search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North State Youth Arrested"

    • போலீசார் அவினாசியை அடுத்து தேவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அவரிடமிருந்து 380 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவினாசி:

    அவினாசி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அவினாசியை அடுத்து தேவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிஜை பாஸ்வன் (வயது 28) என்பதும் அவர் தற்போது பச்சாம்பாளையத்தில் தங்கி தேவம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 380 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களை மத்திய சிறையில் அடைத்தனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம், அம்மாப்பேட்டை, மாரி உடையன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவர் நேற்று பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். புதிய பஸ் நிலையம் நுழைவு வாயிலில் பஸ் வந்தபோது, சீனிவாசன் சட்டைப்பையில் இருந்த பணத்தை 2 பேர் நைசாக திருடியதாக தெரிகிறது. பயணிகள், இவர்கள் இருவரையும் பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அவர்கள் உத்தரபிரதேச மாநிலம் சாம்பளி மாவட்டம் தனகுடோரா பகுதியை சேர்ந்த அர்ஜூன் அமர் குமார் வர்மா (30), பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் (30) ஆகியோர் என்பதும், இவர்கள் மீது திருட்டு, வழிப்பறி என 11 வழக்குகள் உள்ளன என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கள்ள நோட்டுடன் வட மாநில வாலிபர்கள் சிக்கிய சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க வியாபாரிகள் மறுத்து வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளுவரை அடுத்த செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மளிகை கடை நடத்தி வருபவர் பத்மநாபன். நேற்று மாலை அவரது கடைக்கு சோப்பு வாங்க 2 வட மாநில வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் 2 ஆயிரம் நோட்டை கொடுத்து பொருட்கள் வாங்கினர். கடையில் சில்லரை இல்லாததால் அருகில் உள்ள பால் கடைக்கு சென்று மாற்றி, மீதி பணத்தை வட மாநில வாலிபர்களிடம் பத்மநாபன் கொடுத்தார்.

    சிறிது நேரத்தில் அந்த பால் கடை உரிமையாளரிடம் பணத்தை பெறுவதற்காக மொத்த விற்பனையாளர் ஒருவர் வந்தார். அவர் பணம் பெற்ற போது ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு என்று தெரிந்தது.

    இது பற்றி வியாபாரி பத்மநாபனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு சென்று வடமாநில வாலிபர்கள் குறித்து விசாரித்தார்.

    அப்போது அங்கு நின்ற கள்ள நோட்டு கொடுத்த 2 வட மாநில வாலிபர்களை பிடித்து செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சர்பி ஆலம் (23), சபீர் (21) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் மொத்தம் 13 கைப்பற்றப்பட்டது.

    அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, “கடந்த 3 நாட்களுக்கு முன்பு பீகாரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தோம். சென்னையில் ஏதோ வேலை இருப்பதாக சொல்லி ஒருவர் வரச் சொன்னார். சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த போது கள்ள நோட்டுகளை கொடுத்து அதனை மாற்றச் சொன்னார்.

    பணத்தை மீண்டும் இதே இடத்திற்கு வந்து தருமாறு கூறினார். பணம் கொடுத்தவர் யார்? அவரைப்பற்றி எந்த விவரமும் தெரியாது” என்று கூறி உள்ளனர்.

    வேலை வழங்குவதாக வட மாநில வாலிபர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களை கள்ள நோட்டுகளை மாற்ற மர்ம கும்பல் பயன்படுத்தி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கள்ள நோட்டு கும்பல் பல குழுக்களாக பிரிந்து பணத்தை மாற்ற கொடுத்து இருக்கிறார்கள். இதனால் முக்கிய குற்றவாளி யார்? என்பது தெரியாமல் போலீசர் குழம்பி உள்ளனர்.

    கைதான வடமாநில வாலிபர்கள் இருவரும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பணத்தை கொடுத்தது சந்தோஷ் என்ற பெயரை தெரிவித்து இருக்கிறார்கள். அவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையை மையமாக கொண்டு செயல்படும் கள்ள நோட்டு கும்பல் புறநகர் பகுதி மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணத்தை மாற்ற குழுக்களாக வட மாநில வாலிபர்களை அனுப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கள்ள நோட்டுடன் வட மாநில வாலிபர்கள் சிக்கிய சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க வியாபாரிகள் மறுத்து வருகின்றனர்.
    ×