search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national party"

    தேசிய கட்சிகளுடன் ஓரு போதும் அ.ம.மு.க. கூட்டணி அமைக்காது என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #thangatamilselvan #bjp #parliamentelection

    ஆரணி:

    ஆரணி அடுத்த நேத்தப்பாக்கத்தில் அ.ம.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது-

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமைந்தால் 4வது இடத்திற்கு செல்லும். நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறுவார்கள்.

    தேசிய கட்சிகளுடன் ஓரு போதும் அ.ம.மு.க. கூட்டணி அமைக்காது. பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அ.ம.மு.க. தயவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. அடுத்து ஆட்சியை நிச்சயமாக பிடிக்கும் என்று கூறி வருகிறார். ஆர்.கே.நகர் இடைதேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்துள்ளது.

    ஜெயலலிதா, கருணாநிதி இறப்பிற்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தினகரன் நிரப்புவார். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு நிரந்தமான தலைவராக தினகரன் இருப்பார். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட செயலாளர் வரதன், ஆரணி தொகுதி பொறுப்பாளர் பார்த்தீபன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, நகர செயலாளர் வேலாயுதம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நேத்தப்பாக்கம் சரவணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #thangatamilselvan #bjp #parliamentelection

    வருகிற தேர்தலில் அ.தி. மு.க. கூட்டணி அமைத்து தான் போட்டியிட வேண்டுமென்று அவசிய மில்லை. குறிப்பாக தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வுக்கு அவசியமில்லை என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #rajanchellappa

    மதுரை:

    மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சம் செலவில் செல்லூர் பகுதியில் 3 பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைக்கு செல்லூர் பகுதியில் 3 பேவர் பிளாக் சாலை ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.

    தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் செய்து தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கமாகும். இந்த இயக்கத்தில் தொண்டராக இருப்பது பெருமை.

    அ.தி.மு.க.வின் எம்.ஜி. ஆர்., இரட்டை இலையை மறந்து வேறு கட்சிக்கு எந்த தொண்டனும் செல்ல மாட்டார்கள். ஆனால் எங்களிடம் பிரிந்து சென்ற சிலர் தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல் வந்துள்ளது. அதற்கு காரணம் அவர்கள் ஏற்றுள்ள தலைமையின் சுய நலமும் தான்.

    மதுரையை பொறுத்த வரை அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் பணி செய்து வருகிறார்கள்.

    கஜா புயல் பாதிப்புக்கான நிவாரண தொகை மத்திய அரசு உடனே அறிவிக்க வலியுறுத்தி நாடாளு மன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

    தமிழ்நாடு என்றாலே மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது. மத்தியில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் இதே நிலைதான்.

    எனவே தான் நாங்கள் அம்மா பிரதமராக வர வேண்டும் என பாடுபட்டோம். அந்த முயற்சி நடக்காமலே போய்விட்டது. விரைவில் எம்.பி.க்கள் தேர்தல் வர உள்ளது.

    வருகிற தேர்தலில் அ.தி. மு.க. கூட்டணி அமைத்து தான் போட்டியிட வேண்டுமென்று அவசிய மில்லை. குறிப்பாக தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வுக்கு அவசியமில்லை.

    1 1/2 கோடி தொண்டர்கள் உள்ள மிகப்பெரிய இயக்கம் அ.தி.மு.க. மக்கள் செல்வாக்கு உள்ளது. எனவே தனித்து நின்று எந்த தேர்தலையும் சந்திப்போம்.

    தெலுங்கானாவில் கூட சந்திரசேகரராவ் தனித்து நின்று வெற்றி பெற்று உள்ளார். அ.தி.மு.க.வும் தனித்து நின்று போட்டியிடும். தேவைப்படும் பட்சத்தில் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து அ.தி.மு.க. மேலிடம் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பேவர் பிளாக்சாலை திறப்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், ஜெயவேல், ஒச்சாத்தேவர், ஆறுமுகம், சோலைராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். #rajanchellappa

    ×