search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old students"

    • மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பள்ளி தாளாளர் பிச்சை தலைமை தாங்கினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. பள்ளி தாளாளர் பிச்சை தலைமை தாங்கினார். விரிவுரையாளர் மரியதாஸ் வரவேற்றார். 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் படித்தவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். தலைமையாசிரியர் செல்வின் ஆசிர்வாதம், சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையார் விடுதி காப்பாளர் ராஜா, கூட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் காவேரி உள்ளிட்ட பலர் பேசினர். சி.எஸ்.ஐ. ஆலய சபைகுரு ஞான ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். இம்மானுவேல் நன்றி கூறினார்.

    • காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • அவர்கள் தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் கடந்த 1993 முதல் 1996 வரை தாவரவியல் துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.தாவரவியல் துறை தலைவர் முனைவர் கோமளவள்ளி தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர்கள் பழனிச்சாமி மற்றும் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். 25 ஆண்டுகளுக்கு பின்னர் மாணவ-மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் சந்தித்து மகிழ்ந்தனர். குவைத், சிங்கப்பூர், கத்தார், துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்த மாணவர்கள் தங்கள் கல்லூரி காலத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும், தங்கள் பேராசிரியர்களைப் பற்றியும், பசுமை நிறைந்த நினைவுகளையும் ெதரிவித்தனர்.

    துறை தலைவர் மற்றும் அதே துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் பழனிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் அனைவரும் வள்ளல் அழகப்பர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் வரும் காலங்களில் தாவரவியல் துறைக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் வீரபாண்டியன், ஐங்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வாசுதேவநல்லூர் அரசு பள்ளியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அனைவரும் தங்களது பள்ளிப்பருவ மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1989 - 1990 -ஆம் ஆண்டு பிளஸ் 2 கலைப்பிரிவு பயின்ற மாணவ மாணவிகள் 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு அப்போதைய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாண்டி தலைமை தாங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் அருண் மற்றும் பன்னீர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினர். தற்போதைய அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயசீலன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    மாணவர்கள் அனைவரும் தங்களது பள்ளிப்பருவ மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    பெரும்பாலனோர் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளிக்குத் தேவையான 2 பேட்டரிகள் முன்னாள் மாணவர்கள் சார்பில், தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை சங்கரசுப்பிரமணியன், முத்துராஜ், வழக்கறிஞர் செந்தில், சாகுல் ஹமீது, இசக்கிராஜா, பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    வேதாரண்யத்தில் 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். பின்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கத்தரிபுலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1973-ம் ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 45 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் படித்த மாணவர்களும் அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    விழாவில் இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்று பல்வேறு ஊர்களில் வாழ்ந்துவரும் ஆசிரியர்கள் ஆதிநெடுஞ்செழியன், நாகராஜன், ரசல், ராஜ்குமார், ராமநாதன், வீரப்பத்திரன், வடிவேல், சுந்தரேசன், ராமசந்திரன், கணேசன், ராமலிங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். பின்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

    கொல்கத்தா, சென்னை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேதாரண்யம் பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கத்தரிப்புலம் கிராமத்தில் பிறந்து இப்பள்ளியில் படித்த தமிழரசன் கொல்கத்தாவில் அரசு பணியில் உள்ளார். அவர் வாட்ஸ்-அப்பில் இந்த சந்திப்பு விழா அழைப்பை பார்த்து கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கு உள்ள தனது குடும்பத்தாரையும் அழைத்து கொண்டு வந்து விழாவில் கலந்து கொண்டார்.

    விழா ஏற்பாடுகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சாம்பசிவம், சிவகடாட்சம், தருமையன், இளவழகன், சாமியப்பன், ஜெகநாதன், சரவணன், வீரமணி, ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் கூறும்போது, 45 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுடன் படித்தவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் ஆசிரியர்களை சந்தித்து ஆசி வாங்கியதை பெருமையாக நினைக்கிறோம். நாங்கள் படித்த பள்ளியை மேம்படுத்தவும், இப்பகுதி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஜ.ஏ.எஸ் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த உள்ளோம் என்றனர்.

    ×