என் மலர்
நீங்கள் தேடியது "Old woman dies of"
- ஈஸ்வரி தனது மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறியுள்ளார்.
- சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூரை அடுத்துள்ள கரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி (73). இவர் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது. இதையடுத்து அந்தப் பாம்பை அடித்து கொன்று தன்னுடன் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த ஈஸ்வரி தனது மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து ஈஸ்வரியை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- புல்லில் மறைந்திருந்த பாம்பு ஒன்று சென்னியம்மாளை கடித்து விட்டது.
- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கம்பூளியாம்பட்டி பாலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சென்னியம்மாள் (58). தனது மகன், மருமகளுடன் வசித்து வருகிறார்.
சென்னியம்மாள் கால்நடைகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு கால்நடைகளுக்கு புல் எடுப்பதற்காக அருகில் உள்ள காலி இடத்திற்கு சென்று புல்லை எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது புல்லில் மறைந்திருந்த பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக சென்னியம்மாளை கடித்து விட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.






