என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Planning Committee"
- பி.ஏ.பி., திருமூர்த்தி பாசனத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 330 ெஹக்டர் (3.77 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
- ஓட்டுப்பதிவு முடிந்ததும உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
திருப்பூர்:
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி., திருமூர்த்தி பாசனத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 330 ெஹக்டர் (3.77 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசனம் பெறுகின்றன.மொத்தம் 134 பாசன சங்கம், 9 பகிர்மான குழு தலைவர், 45 பகிர்மான குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்களுக்கான தேர்தல் நடந்த நிலையில், திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை 1ந் தேதி நடத்த திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை 1-ந்தேதி நடக்கிறது. திட்டக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.கூர்ந்தாய்வு செய்தல் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் காலை 10 மணிக்குள் வெளியிடப்படுகிறது.
காலை 10:30 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல், காலை, 10:45 மணிக்கு வேட்பாளர்களின் இறுதிபட்டியல் வெளியிடப்படும். காலை 11:30 முதல் மதியம் 12:15 மணி வரை தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு பின் உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அன்று மதியம் நடக்கிறது. உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுக்களை மதியம் 1:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை தாக்கல் செய்யலாம்.மனுக்கள் கூர்ந்தாய்வு செய்தல் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடுதல் மாலை 3 மணிக்குள் நடைபெறும்.மாலை, 3:30 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.
வேட்பாளர்கள் இறுதி பட்டியல் மாலை 3:45 மணிக்கு வெளியிடப்படும். மாலை 4:30 மணி முதல் 5:15 மணிக்குள் தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
பி.ஏ.பி., திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக உடுமலை கால்வாய் பகிர்மான குழு, பரம்பிக்குளம் பிரதான கால்வாய் பகிர்மான குழுக்களின் தலைவர்கள், அசல் தேர்தல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும் என்றனர்.
- நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் இணைந்து மாவட்ட திட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 9 நபர்களும் நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் 3 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், எம்.பி.,க்கள் செல்வராஜ், ராமலிங்கம் , தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் , தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
திட்டக்குழு அமைப்பு ஊரக வளர்ச்சித் துறையின் படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் இணைந்து மாவட்ட திட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்ட குழுவிற்கு நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 9 நபர்களும் நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் 3 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் துணை விதிகள் பிரிவு 241 படி மாவட்ட திட்ட குழுவிற்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் குழுவின் நிரந்தர சிறப்பு அழைப்பாளராக இருப்பார்கள்.
மாவட்ட திட்டக் குழுவின் பணியானது, மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்காக மாவட்டத்தின் இயற்கை வளம் மற்றும் மனித வளம் சம்பந்தமான அனைத்து விவரங்களைச் சேகரித்து தொகுத்து தகவல் தளம் அமைத்தல், வரைபடம் ஒன்றை தயாரித்து மாவட்டத்தின் வள ஆதார வாய்ப்புகளை மதிப்பிடுதல், ஊரக மற்றும் நகர்பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சார்புத் துறைகள் தயாரித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தொகுத்தல், மாநில அரசு வழங்கிய வழிகாட்டி நெறிமுறைகளை கருத்தில் கொண்டு மாவட்ட திட்டக்குழு விவாதித்த மாவட்ட முழுமைக்குமான வரைவு வளர்ச்சி திட்டம் ஒன்றை தயாரித்தல் மற்றும் ஊரக மற்றும் நகர் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையில் பணிகள் மேற்கொள்ளப்படும் இடம் சார்ந்த திட்டமிடுதல் நீர் மற்றும் ஏனைய இயற்கை வளங்களை பகிர்ந்து கொள்ளுதல் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உட்பட பொதுவான நலன் பற்றி விவாதித்து ஒருங்கிணைத்து அடிப்படை வசதி, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை பேணிபாதுகாக்க உதவுதல், மாவட்டத்தின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கும் கூறுகளை கண்டறிதல் மற்றும் மாவட்டத்திற்கான குறிப்பிட்ட வளர்ச்சி உத்திகள், திட்டங்கள், செயல் திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்குதல், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள் உட்பட செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகளை செயலாக்கத்தை கண்காணித்து ஆய்வு செய்தல் ஆகும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் (ஊரகப்பகுதி, நகர்பகுதி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- சேலம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- 18 திட்ட உறுப்பினர்க ளுக்கான தேர்தலில் ஏற்கனவே 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 8 திட்ட உறுப்பின ருக்கான தேர்தல் நடைபெற்றது.
சேலம்:
சேலம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
18 திட்ட உறுப்பினர்க ளுக்கான தேர்தலில் ஏற்கனவே 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 8 திட்ட உறுப்பின ருக்கான தேர்தல் நடைபெற்றது.
சேலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 697 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் மாநகராட்சி மேயர், மண்டல தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சி லர்கள் வாக்களித்தார்கள்.
இத்தேர்தலில் சேலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 24 பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தல் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதனால் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிக்கு சேலம் மாநகர உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. தி.மு.க, அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திட்டக்குழு உறுப்பினர்களுக்கு போட்டி யிட்டு உள்ளனர். திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான உள்ளாட்சி பிரதிநிதிகள் குவிந்துள்ளனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கு இடையே தேர்தல் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்