search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old Man Sacrifice"

    • யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    • கிருஷ்ணனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் ஏரியில் ஒற்றை காட்டுயானை நேற்று காலை தண்ணீர் தேடி வந்தது.

    அப்போது அந்த யானை ஏரியில் உள்ள நீரில் குளியல் போட்டு கும்மாளம் போடுவதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன்பேரில் வனத்து றையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஏரியில் குளியல் போட்ட காட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்து றையினர் அறிவு றுத்தியுள்ளனர்.

    இருந்த போதிலும் நேற்று இரவு தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (70) என்பவர் அவருடைய விவசாய நிலத்தில் இருந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த காட்டு யானை கிருஷ்ணனை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ணனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைதொடர்ந்து காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் பாலக்கோடு வனத்து றையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    சமீப காலமாக பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

    தற்போது, கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிக ரித்ததால் வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிக்குள் புகுந்து, ஏரியில் யானை முகாமிட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அவ்வாறு வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கர்னூர் பகுதியில் மீண்டும் 3 யானைகள் முகாமிட்டுள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.இந்த சம்பவம் பாலக்கோடு சுற்றுவட்டார பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

    • ராஜா (62) கூலி தொழிலாளியான. இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் ஹனி மேடு சென்று கொண்டிருந்தார்.
    • தனக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு மயக்க ம் அடைந்தார்.

    சேலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள கோட்டைமேடு. எருமக்காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் ராஜா (62) கூலி தொழிலாளியான. இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் ஹனி மேடு சென்று கொண்டிருந்தபோது, தனக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு மயக்க ம் அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜாவின் மகன் மணி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தனக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு மயக்க ம் அடைந்தார்.

    • குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
    • சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் அர்ச்சு ணன்.

    கள்ளகுறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் அர்ச்சு ணன் (வயது 75). அதே பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. குடிநீர் வீணாகி செல்வதால் மி்ன்மோட்டரை நிறுத்த அங்கிருந்து சுவிட்ச்சை அணைக்க அர்ச்சுணன் முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய மணி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • சந்திரசேகர் (55) இவர் நேற்று இரும்பாலை ரோடு காவடி பழனியாண்டவர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    சேலம் நரசோதிப்பட்டி உதயபுரி காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (55) இவர் நேற்று இரும்பாலை ரோடு காவடி பழனியாண்டவர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கீழே விழுந்த சந்திரசேகரன் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சூரமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரசேகரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரசேகரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மீது மோதி சென்ற மோட்டார் சைக்கிள் எது என்பது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரி நடந்து செல்லும் போது எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மாரி மீது மோதியது.
    • டிராக்டர் சக்கரம் தலையின் மேல் ஏறியதில்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே கரும்புடிராக்டர்மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி(70) விவசாயி.இவர் நேற்று இரவு ஒரத்தூர் மெயின் ரோட்டில் நடந்து செல்லும் போது எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மாரி மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர்மீது டிராக்டர் சக்கரம் தலையின் மேல் ஏறியதில்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் பலியான மாரி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .

    • முருக கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 70). இவர் வசந்தபுரத்தில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
    • திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த கார், ராஜூ மீது மோதியது. இதில் அவர் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மேல்சாத்தம்பூர் அருகே முருக கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 70). இவர் வசந்தபுரத்தில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    திருச்செங்கோடு - பரமத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த கார், ராஜூ மீது மோதியது. இதில் அவர் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    சிகிச்சை

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜூ உயிரி ழந்தார்.

    கார் பறிமுதல்

    இதுகுறித்து ராஜூவின் மனைவி சிவகாமி நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய குமா ரபாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து, குமரேசனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி யுள்ளார்.
    • 8 மணி நேர தேடுதல் போராட்டத்திற்கு பிறகு முதியவரின் உடல் மீட்கப்பட்டது.

    விழுப்புரம்:

    பிரம்மதேசம் காளி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 70). இவர் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துவிட்டு, துணி துவைத்துக் கொண்டி ருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி யுள்ளார். இது குறித்து அருகில் இருந்த பொது மக்கள் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரி வித்ததின்பேரில், திண்டி வனம் மற்றும் மரக்காணம் தீயணைப்பு துறையினர் கிணற்றில் முதியவரை தேடும் பணியில் ஈடுபட்ட னர்.

    பல மணி நேரம் தேடியும் உடல் கிடைக்காததால், 2 ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை வெளி யேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடு பட்டனர். இதனையடுத்து 8 மணி நேர தேடுதல் போராட்டத்திற்கு பிறகு முதியவரின் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரி சோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர், துணி துவைக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருநாவலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.
    • கிணற்றில் சுப்பிரமணி பிணமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுக்கா அருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர்சுப்பிரமணி (வயது 60). விவசாயி. இவர் சில தினங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் ஊர் அருகே உள்ள மாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து விட்டார். அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காலையில் விவசாய நிலத்துக்கு சென்றபோது கிணற்றில் சுப்பிரமணி பிணமாக மிதப்ப தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த னர்.

    தகவலின் பெயரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணி மேகலை, பிரபாகரன், தனிபிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு துறை நிலை அதிகாரி சுரேஷ்பாபு தலைமையில் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×