என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus 2 exams"

    • நர்மதா,சந்தோஷிணி, உமா ஆகியோர் அதிக மதிப்பெண்கள் பெற்றனர்.
    • 3 மாணவிகளுக்கும், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. உதவித்தொகை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை டவுனில் உள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், பாளை தொகுதி எம்.எல்.ஏ.வுமான அப்துல் வஹாப் கலந்து கொண்டு பிளஸ்-2 வகுப்பில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 3 மாணவிகளான நர்மதா -588, சந்தோஷிணி- 586, உமா- 580 ஆகியோரை பாராட்டி பொன்னாடை போர்த்தினார். மேலும் 3 மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ, கவுன்சிலர் அனார்கலி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குமார் ஜெயராஜ், முனைவர்கள் முத்துராஜ், காந்திமதி மற்றும் நிர்வாகிகள் சரவணன், சுந்தர், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருநெல்வேலியை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து சென்னைக்கு வந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்றார். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அவர் திருநெல்வேலியை சேர்ந்த அம்மு என்பதும் பிளஸ்-2 படித்துவரும் அவர் தேர்வுக்கு பயந்து சென்னைக்கு வந்து இருப்பதும் தெரிந்தது.

    இதையடுத்து மாணவியை மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #tamilnews
    ×