search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paul Stirling"

    • பால்பிரைன் 45 ரன்களும், பால் ஸ்டிர்லிங் 88 ரன்களும் விளாசினார். ஹாரி டெக்டர் 48 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார்.
    • தென்ஆப்பிரிக்காவின் ஜேசன் ஸ்மித் 91 ரன்கள் அடித்து போராடியது வீண் ஆனது.

    தென்ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முடிவடைந்த முதல் இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது.

    இந்த நிலையில் அபுதாபியில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 284 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பால்பிரைன் 45 ரன்களும், பால் ஸ்டிர்லிங் 88 ரன்களும் விளாசினார். ஹாரி டெக்டர் 48 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் லிசாட் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. முதல் மூன்று வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். ரியான் ரிக்கெல்டன் 4 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 1 ரன்னிலும், வான் டெர் டுஸ்சன் 3 ரன்னிலும் வெளியேறினார்.

    பால் ஸ்டிர்லிங்

    அதன்பின் தென்ஆப்பிரிக்கா அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. ஜேசன் ஸ்மித் மட்டும் தாக்குப்பிடித்து விளைாடினார். அவர் 93 பந்தில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா 46.1 ஓவரில் 215 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் அயர்லாந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அயர்லாந்து பந்து வீச்சாளர்கள் கிரஹாம் ஹும், கிரேக் யங் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 88 ரன்கள் அடித்த பால் ஸ்டிர்லிங் ஆட்ட நாயகன் விருது வென்றார். தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் வில்லியம்ஸ் தொடர் நாயகன் விருது வென்றார்.

    இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. மொத்தமாக ஐந்து போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஸ்டிர்லிங் படைத்தார்.
    • இவருக்கு அடுத்த இடத்தில் பாபர் அசாம் 395 பவுண்டரிகள் அடித்துள்ளார்.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

    இதில் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 பவுண்டரிகள் உட்பட 25 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் அடித்த 2 பவுண்டரிகள் சேர்த்து இதுவரை டி20 போட்டிகளில் அவர் அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கை 401 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.

    டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்களின் பட்டியல் வருமாறு:

    பால் ஸ்டிர்லிங் - 401 பவுண்டரிகள்

    பாபர் அசாம் - 395 பவுண்டரிகள்

    விராட் கோலி - 361 பவுண்டரிகள்

    ரோகித் சர்மா - 359 பவுண்டரிகள்

    டேவிட் வார்னர் - 320 பவுண்டரிகள்.

    ×