என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Plus-2 pass"
- ஒரு இடம் முந்தியது வேலூர்
- திருவண்ணாமலை மாவட்டம் 35-வது இடத்தையும், திருப்பத்தூர் மாவட்டம் 29-வது இடத்தையும் பிடித்துள்ளது
ராணிப்பேட்டை:
வேலூர் மாவட்டத்தில் 7,248 மாணவர்கள் 8,098 மாணவிகள் உள்பட 15,346பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
இதில் 6094 மாணவர்கள் 7595 மா ணவர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 689 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
இதன் மூலம் வேலூர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 89.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் உள்ள கைதிகள் 6 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 3 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 865 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.இதில் 25,022 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 89.8 சதவீதமாக உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 116 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 13 ஆயிரத்து 314 மாணவ, மாணவிகள் 63 மையங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 623 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 87.3 சதவீதம் ஆகும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 13,014 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.இதில் 11,860 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 91.13 சதவீதமாக உள்ளது.
பிளஸ்-2 பொதுத் தேர்வில் ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக அளவில் கடைசி இடத்தை பிடித்தது. வேலூர் மாவட்டம் கடைசி இடத்திற்கு முன்பாக
3 7-வது இடத்தை பிடித்தது.
திருவண்ணாமலை மாவட்டம் 35-வது இடத்தையும், திருப்பத்தூர் மாவட்டம் 29-வது இடத்தையும் பிடித்துள்ளது.
- அரசுப்பள்ளியில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
- அந்த குழந்தை என்னிடம் படித்த குழந்தை என்று சொல்லும்பொழுது தனக்குள் மிகப்பெரிய மகிழ்ச்சி கிடைக்கும்.
விழுப்புரம்:
அரசுப்பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வருக்கும் தன்னம்பிக்கை ஒன்றே, வெற்றிக்கு அடையாளமாக திகழும் என மாவட்ட கலெக்டர் மோகன் தகவல்.விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்–கல்வித்துறை மூலம், 12-ம் வகுப்பு மாண–வர்களுக்கான நீட் தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவி களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மோகன், வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டியதுடன், மாணவ-மாணவிகளுக்கு 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டதுடன், அங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் பேசியதாவது:-
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை ஒன்றே, வெற்றிக்கு அடையாளமாக திகழும், தற்பொழுது அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் எல்லோரும் வியக்கும் வண்ணம் அதிகளவு மதிப்பெண் பெற்று பாராட்டுக்களை பெற்று வருகிறீர்கள். இங்கு படிக்கும் அனைவரும் நடுத்தர குடும்பம் மற்றும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பீர்கள். இந்நிலையில் ஒவ்வொரு மாணவ, மாணவியும் தங்கள் மனதிற்குள் ஒரு சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். என்ன–வென்றால் என்னாலும் முடியும் என்று நினைத்து படிக்கும்பொழுது எளிதாக இலக்கை அடைவீர்கள். அதற்கு ஆசிரியர்களும் அவர்களுக்கு உறுதுணை–யாக இருந்திட வேண்டும். எந்தவொரு மாணவரும் பெற்றோர், கடவுள், ஆசிரியர் ஆகியோரின் நன் மதிப்போடு செல்லும் பொழுது அவர்களுக்கு வெற்றி முன் செல்லும். அதேபோல், ஆசிரியர் களுக்கு மட்டும்தான் இப்பெருமை உண்டு. அது என்ன வென்றால், தன்னிடம் படித்த மாணவனோ, மாணவியோ மிகப்பெரிய வெற்றி பெற்று பெரிய அளவில் பொறுப்பில் இருக்கும்பொழுது பேசப்படும் சொல், அந்த குழந்தை என்னிடம் படித்த குழந்தை என்று சொல்லும்பொழுது தனக்குள் மிகப்பெரிய மகிழ்ச்சி கிடைக்கும்.
அதேபோல், வெற்றி பெற்ற மாணவனோ, மாணவியோ அந்த ஆசிரி யரிடம் நான் படித்ததால் எனக்கு வெற்றி கிடைத்தது என்ற சொல்லும், அதிர்ஷடம் இந்த பணியில் மட்டும்தான் உள்ளது. ஆகவே, கல்வியால் மாண வருக்கும் பெருமை, அந்த ஆசிரியருக்கும் பெருமை அதை விட மற்றொரு பெருமை ஒன்று உண்டு என்றால், பிள்ளை களால் சாதனை கிடைத்தால் அவர்களின் பெற்றோர் களுக்கு பெருமை தானாக தேடி வந்துவிடும். ஆக நாம் கற்கும் கல்வி, நம்மை மட்டும் அல்ல நம்மை சுற்றியுள்ள அத்தனைபேருக்கும் பெருமை தேடித்தரக்கூடிய மாபெரும் சக்தியாக திகழ்கின்றன. எனவே, நாம் நன்றாக படித்து நம் லட்சியத்தை நிறை வேற்றிடவும், நம்மால் மற்றவர்களுக்கு பெருமைத் தேடித்தரவும் சிறந்து கல்வி பயின்று சாதனை யாளர்களாக வேண்டும் என கலெக்டர் மோகன் வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்