என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Normal life affected"
- நேற்று காலை முதல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நனைந்தவாறே சென்றனர்.
- பலத்த காற்று காரணமாக கூக்கால் கிராமத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் விவசாய தோட்டங்களில் மின் கம்பங்கள் விழுந்ததில் பயிர்கள் சேதமடைந்தது.
கொடைக்கானல்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை முதல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாரல் மழையில் நனைந்தவாறே சென்றனர். மேலும் அலுவலர்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
பலத்த காற்று காரணமாக கூக்கால் கிராமத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் விவசாய தோட்டங்களில் மின் கம்பங்கள் விழுந்ததில் பயிர்கள் சேதமடைந்தது. மின் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதால் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கூக்கால், கும்பூர், கிளாவரை, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் இருளிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் மிரட்டப்படுவதாகவும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்கள் மூலம் தகவல் பரவி வருகிறது.
குறிப்பாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் தங்கி படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் உடனடியாக தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு உரிமையாளர்களால் மிரட்டப்படுவதாக செய்திகள் வெளியாகின.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் மற்ற பகுதிகளில் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிக அக்கறைகாட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா நேற்று மாலை டெல்லி வந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். பிற மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகளின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக ராஜ்நாத் சிங்குடன் உமர் அப்துல்லா சுமார் 30 நிமிடங்கள் ஆலோசித்தார்.
இதற்கிடையில், வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகளின் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று பிற்பகலில் இருந்து கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த போராட்டத்துக்கு காஷ்மீர் பொருளாதார கூட்டமைப்பு சங்கம், காஷ்மீர் வியாபாரிகள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் சந்தையில் இன்று இருவர் கூட கடை வைக்கவில்லை. இதேபோல் அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடைகள் திறக்கப்படாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநகரில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, புல்வாமா தாக்குதல் எதிரொலியாக காஷ்மீரில் இரு பிரிவினருக்கு இடையில் மோதல்கள் வெடிக்காமல் இருப்பதற்காக அம்மாநிலத்தின் சில பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்னும் அமலில் இருப்பதால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Pulwamaattack #Normallifeaffected #Kashmirbandh
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்