search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "On the bridge"

    • கடந்த 1957-ம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.
    • இந்நிலையில் பழைய பாலத்தில் நெடுகிலும் சுமார் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய குழிகள் பாலத்தின் குறைக்கே ஏற்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டத்தையும், கரூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில், கடந்த 1957-ம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள், லாரி கள், கார்கள், இருசக்கர வாக னங்கள் என ஏராளமான வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகின்றன.

    இந்நிலையில் இந்த பாலம் கட்டப்பட்டு 66 ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் பழைய பாலத்தில் நெடுகிலும் சுமார் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய குழிகள் பாலத்தின் குறைக்கே ஏற்பட்டுள்ளது.

    இதனால் வாகனங்கள் தொடர்ந்து தடுமாறி செல்கின்றன. இரவு நேரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் குழிகள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

    இந்த பழைய பாலத்தின் வழியாக சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் நெடுகிலும் ஏற்பட்டுள்ள குழிகளை சீரமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் டார்ச்சர் பாலத்தில் இருந்து மனைவி குதித்து தற்கொலை.
    • சென்னை–யிலிருந்து மரியா உடல் இன்று காலை சேலத்திற்கு கொண்டுவரப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் லூசியா. இவரது மகள் மரியா. சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும், புதுச்சேரியை சேர்ந்த சூசைராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் ஜப்பானில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி டோக்கியோவில் உள்ள பாலத்தில் இருந்து மனைவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சூசைராஜ், மனைவியின் பெற்றோருக்கு தெரிவித்தார்.

    ரூ.2 கோடிக்கு காப்பீட்டு

    இதையடுத்து அவரது உடல் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே மரியாவின் தாய் அனுசியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார் . அதில், எனது மகளை வரதட்சனை கேட்டு சூசைராஜ் கொடுமைப்படுத்தினார். கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் சூசைராஜி, வேலை கிடைத்தது.

    அங்கு செல்லும் முன் எனது மகள் பெயரில் 2 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளார். என் மகள் இறந்து விட்டதாக இம்மாதம் 3-ம் தேதி தெரிவித்தார் இயற்கையான முறையில் அவர் இறக்கவில்லை. ஆகவே எனது மகள் சாவில் மர்மம் உள்ளதால் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தி என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என சேலம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார்.

    போலீஸ் பாதுகாப்பு

    இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. மரியாவின் கணவர் சூசைராஜ் நேரில் ஆஜராக நீதிபதி உத்திரவிட்டார். அதன்படி அவர் நேற்று ஆஜராகி மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த தனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி அப்துல் குத்தூஸ் சேலம் அரசு மருத்துவமனையில் மரியா உடல் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும். டாக்டர்கள் குழுவை சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் நியமித்து பிரேத பரிசோதனை மேற்கொண்டு போலீசருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன் நகலை மனுதாரருக்கும், சூசைராஜுக்கும் வழங்க வேண்டும், கணவர் முன்னிலையில் இறுதி சடங்கிற்காக உடலை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் கணவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    நடவடிக்கை

    இதையடுத்து சென்னை–யிலிருந்து மரியா உடல் இன்று காலை சேலத்திற்கு கொண்டுவரப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி, அதன் அறிக்கையின் அடிப்படையில் இன்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ×