என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Not Interested"
- வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.
- கோரிக்கை நிறைவேறும் வரை நடைபெறும்
பெரம்பலூர்
பெரம்பலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யும் அனைத்து மனுக்களும், வழக்கு ஆவணங்களும் ஆன்லைனில் இ-பைலிங் தாக்கல் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது உடனடியாக செயல்பாட்டுக்கு வருவது மிக கடினமாக இருப்பதால் வக்கீல்களின் நலன் கருதியும், நீதிமன்ற பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காகவும் இ-பைலிங் உடனடியாக கட்டாயப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திட வேண்டும் என்றும், இ-பைலிங் தாக்கல் முறையை தற்காலிகமாக நிறுத்தும் வரை பெரம்பலூர் பார் அசோசியேஷன் (குற்றவியல்) தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையிலும் வக்கீல்களும், பெரம்பலூர் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் மணிவண்ணன் தலைமையிலும் வக்கீல்களும் நேற்று முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் பணிகளை புறக்கணிக்க தொடங்கினர். இதனால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கோரிக்கை நிறைவேறும் வரை 2 அசோசியேஷனை சேர்ந்த வக்கீல்கள் தொடர்ந்து கோர்ட்டு பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
- குடியிருக்கும் பகுதியில் வாக்களிக்க ஆர்வம் காட்டாத மக்களை மாநகராட்சி புறக்கணித்துள்ளது
- அனைவரும் கைவிட்டு விட்டதாக குடியிருப்பு வாசிகள் புலம்பல்
திருச்சி:
திருச்சி மாநகராட்சி பகுதியில் மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் உள்ளது. இங்கு 70-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெரு பகுதி மாநகராட்சியின் பழைய 35-வது வார்டில் இருந்தது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறு மறு வரையறை செய்யப்பட்டபோது புதிய 47-வது வார்டுடன் சேர்க்கப்பட்டது.
இந்த மொராய்ஸ் கார்டன் ரன்வே நகரில் 2019 ஆம் ஆண்டுகளில் 5 குடியிருப்புகள் மட்டுமே இருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் தற்போது இந்த குடியிருப்பு வாசிகள் சாலை, தெரு விளக்கு, பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாமல் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது 47-வது வார்டு வாக்காளர் பட்டியலில் மேற்கண்ட குடியிருப்பு வாசிகள் இடம்பெறவில்லை. வெளியூர்களில் வாக்குகள் இருந்தவர்கள் வெளியூருக்கு சென்று வாக்களித்தனர். மாநகராட்சியின் இதர பகுதிகளில் வாக்குகள் இருந்த குடியிருப்பு வாசிகள் அங்கு சென்று வாக்களித்தனர்.
இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் தங்களை கைவிட்டு விட்டதாக குடியிருப்பு வாசிகள் புலம்புகிறார்கள். மேற்கண்ட பகுதியில் குடியிருக்கும் ஒருவர் நம்மிடம் கூறும் போது, நாங்கள் வீடுகளுக்கு வீட்டு வரி செலுத்தி வருகிறோம். அந்த ரசீதில் பழைய 35-வது வார்டு என இடம்பெற்றுள்ளது. தற்போது 47-வது வார்டில் எங்கள் பகுதி இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் குடிநீர் இணைப்பு கேட்டால் உங்கள் தெரு 47-வது வார்டில் இணைக்கப்படவில்லை என சொல்கிறார்கள். அதே போன்று பழைய 35-வது வார்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசின் உதவிகளுக்காக பிங்க் நம்பர் வழங்கப்படுகிறது. ஆனால் மொராய்ஸ் கார்டன் ரன்வே நகரில் உள்ள கர்ப்பிணி பெண்கள் சென்றால் ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
அங்கு சென்றால் அவர்களும் நம்பர் வழங்காமல் வேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறார்கள். எங்கள் தெருவில் பக்கத்து தெரு வரை பாதாள சாக்கடை திட்ட பணிகள் வந்துவிட்டது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளது. எங்களுக்கு மட்டும் இதுவரை அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகிறது.
தற்போது நாங்கள் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திருக்கின்றோம். எனவே மாநகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு தெரு விளக்கு, சாலை, பாதாள சாக்கடை குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை ரன்வே நகர் மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உள்ளாட்சி தேர்தலின் போது குடியிருக்கும் பகுதியில் வாக்களிக்க ஆர்வம் காட்டாத காரணத்தினால் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சிவசேனா கட்சி எம்.பி.யும், அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கோ, உத்தரபிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசுக்கோ எந்த ஆர்வமும் இல்லை. அதற்கான அறிகுறியும் அவர்களிடம் தென்படவில்லை. எனவேதான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை மோடி அரசு தாமதப்படுத்தி வருகிறது.
முத்தலாக் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டுவர முடியும் என்கிறபோது, அதே வழியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உள்ள தடைகளை நீக்குவதற்கு ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசால் ஏன் பிறப்பிக்க முடியாது?
அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதை நாங்கள் ஒருபோதும் தேர்தல் பிரசாரமாக வைக்கவில்லை. ஆனால் அதை முன்னிறுத்தி பிரசாரம் செய்தவர்களிடம் கோவில் கட்டும் எண்ணம் இல்லை. 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பெரிதும் உதவியது. எனவே அவசர சட்டம் பிறப்பிக்க தவறினால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆர்.எஸ்.எஸ். கவிழ்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ShivSena #SanjayRaut #RamTemple
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்