search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 39-வது ஆண்டு விளையாட்டு விழா
    X

    சாதனை படைத்த மாணவிகளுக்கு விழாவில் கேடயம் வழங்கப்பட்ட காட்சி.

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 39-வது ஆண்டு விளையாட்டு விழா

    • விழாவிற்கு கல்லூரி துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச் சலம் தலைமை தாங்கினர்.
    • விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் விளையாட்டு சார்ந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 39-வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு கல்லூரி துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச் சலம் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒலிம்பிக் சுடர் ஓட்டத்துடன் தொடங்கிய விளையாட்டு விழாவில் துறை வாரியாக கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் விளையாட்டு சார்ந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக சென்னை, மொக்சியே இன்ப்ராடெக் நிறுவனத்தின் இயக்குனரும் ,கல்லூரியின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை முன்னாள் மாணவருமான பி. ஸ்ரீனிவாச பிரகாஷ் கலந்து கொண்டு இறுதிச் சுற்று போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை இறுதி ஆண்டு மாணவி சுஜி வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் ரகு விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தார்.

    கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை 3-ம் ஆண்டு மாணவி தேஜஸ்வினி சிறப்பு விருந்தி னரை அறிமுகப்படுத்தினார்.

    சிறப்பு விருந்தினர் ஸ்ரீனிவாச பிரகாஷ் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மொபைல் போனின் தாக்கத்திலிருந்து வெளிவரு வதற்கும், உடல் மற்றும் மனது திறன்பட தினமும் குறைந்தது 1 மணி நேரமாவது உடற்பயிற்சி மற்றும் விளை யாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.

    முன்னதாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மேலும், இவ்விழாவில் தேசிய அளவில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கிக் வாலிபால் போட்டி மற்றும் 26-வது ஜூனியர் தேசிய கிக் வாலிபால் சாம்பி யன்ஷிப் போட்டிகளில் பரிசு பெற்ற எந்திர பொறியியல் துறை 2-ம் ஆண்டு மாணவர் சொர்ண வேல்ராஜன் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியி யல் துறை இரண்டாம் 2-ம்ஆண்டு மாணவர் பாஸ்கர் சேது ஆகி யோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    இவ்வருடத்திற்கான தனிநபர் சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் எந்திர பொறியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் ஜெரோன், மின்னியல் மற்றும் மின்னணு பொறியி யல் துறை 3-ம் ஆண்டு மாணவர் கிறிஸ்டென் , மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் அருண் முத்து சுகுமார் ஆகிய 3 மாணவர்களும், பெண்கள் பிரிவில் தகவல் தொழில் நுட்ப துறை 3-ம் ஆண்டு மாணவி ரசினத் ஆபியாவும் பெற்றனர்.

    இவ்வருடத் திற்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் மஞ்சள் அணியும், பெண்கள் பிரிவில் மஞ்சள் அணியும் பெற்றனர். எந்திர பொறியி யல் துறை 3-ம் ஆண்டு மாணவர் மணி கண்டன் நன்றி கூறினார்.

    விழாவில் கல்லூரியின் அனைத்து துறை தலை வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வரின் வழிகாட்டு தலின்படி உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்த னர்.

    Next Story
    ×