search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyakaruppan"

    • கூட்டுறவு அங்காடியில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவதை சேவையாக செய்து வருகிறது.
    • ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை, காமதேனு கூட்டுறவு அங்காடியில் நேற்று, கூட்டுறவுத் துறையின் மூலம் 'கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையை, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர், அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பல்வேறு வகையில் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறது. தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையிலும் ஈடுபட்டிருக்கிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பணி செய்யப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசு ஆகியவை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக எளிய முறையில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 வகையான தொகுப்புகள் பொதுமக்கள் விற்பனைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அங்காடியில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவதை சேவையாக செய்து வருகிறது.

    மக்களுடைய நம்பிக்கையை பெற்று தரமான பொருட்களை குறைந்த விலையில் தரும் நிறுவனம்தான் கூட்டுறவு சங்கம். தற்போது புதிதாக அதிரசம், முறுக்கு செய்யும் தொகுப்பு ரூ.190-க்கு அளிக்கின்றனர்.

    மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பிரீமியம் மற்றும் எலைட் என 2 வகையாக வழங்கப்படுகிறது. அதில் பிரீமியம் ரூ.199-க்கும், எலைட் ரூ.299-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சிறிய குடும்பத்தினரும் பெரிய அளவில் சேமிக்கும் தொகுப்பாக அளித்து வருகின்றோம். இது குடும்ப தலைவிகளிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 மையங்களில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விற்பனை ரூ.20 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • வகுப்பறை கட்டிடம், கலையரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • கடந்த 115 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்டதாகும்.

    சிவகங்கை

    பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தனியார் பங்களிப்புடன் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோன்று கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு நுழைவு வாயில் மற்றும் கலையரங்கம் திறப்பு விழா நடந்தது.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று வகுப்பறை கட்டிடங்கள், நுழைவு வாயில், கலையரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 115 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்டதாகும். ஓலைக்கொட்டகையில் தொடங்கப்பட்டு அதன் பின்னர் ஓடுகள் அமைத்தும், தற்போது கான்கிரீட் அமைத்து, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளியாக 500 மாணவர்கள் படிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    இந்த பள்ளியில் கட்டிடத் திறப்பு விழா, விளையாட்டு விழா மற்றும் 115-வது ஆண்டு விழா முப்பெரும் விழாவாக கொண்டா டப்படுகிறது. இந்த பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது உயர்ந்த நிலையில் இருந்து வருவது குறித்து, இங்கு எடுத்துரைத்தனர்.

    எதிர்கால சந்ததியினர்களாகிய மாணவர்களுக்கு தரமான கல்வியை பெறுவதற்கு அரசுடன் இணைந்து செயல்பட்டு வரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சியை மேம்படுத்து வதற்கென மேலும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து அரசுடன் இணைந்து செய்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    நூற்றாண்டு விழா காணும் கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நூற்றாண்டு நுழைவுவாயில் அமைப்பதற்கும், சூரியமின் சக்தி, புதிய கணினிகள், பெருந்தலைவர் காமராஜர் கலையரங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தங்களது பங்களிப்பை ஏற்படுத்தி, இப்பள்ளியின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு, அரசுடன் இணைந்து பணியாற்றியது பாராட்டுக்குரியதாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து, பள்ளி நூற்றாண்டு விழாவில் 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு கொடை யாளர் பங்களிப்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகையுடன், தனது சொந்த நிதியில் இருந்தும் மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    மாநில அளவில் சிலம்ப போட்டியில் 2-வது இடத்தை பெற்ற மாணவனுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை யும், திருக்குறள் சொல்லி சிறப்பித்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொ கையாகவும் வழங்கினார்.

    இந் நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன். கல்லல் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சொர்ணம் அசோகன், கல்லல் ஊராட்சி மன்றத்தலைவர் நாச்சியப்பன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1,150 பேருக்கு பட்டங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • ஜனாப் அப்துல் சலீம், சிராஜுதீன் மற்றும் அவுரங்கசீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் 12-வது பட்டமளிப்பு விழா நடந்தது. ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தொடங்கி வைத்தார்.

    முதல்வர்அப்பாஸ் மந்திரி வரவேற்று அறிக்கை சமர்ப்பித்தார். சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, கல்வியியல் கல்லூரி அறிக்கை சமர்ப்பித்தார்.

    சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு 1,150 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    முன்னாள் கல்லூரி மாணவியும், மானாமதுரை எம்.எல்.ஏ.வுமான தமிழரசி,முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜுமுதின், கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அஹமது ஜலாலுதீன், பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அஸ்ரப் அலி, ஜனாப் அப்துல் சலீம், சிராஜுதீன் மற்றும் அவுரங்கசீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • ஒவ்வொரு பள்ளிக்கும் அத்தியாசிய புனரமைப்பு தேவைக்காக ரூ.10 ஆயிரத்தையும் அமைச்சர் வழங்கினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியங்களில் உள்ள ஏரியூர், எஸ்.எஸ். கோட்டை, முறையூர், சிங்கம்புணரி, கிருங்காகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 732 மாணவ- மாணவிகளுக்கு ரூ.37 லட்சத்து 34 ஆயிரத்து 451 மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    2021-22-ம் ஆண்டு பொதுத் தேர்வில் அந்தந்த பள்ளியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சொந்த நிதியில் இருந்து முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் ஒவ்வொரு பள்ளிக்கும் அத்தியாசிய புனரமைப்பு தேவைக்காக ரூ.10 ஆயிரத்தையும் அமைச்சர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், திருப்புவனம் பேரூராட்சி சேர்மன் வேங்கை மாறன், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் என்.எம்.சுரேஷ், கிருங்கா கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    ×