search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Natural compost"

    • இந்த மாடித்தோட்ட தளையின் உதவியுடன் காய்கறி பயிர்களான வெண்டை, கத்திரி, கீரை, முருங்கை, அவரைக்காய் மற்றும் கொடிகாய் தளைகள் வளர்த்தேன்.
    • இயற்கை உரங்களை உபயோகப்படுத்தியதால் பூச்சி மருந்து அற்ற பசுமையான மற்றும் சத்தான காய்கறிகளைப் பெற்றேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த தோட்ட க்கலை அபிவிருத்தி திட்ட த்தின்கீழ் ஊரகப்பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு 3500 தளைகள், நகர்ப்புறங்களில் மாடித்தோட்டங்கள் அமைப்பதற்கு 500 தளைகள் மற்றும் நோய்எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் 4500 தளைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர் முனிசிபல் காலனியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் கூறியதாவது:- தோட்டக்கலைத்துறை மூலம் தஞ்சாவூர்வட்டார தோட்டக்கலைஉதவி இயக்குநர் அலுவலகத்தி லிருந்து தேசிய தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில் 2 மாடித்தோட்ட தளையை மானியத்தில் ரூ.450-க்கு பெற்றேன்.

    அந்த தளையில் 6 வளர்ப்பு பைகள் மற்றும் தென்னை நார் உரம், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் - 200 கிராம், டிரைகோடெர்மா விரிடி – 100கிராம், அசாடிராக்டின் - 100 மி.லி, 6 வகையான விதை அடங்கிய பொட்டலம் மற்றும் வழிகாட்டி புத்தகம் ஆகியவை இருந்தது. இந்த மாடித்தோட்ட தளையின் உதவியுடன் காய்கறி பயிர்களான வெண்டை, கத்திரி, கீரை, முருங்கை, அவரைக்காய் மற்றும் கொடிகாய் தளைகள் வளர்த்தேன். இதன் மூலம் எங்களது குடும்பத் தேவையைபூர்த்தி செய்ததுடன் உறவினர்க ளுக்கும், காய்க றிகளை பகிர்ந்து அளித்தேன்.

    நகரப்பகுதியில் வசிக்கும் இடமற்ற ஆர்வமுள்ள குடும்பங்களுக்கு இந்த தளைகள் அடங்கி காய்கறி தொகுப்பு மிகவும் உபயோகமானதாக இருக்கும். மேலும் இயற்கை உரங்களை உபயோகப்படுத்தியதால் பூச்சி மருந்து அற்ற பசுமையான மற்றும் சத்தான காய்கறிகளைப் பெற்றேன். ஆகவே தோட்டக்கலை துறைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவர் கூறியதாவது:-

    தோட்டக்கலைத்துறை மூலம் தஞ்சாவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து தேசிய தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில் 2 மாடித்தோட்ட தளையை மானியத்தில் பெற்றேன்.இந்த மாடித்தோட்ட தளையின் உதவியுடன் காய்கறி பயிர்களை வளர்த்தேன். இது எனக்கு உறவினர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்த ளித்து, உதிவயாகவும் இருந்தது இத்திட்டத்தை அறவிகத்து நடைமுறை படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துகோள்கிறேன் என்றார்.

    • குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரித்து மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வல்லம்:

    தஞ்சை அருகே வல்லம் பஸ்ஸ்டாண்டில் விவசாயிகளுக்கு தேவையான திடக்கழிவு மேலாண்மை திட்ட இயற்கை உரம், மண்புழு உரம் மற்றும் மரக்கன்றுகள் விற்பனை மையத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

    வல்லம் பேரூராட்சி க்குட்பட்ட அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை விற்பனை செய்வதற்காக இந்த விற்பனை மையம் தொடங்கப்படம்டுள்ளது. இதை திறந்து வைத்த பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    முதல்வர் உத்தரவுக்கிணங்க வல்லம் பேரூராட்சி க்குட்பட்ட அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது தினமும் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் மொத்த குப்பைகள் 4.230 டன்னில் மக்கும் குப்பை 2.540 டன் மற்றும் மக்காத குப்பை 1.040 டன் சேகரம் செய்யப்படுகிறது.

    இந்த குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரித்து மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளொன்றுக்கு சராசரி சுமார் 200 கிலோ உரம் தயாரிக்கப்படுகிறது.

    இந்த உரம் 2021-22 ம் நிதியாண்டில் ரூ 33500க்கும், 2022-23 ம் நிதியாண்டில் ரூ.37000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட அளவில் உரங்களை வளம் மீட்பு பூங்காவில் உள்ள மரக்கன்றுகளுக்கு இடப்பட்டு அதன் மூலம் விளையும் காய், கனிகள் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்களுக்கே வழங்கப்படுகிறது. மேற்படி உரங்களை மரம் வளர்ப்பு மற்றும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தினால் அதிகமாக மகசூல் கிடைக்கும் வளம் மீட்பு பூங்காவில் நர்சரி மூலம் மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் தயார் செய்யப்படுகிறது.

    உற்பத்தி செய்யப்படும் உரங்களை பற்றி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், பயன்பெறும் வகையிலும் வல்லம் பஸ்ஸ்டாண்டில் பேரூராட்சி மூலம் இயற்கை உரம், மண்புழு உரம் மற்றும் மரக்கன்றுகள் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த விற்பனை மையத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவைத் தந்து இயற்கை விவசாயத்தை ஊக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் பிரகந்தநாயகி, துணை தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • திருச்சி அருகே காட்டுப்புத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் வாழை கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் எந்திரத்தின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது
    • அன்றாடம் சேகரமாகும் வாழை மரங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி விரைவில் மக்க வைத்து அதனை உரமாக்கி விவசாயிகள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட உள்ளது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் இருந்து அன்றாடம் 3.5 டன் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் மக்கும் குப்பைகளை வகைப்படுத்தி அதை உரமாக்கி விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கா குப்பைகளின் பயன்பாடுகளின்படி அதுவும் விற்பனை செய்யப்படுகிறது.

    காட்டுப் புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் அதிகப்படியான விவசாய நிலங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாழை கழிவுகளான வாழைத்தார் பகுதி, இலைகளின் அதிகமாக கழிவுகளாக காட்டுப்புத்தூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அன்றாடம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    வாழை இலை கழிவுகள் மக்குவதற்கு சுமார் ஆறு மாத காலம் ஆகின்றது. இதனால் வளம்மீட்பு பூங்காவில் இட பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவைகளை இயற்கையில் உரத்துடன் தயாரிப்பு பணிக்கான தேவையான கிரஷர் மெஷின் ரோட்டேரியன் மேஜர் டோனர் டாக்டர்.கே.சீனிவாசன் நிதியின் மூலமாக காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த கிரஷர் மெஷின் பயன்பாடுகள் குறித்து காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது, பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா சுரேஷ், துணைத்தலைவர் சுதாசிவ செல்வராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜீவஜோதி, பானுமதி, பழனிவேல், மாலதி, சந்திரகலா, அன்னபூரணி,

    காயத்ரி, கருணாகரன், மணிவேல், ராணி, விஜயா, இளஞ்சியம், ராஜ்குமார் மற்றும் பேரூராட்சியின் இளநிலை உதவியாளர்கள் ராஜேந்திரன் பாரதியார் சித்ரா மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இக்கருவியின் செயல்பாடுகளை பயன்படுத்தும் முறைகளைப் பற்றி செயல் அலுவலர் விரிவாக எடுத்துரைத்தார்.

    இதனால் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் அன்றாடம் சேகரமாகும் வாழை மரங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி விரைவில் மக்க வைத்து அதனை உரமாக்கி விவசாயிகளுக்கு பயன்பாட்டுக்கான விற்பனைக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    • தினசரி 12 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது
    • ஒரு கிலோ உரம் 1 ரூபாய்க்கு வழங்க பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

    அவிநாசி :

    அவிநாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் இருந்து தினசரி 12 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது.கைகாட்டிப்புதூர் பகுதியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் அவை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.சில மாதங்களாக தொய்வுற்றிருந்த இப்பணி தற்போது வேகமெடுத்துள்ளது.

    ஒரு கிலோ சலித்தெடுத்த உரம், 5 ரூபாய்க்கும், சலித்தெடுக்காத உரம் கிலோ ஒரு ரூபாய்க்கும் வழங்க பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இங்கு கொட்டப்படும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்தும் பணியை காண்டிராக்டர் பாதியில் கைவிட்டதால் மறுடெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் துவங்கி இங்கு குவிந்துள்ள மக்காத குப்பைகள் முற்றிலும் அகற்றப்படும் பட்சத்தில் வளம் மீட்பு பூங்கா, விரைவில் நலம் பெறும்.அதேநேரம் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை வீடுகளில் இருந்தே துவங்க வேண் டும் என்ற நோக்கில் பேரூராட்சி சார்பில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்ற பேரூராட்சியின் அறிவிப்பு வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது. மக்கள் பின்பற்றுவதில்லை. இந்த அறிவிப்பும் அமலுக்கு வந்தால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திடம் பெறும் என்கின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.

    சங்கராபுரத்தில் பேரூராட்சி மன்றம் சார்பில் இயற்கை உரம் தயாரிக்கும் பணி மாணவர்கள் பார்வையிட்டு அதன் முக்கியத்துவத்தை கண்டறிந்தார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி மன்றம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலமாக இயற்கை உரம் தயாரிக்கும் இடத்தினை சங்கராபுரம் வள்ளலார் பள்ளி மாணவர்கள் நேரில் களஆய்வு மேற்கொண்டு அதன் முக்கியத்துவத்தை கண்டறிந்தார்கள். பள்ளித் தாளாளர் இராம.முத்துகருப்பன் தலைமையில் வள்ளலார் பள்ளி மாணவர்கள் நேரில் சென்று சங்கரா புரம் நகரில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு பிளாஸ்டிக் தனியாக்கப்படுகிறது.

    காய்கறிக் கழிவுகள், புஷ்பங்கள், முட்டைஓடுகள், டீத்தூள் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு சம அளவில் அவைகள் கலக்கப்பட்டு சாணம், தண்ணீர் ஆகியவை சேர்க்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படும் விபரத்தினை பார்த்தார்கள். இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் துரைதாகப்பிள்ளை மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • வளம் மீட்பு பூங்காவில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் வாரியாக பிரித்தல், உரம் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்ற பணிகள் பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
    • இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரூராட்சி செயல் அலுவலர் உஷா தலையில் நடைபெற்றது.

    சுவாமிமலை:

    முதல்-அமைச்சர் ஆணையின்படியும், மாவட்ட கலெக்டர் உத்திரவின்படியும், பேரூரா–ட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரைகளின்படியும் பொது சுகாதாரத்தினை பேணிக்காத்து தூய்மையாக பராமரிக்க சுவாமிமலை பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்காவிற்கு சுவாமிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் ஒழித்தல், பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துதல், இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரூராட்சி செயல் அலுவலர் உஷா தலையில நடைபெற்றது.

    இதில் தீவிர தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வார்டு 3 லிங்கடித் தெரு, வார்டு 4 ஆதிதிராவிடர் தெரு, வார்டு 15 யாதவர் தெருக்களில் திடக்கழிவு மேலாண்மை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரித்தல், உரம் தயாரித்தல் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    வளம் மீட்பு பூங்காவில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் வாரியாக பிரித்தல், உரம் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்ற பணிகள் பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அரசினர் மேல்நிலைப்பள்ளி, தெற்கு வடம்போக்கித் தெரு, முடுக்குத் தெரு ஆகிய தெருக்களில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர்வை ஜெயந்தி, துணைத் தலைவர் சங்கர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×