search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "One Arrested"

    • 250 கிலோ எடையுள்ள அலுமினிய மின் காயில் காணாமல் போனது.
    • முருகன் என்பவர் திருடியதாக தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை தோப்பிருப்பு துணை மின் நிலையத்தில் கடந்த 7-ந் தேதி 250 கிலோ எடையுள்ள அலுமினிய மின் காயில் காணாமல் போனது. காணாமல் போன அலுமினிய காயில் ஒயரை மின்துறை ஊழியர்கள் தேடிவந்தனர். அப்பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது தொடர்பாக தோப்பிருப்பு துணை மின் நிலைய இளநிலை மின் பொறியாளர் ரவி (வயது 56) பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இது தொடர்பாக போலலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில் குட்டியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் திருடியதாக தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் முருகன் அளித்த தகவலின்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து, கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தென்சிறுவலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையன் என்பவரது மகன் சூர்யா (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பால் அதிபரிடம் ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை கைது செய்த போலீசார் தலைமறைவான மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். #MoneyRobbery
    சென்னை:

    ஈரோட்டை சேர்ந்த மோகன சுந்தரம் என்பவர் அமிர்தா பால் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு கும்பல் ரூ.50 கோடி கடன் வாங்கி தருவதாக கூறியது. சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த 16-ந்தேதி கடன் தருவதாக அழைத்து வரப்பட்டு அவரிடம் இருந்த ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக அவர் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இந்த வழக்கில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். விசாரணையில் தொழில் அதிபருக்கு கடன் வாங்கித் தருவதாக அவரது கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்தது 5 பேர் என தெரியவந்தது.

    இந்த வழக்கில் திருத்தணியை சேர்ந்த ஜெயக்குமார், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ரசூல்கான் ஆகிய இருவரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சமும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த கோபி என்பவரை நேற்றிரவு கைது செய்தனர். தலைமறைவான மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #MoneyRobbery

    புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 6,034 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்: 

    புதுச்சேரியில் இருந்து ஒரு காரில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையிலான போலீசார் நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர்கேட் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே ஆண்டகளூர்கேட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற கார் ஒன்று குமாரமங்கலம் பிரிவு சாலை அருகே திடீரென சாலையோரம் நிறுத்தப்பட்டது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை பரிசோதனை செய்தனர். அப்போது அதில் 6,034 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த மதுபாட்டில்களை, காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் பறிமுதல் செய்வதை அறிந்த கார் டிரைவர் ராஜசேகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த மதுபாட்டில்களை திருச்செங்கோட்டை சேர்ந்த ஜெகதீசன் (வயது 40) என்பவர் வாங்கி வந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீசனை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை கீழே கொட்டி அழித்தனர்.
    மீன் விற்று கல்லூரியில் படிக்கும் கேரள மாணவிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சித்தவர் கைது செய்யப்பட்டார். #KeralaGirl #Hanan #FishSelling
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், தொடுப்புழா என்ற இடத்தில் உள்ள அல் அசார் கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருபவர் மாணவி ஹனன் (வயது 19).

    இவர், குடிகார தந்தை குடும்பத்தை கைவிட்டுச்சென்ற நிலையில், தாயாருக்கு மனநிலை சரியில்லை என்ற சூழலில், தினமும் சந்தைக்கு சென்று மீன் வாங்கி வந்து விற்று, அதைக் கொண்டு தன்னையும், தாயாரையும், சகோதரரையும் காத்துக்கொண்டு படித்து வருவதாக தெரிகிறது. பகுதி நேர வேலை போல மலையாள படங்களில் சின்னச்சின்ன பாத்திரங்களில் நடித்தும் உள்ளார்.



    இவருடைய ஆசை, எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவர் ஆவதுதான்.

    மாணவி ஹனனைப் பற்றி பிரபல பத்திரிகை ஒன்றில் சிறப்புக்கட்டுரை வெளியானது. இது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது.

    அதைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் நடிக்க உள்ள படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்து உள்ளது. இந்த வாய்ப்பை டைரக்டர் அருண் கோபி வழங்கி உள்ளார். மேலும் பல அரசியல் பிரபலங்களும், பட உலகினரும் அவருக்கு உதவ முன் வந்தனர்.

    இது குறித்து அறிந்தவர்கள், சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டனர். ஒரு தரப்பினர், ஹனனைப் பாராட்டினர்.



    இன்னொரு தரப்பினரோ மாணவி ஹனனை கடுமையாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்தனர். குறிப்பாக “ஹனன் வசதியானவர், சினிமாவில் நடிப்பதற்காகத்தான் மீன் விற்பதாக நாடகம் ஆடுகிறார்” என்ற ரீதியில் கருத்துக்கள் வெளியானது. இது அந்த மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

    இது குறித்து ஹனன் பேட்டி அளிக்கையில், “நான் பொய் பேசுவதாக சொல்கிறார்கள். இது தவறு. நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள்தான். வாழ்க்கை நடத்துவதற்கு போராடி வருகிறேன். 7 வயதிலேயே எனக்கு கஷ்டங்கள் ஆரம்பித்து விட்டது. எல்லா பகுதி நேர வேலைகளும் செய்து இருக்கிறேன்” என உருக்கமுடன் கூறினார்.

    இதை அந்த மாணவி படித்து வரும் கல்லூரி நிர்வாகமும் உறுதி செய்தது.

    இதே போன்று ஹனனுக்கு பட வாய்ப்பு தந்து உள்ள டைரக்டர் அருண் கோபி டி.வி. சேனல்களுக்கு அளித்த பேட்டியில், “ஹனனுக்கு எதிரான விமர்சனங்கள், அவரை அடித்துக்கொல்வதற்கு சமமானது. இந்த விமர்சனங்கள் அடிப்படை இல்லாதது” என கூறினார்.

    ஹனனுக்கு எதிரான விமர்சனங்களுக்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

    ஹனனை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார். அது மட்டுமின்றி அந்த மாணவி மீன் விற்கும் படத்தை தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ளார்.

    அதைத் தொடர்ந்து அந்த மாணவியை தரக்குறைவாக விமர்சித்த வயநாடு பகுதியை சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  #KeralaGirl #Hanan #FishSelling
    ×