என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pechiparai"
- வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
- மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தச்சமலை, மாங்கமலை, முடவன்பொற்றை உட்பட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இந்த வாக்குசாவடி மையத்திற்கு மலைவாழ் மக்கள் வாக்களிக்க அணையில் படகு மூலம் வந்து வாக்களிப்பது வழக்கம்.
இதையடுத்து தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலிலும் மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர். தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து பேச்சிப்பாறையில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வந்ததுடன் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.35 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்றும் மழை நீடித்தது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.
அவ்வப்போது மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் இதமான குளிர்காற்று வீசியது. குமரி மேற்கு மாவட்ட பகுதியான தக்கலை, குலசேகரம், மார்த்தாண்டம், குழித்துறை பகுதிகளில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்தது. இரணியல், குளச்சல், மயிலாடி, கொட்டாரம், கன்னியாகுமரி பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 68.8 மல்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது.
இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை இன்றும் ஒரு அடி உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 9 அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாசன குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் கடைமடை பகுதியில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகும் அபாயத்தில் இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை விவசாயத்திற்கு கை கொடுக்கும் அளவில் உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.85 அடியாக இருந்தது. அணைக்கு 1007 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.35 அடியாக உள்ளது. அணைக்கு 552 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 68.8, பெருஞ்சாணி 19.2, சிற்றாறு 1-12.2, சிற்றார் 2-9.2, பூதப்பாண்டி 9.8, களியல் 10, கன்னிமார் 5.8, கொட்டாரம் 8.2, குழித்துறை 39, மயிலாடி 5.4, நாகர்கோவில் 8.2, புத்தன்அணை 17.6, சுருளோடு 33.6, தக்கலை 6.2, குளச்சல் 8.6, இரணியல் 23, பாலமோர் 37.2, மாம்பழத்துறையாறு 10, திற்பரப்பு 15.2, கோழிபோர்விளை 6.2, ஆனைகிடங்கு 7.2, அடையாமடை 8.1, முக்கடல் 6.2.
தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் நேற்று இரவும் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையினால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கு அதிகபட்சமாக 53.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
கன்னியாகுமரி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, இரணியல், முள்ளங்கினாவிளை, மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் நேற்று இரவு மழை பெய்தது.
நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.
திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டு, விட்டு பெய்து வரும் சாரல் மழையினால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்துவரும் மழையினால் அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 12.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 151 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75.20 அடியாக உள்ளது. அணைக்கு 1685 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 675 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்பி வருவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள். அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு உள்ள தண்ணீர் குழித்துறை ஆற்றில் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 14.14 அடியாக உள்ளது. பொய்கை அணை 15.60 அடியை எட்டியது. மாம்பழத்துறையாறு அணை கடந்த ஒரு வாரமாக முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் நூற்றுக்கு மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
அணையின் நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மலையோர பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நிரம்பி வருவதால் அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணையில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்படும். சிற்றாறு அணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-37.4, பெருஞ்சாணி-23.2, சிற்றாறு 1 - 36.2, சிற்றாறு 2 - 31, மாம்பழத்துறையாறு-20, கொட்டாரம்-3.4, மயிலாடி-7.2, பாலமோர் -53.4, ஆரல்வாய்மொழி-5.2, கன்னிமார்-24.6, சுருளோடு-15.2, நாகர்கோவில்-16.8, பூதப்பாண்டி-10.4, ஆனைக்கிடங்கு-20, அடையாமடை-28, முள்ளங்கினாவிளை-32, புத்தன்அணை-24.6
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்