட்டமைப்பின் செயல்பாடுகளை விளக்கினர். முடிவில் மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார்.
இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவின் ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் சண்முகவேல் மற்றும் முதல்வர் ஆகி யோர்களின் வழிகாட்டு தலின்படி எந்திர பொறியி யல் துறைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர் சுந்தர பாரதி, துறைப் பேராசிரி யர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.
சுற்றுசூழல் சங்கம் தொடக்கவிழா
இதேபோல் சுற்றுசூழல் சங்கத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை மாணவி ஜெயஸ்ரீ வரவேற்றார். பேராசிரியர் மற்றும் டீன் பரமசிவன் தலைமை தாங்கி சுற்றுச்சூழல் சங்கத்தின்
முக்கியத்துவத்தினைப் பற்றி எடுத்துரைத்தார். எந்திர பொறியியல்துறை மாணவி ஐஸ்வர்யா சிறப்பு விருந்தினரை அறிமுகப் படுத்தினார். நெல்லை சென்டிஸின் நிறுவனத்தின் தலைமை சாப்ட்வேர் டெவ லப்பர் ஜேம்ஸ்தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொறியி யல்துறை மூலம் சுற்றுசூழல் நிலைத்தன்மையை செயல் படுத்துதல், மேம்படுத்துதல், அதன் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். முடிவில் மின்னணு மற்றும் தொடர்பு
பொறியியல்துறை மாணவி வீனர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கல்லூரி தாளாளர் கே.ஆர். அருணாச் சலம், கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர் காளிதாச முருகவேல் மற்றும் சுற்றுசூழல் சங்க அலுவலர்கள் வழிகாட்டு தலின்படி
தன்னார்வலர்கள் செய்தனர். இதில் 150 க்கும் மேற்பட்ட சுற்றுசூழல் சங்க தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
- வெற்றிக்கு வழி எனும் தலைப்பில் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி மாணவர்களிடையே கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.
- பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பொது அறிவு உள்ளிட்ட ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பட்டப்படிப்பு பயிலும் போதே பணி வாய்ப்பினை உறுதி செய்து கொள்ள முடியும்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் வெற்றிக்கு வழி உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் வெற்றிக்கு வழி எனும் தலைப்பில் கல்வி ஆலோ சகர் ஜெயப்பிரகாஷ் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்க ளிடையே கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கி னார்.
பகுப்பாய்வுத் திறன்
அப்போது சிறப்பு விருந்தினர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:-
இன்றைய சூழ்நிலையில் பிளஸ்-2 வகுப்பு நிறைவு செய்துள்ள மாணவர்கள் தங்களுடைய தகுதி, தனித்திறன், பொது அறிவு உள்ளிட்ட ஆளுமைப் பண்பு களை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பட்டப்படிப்பு பயிலும் போதே பணி வாய்ப்பினை உறுதி செய்து கொள்ள முடியும்.
படிக்கும் போதே கணிப்பொறி மொழி சார்ந்த திறன்சார் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே வரும் காலங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய முடியும். பொறியியல் பட்டப்படிப்பினை தேர்வு செய்து படிப்பதன் மூலமாக பகுப்பாய்வுத் திறன் மற்றும் நேர்காணல் உள்ளிட்ட அத்தியாவசிய திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பிளஸ்-2 முடித்துள்ள மற்றும் பிளஸ்-2 சேர்ந்துள்ள சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர். அருணாச்சலம், இயக்குனர் எஸ். சண்முகவேல், முதல்வர் கே. காளிதாச முருகவேல் ஆகியோர்களின் ஆலோசனையின்படியும் அறிவியல் மற்றும் மானுட வியல் துறைத்தலைவர் நீலகண்டன் வழிகாட்டுதலின் படியும் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர்கள் பாஸித்தா பர்வீன், ராமசுப்பு, ராஜ் குமார் மற்றும் சிவக்குமார் மற்றும் கல்லூரிப் பேராசி ரியர்கள் செய்திருந்தனர்.
- கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினருக்கு கல்லூரி துணைத்தலைவர் மற்றும் தாளாளர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ேநஷனல் பொறியியல் கல்லூரியில் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது.
கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல் முன்னிலை வகித்தார்.
ஐதராபாத், எல்.டி.ஐ, மைண்ட்ரீ ஹெல்த்கேர் மற்றும் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் குளோபல் டெலிவரி ஹெட்டும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான ஆர்.உமா சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையில் கல்லூரியின் முதன்மையான நோக்கம் தரமான உயர்கல்வியை வழங்குவதாகும். கல்லூரியின் ஐ.இ.இ.இ. சேப்டர் வாயிலாக தொடங்கிய தனது வாழ்க்கை, தான் பயின்ற கல்லூரிக்கே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.
மேலும், அவர் தொழில்நுட்பம் தொடர்ந்து மாறி வருவதால், மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்த வேண்டும் என்றும், படைப்பாற்றல் மிக்கவர்களாக இருந்தால் பொருளாதார மந்த நிலையைக் கூட மிஞ்சலாம் என்றும் கூறினார். மேலும் மாணவர்கள் முதலில் தாம் மென்மேலும் வளர வேண்டும் என்ற நோக்கம் மேலோங்கி இருக்க வேண்டும் என்றும், இரண்டாவதாக, தொடர்ந்து அறிவை, திறமையை தேடுவதைத் தொடர வேண்டும், மூன்றாவதாக தரம் மற்றும் செயல்திறனுக்கான திறவுகோலான தொழில்நுட்பம் முறையைப் பேண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் "என்னால் முடிந்தால் உங்களாலும் முடியும்...." என்று கூறி தனது உரையை முடித்தார்.
விழாவில், கல்லூரிப் பேராசிரியை எல்.கலைவாணி வரவேற்றார். சிறப்பு விருந்தினருக்கு கல்லூரி துணைத்தலைவர் மற்றும் தாளாளர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் 2022-23-ம் கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார்.
சிறப்பு விருந்தினரை பேராசிரியர் எஸ். அய்யாராஜா அறிமுகம் செய்து வைத்தார். மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அனைத்துத் துறை முதலாம், 2-ம், 3-ம் மற்றும் 4-ம் ஆண்டு பருவத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்குப் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
2022-23-ம் கல்வியாண்டின் சிறந்த மாணவருக்கான விருதினை எந்திர பொறியியல் துறை மாணவர் டி.ஆனந்தவேல் மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை மாணவர் எஸ்.பொன் சரவணக்குமார் ஆகியோருக்கு பகிர்ந்தும், சிறந்த மாணவிக்கான விருதினை தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி கே.சுக பிரியாவுக்கும் வழங்கப்பட்டது.
மேலும், மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்க ளிடமிருந்து நிதி உதவி பெற்று ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் கல்லூரி பேராசிரியர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
விழாவில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் எஸ்.மதிவண்ணன், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஆர்.முத்துக்குமார் நன்றி கூறினார்.
விழாவின் ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோரின் ஆலோசனைப்படி பேராசிரியர் கே.மொஹைதீன் பிச்சையின் ஒருங்கிணைப்பில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
- விழாவிற்கு கல்லூரி துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச் சலம் தலைமை தாங்கினர்.
- விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் விளையாட்டு சார்ந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 39-வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச் சலம் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒலிம்பிக் சுடர் ஓட்டத்துடன் தொடங்கிய விளையாட்டு விழாவில் துறை வாரியாக கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் விளையாட்டு சார்ந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக சென்னை, மொக்சியே இன்ப்ராடெக் நிறுவனத்தின் இயக்குனரும் ,கல்லூரியின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை முன்னாள் மாணவருமான பி. ஸ்ரீனிவாச பிரகாஷ் கலந்து கொண்டு இறுதிச் சுற்று போட்டிகளை தொடங்கி வைத்தார்.
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை இறுதி ஆண்டு மாணவி சுஜி வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் ரகு விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தார்.
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை 3-ம் ஆண்டு மாணவி தேஜஸ்வினி சிறப்பு விருந்தி னரை அறிமுகப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினர் ஸ்ரீனிவாச பிரகாஷ் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மொபைல் போனின் தாக்கத்திலிருந்து வெளிவரு வதற்கும், உடல் மற்றும் மனது திறன்பட தினமும் குறைந்தது 1 மணி நேரமாவது உடற்பயிற்சி மற்றும் விளை யாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும், இவ்விழாவில் தேசிய அளவில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கிக் வாலிபால் போட்டி மற்றும் 26-வது ஜூனியர் தேசிய கிக் வாலிபால் சாம்பி யன்ஷிப் போட்டிகளில் பரிசு பெற்ற எந்திர பொறியியல் துறை 2-ம் ஆண்டு மாணவர் சொர்ண வேல்ராஜன் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியி யல் துறை இரண்டாம் 2-ம்ஆண்டு மாணவர் பாஸ்கர் சேது ஆகி யோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
இவ்வருடத்திற்கான தனிநபர் சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் எந்திர பொறியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் ஜெரோன், மின்னியல் மற்றும் மின்னணு பொறியி யல் துறை 3-ம் ஆண்டு மாணவர் கிறிஸ்டென் , மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் அருண் முத்து சுகுமார் ஆகிய 3 மாணவர்களும், பெண்கள் பிரிவில் தகவல் தொழில் நுட்ப துறை 3-ம் ஆண்டு மாணவி ரசினத் ஆபியாவும் பெற்றனர்.
இவ்வருடத் திற்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் மஞ்சள் அணியும், பெண்கள் பிரிவில் மஞ்சள் அணியும் பெற்றனர். எந்திர பொறியி யல் துறை 3-ம் ஆண்டு மாணவர் மணி கண்டன் நன்றி கூறினார்.
விழாவில் கல்லூரியின் அனைத்து துறை தலை வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வரின் வழிகாட்டு தலின்படி உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்த னர்.
- கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- கல்வி நிலையங்களில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்பு முறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சிலையும் நீயே.. சிற்பியும் நீயே.. எனும் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்வி ஆலோசகர் ஆர்.அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரை யாடி ஆலோசனை களை வழங்கி கூறியதாவது:-
அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ, எங்கு படித்தாலும் நன்றாக, கடுமையாக உழைத்தால், இந்தியாவின் தலை சிறந்த கல்விநிலையங்களில் தங்களது உயர்கல்வி படிப்பினை பயின்று வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரலாம். அது போன்ற கல்வி நிலையங்களில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்பு முறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இன்றைய சூழ்நிலையில் பிளஸ்-2 வகுப்பு நிறைவு செய்துள்ள மாணவர்கள் தங்களுடைய தகுதி, தனித்திறன், பொது அறிவு உள்ளிட்ட ஆளுமைப்பண்புகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே உயர்கல்வி பயிலும் போதே பணிவாய்ப்பினை உறுதி செய்து கொள்ள முடியும். பொறியியல் பட்டப் படிப்பினை தேர்வு செய்து படிப்பதன் மூலமாக பகுப்பாய்வுத் திறன் மற்றும் நேர்காணல் உள்ளிட்ட அத்தியாவசிய திறன்களை வளர்த்துக் கொள்ளலாம் .எந்த தொழில் சார் படிப்பினை தேர்ந்தெடுத்தாலும் அடிப்படை கணினி குறியீட்டு முறை பற்றிய புரிதல் மிக அவசியம். ஏதேனும் ஒரு கணினி மொழியில் புலமை பெற்றுருத்தல் அவசியம்
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, இந்தாண்டு பிளஸ்-2 வகுப்பை நிறைவு செய்த சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியில் ஆன்லைன் அப்ஜெக்ட்டிவ் டெஸ்ட்-இல் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும் அதிக எண்ணிக்கை யிலான மாணவர்களை ஊக்கப்படுத்தி எழுதச் செய்த கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி, விக்கிரமசிங்கபுரம் கேம்ப்ரிட்ஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு தலா ரூபாய் 2,500/- மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குனர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் வழிகாட்டு தலின்படியும் அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத்தலைவர் எம்.ஏ.நீலகண்டன் ஆலோசனை யின் படியும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.தாளமுத்து, எஸ்.சசிரேகா, பி.அன்ன ராஜ், எஸ்.சுபாஷ், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
- தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு 'பெண்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரி இசக்கி ராஜன் பெண்கள் பாதுகாப்பு குறித்து எடுத்துக்காட்டோடு எடுத்துரைத்தார்.
கோவில்பட்டி:
நேஷனல் பொறியியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பாக தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு 'பெண்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மண்டல ஜூனியர் ஜேசி பயிற்சியாளர் எஸ்.ஜூஆனா கோல்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, பெண்கள் தம் செயல்களை கால நிர்ணயப்படி 'தேவை, தேவையற்றவை, முக்கியம், முக்கியமற்றவை" என 4 பிரிவுகளாக பிரித்து அதனை செயல்படுத்த வேண்டும் என்றும், பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதனையும், பெண்கள் முன்னேற்றமே வீட்டையும் நாட்டையும் மேன்மையடையச் செய்யும் என்பதையும் அழகாக எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரி இசக்கி ராஜன் பெண்கள் பாதுகாப்பு குறித்து எடுத்துக்காட்டோடு எடுத்துரைத்தார். மேலும், அவர் பேரிடர் மற்றும் ஆபத்து காலங்களில் பெரும் குரல் கொடுத்தும், அவசர கால உதவி எண் 112-ஐ பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
முன்னதாக, மாணவி செண்பகலட்சுமி வரவேற்றார், மாணவி எஸ்.சோபியா சிறப்பு விருந்துனரை அறிமுகம் செய்தார். மாணவி ஸ்வேதா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் ஆலோசனையின் படி தேசிய மாணவர் படை அதிகாரிகள் கேப்டன் என்.பி.பிரகாஷ், லெப்டினன்ட் ஜி.ஆர்.ஹேமலட்சுமி மற்றும் தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.
- பட்டமளிப்பு விழாவிற்கு, கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
- மதுரை காமராஜ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெ.குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 34-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு, கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நிர்வாகக்குழு உறுப்பினர் ஷண்மதி, நேஷனல் பொறியியல் கல்லூரிச் செயலர் சங்கரநாராயணன், இயக்குநர் சண்முகவேல், முதல்வர் காளிதாசமுருகவேல், தொழி லதிபர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெ.குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் முதலில் உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் எப்பவும் முக்கியமானவர் என்று நினைத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள். நாம் எப்படி சாதிக்க முடியும், எப்படி முன்னேறுவது என்று சிந்தியுங்கள்.அப்போது தான் மாணவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறலாம் என்றார்.
தொடர்ந்து, இளநிலை பொறியியல் மாணவர்கள் 638 பேருக்கும், முதுநிலை மாணவர்கள் 12 பேருக்கும் துணைவேந்தர் குமார் பட்டங்களை வழங்கினார். பட்டம் பெற்றவர்களில் 39 இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்கள் தன்னாட்சி தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் கல்லூரி முதல்வர்கள் ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி), மதிவண்ணன் (கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர், முதல்வர் ஆகியோர் வழிகாட்டுதலில், விழா ஒருங்கிணைப்பாளர்கள் கலைவாணி, ரமணன் மற்றும் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்