search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pensioners protest"

    • ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளைத் தலைவர் பிலாவடியான் தலைமை தாங்கினார்.

    கருப்பையா புஷ்பம், சிவயோகம், ராம சீனிவாசன், காளீஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருப்பையா, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பூங்கொடி, ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் சி.ஐ.டி.யு. நகர கன்வீனர் வீர சதானந்தம் போன்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் சரசுவதி நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறை ஊழியர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • இன்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட கருப்பு அட்டை அணிந்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

    திண்டுக்கல்:

    பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஓய்வூதியர் சங்கங்களின் இணைப்புக்குழு அழைப்பின் பேரில் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் படி இன்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட கருப்பு அட்டை அணிந்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    15 சதவீத பென்சன், 1.1.2017ம் ஆண்டு முதல் வழங்கிட வேண்டும். பென்சன் மாற்றம், சம்பள மாற்றத்துடன் இணைப்பு செய்து கால தாமதத்தை தவிர்க்க வேண்டும். தொலைத்தொடர்பு துறையின் அதிகார தளத்தை களைந்திட வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கிளை துணைத் தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். மாநில துணைச்செயலாளர் ஜான்போர்ஜியா, கிளைச்செயலாளர் ஜோதிநாதன், பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைத்தலைவர் அய்யனார்சாமி, கிளைத்துணை ச்செயலாளர்கள் வைத்திலிங்க பூபதி, கிறிஸ்டோபர், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஜோசப்ராஜ் நன்றி கூறினார்.

    தலைமை தபால் நிலையம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    மத்திய-மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை வகித்தார். அஞ்சல்துறை சங்க தலைவர் முத்து, செயலாளர் கலியமூர்த்தி, தொலைதொடர்பு துறை சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில நிர்வாகி சக்திவேல், தமிழக போக்குவரத்துத்துறை சங்க செயலாளர் தமிழ்வாணன், சி.ஐ.டி.யூ. போக்குவரத்து ஊழியர் சங்க செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    தமிழக போக்குவரத்து துறை 2015 முதல் வழங்க வேண்டிய 78 மாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவக்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களின் குடும்பத்துக்கு குறைந்த பட்சம் ரூ.7 ஆயிரத்து 850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். 

    மாதந்தோறும் காலதாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதிய பண பலன்களை ஓய்வுபெற்றவுடன் உடனடி யாக வழங்க வேண்டும். நிலுவை ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அஞ்சல்துறை ஓய்வூதிய சங்க நிர்வாகி தியாகராஜன் நன்றி கூறினார்.
    ×