search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police are keen"

    • சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • மூட்டை மூட்டைகளாக பதுக்கி கடத்தி சென்றதை போலீ சார் கண்டுபிடித்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து வெங்காய லோடு களை ஏற்றுக் கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது வேனில் இருந்தவர்கள் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் லிங்கையாத்தார் தெருவை சேர்ந்த மகேந்திரன்(32) சாம்ராஜ் நகர் பண்டிகரையை சேர்ந்த பிரமோத் (22) ஆகியோர் வேன் டிரைவர், கிளீனராக இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் வேனில் ஏறி சோதனை செய்த போது வெங்காய லோடுகள் அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டைகளாக பதுக்கி கடத்தி சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    விமல் பாக்கு 30 சாக்கு மூட்டைகள், பான் மசாலா 30 சாக்கு மூட்டைகள், ஹான்ஸ் 15 சாக்கு மூட்டைகள், கூலிப்பு இரண்டு மூட்டைகள் என மொத்தம் 82 மூட்டைகளில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மகேந்திரன், பிரோமோத்தை சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது கர்நாடக மாநிலம் மைசூர் ஆர். எம். சி. பண்டிபாளையத்தை சேர்ந்த பவன் (25) என தெரிய வந்தது. அவர் சொல்லி தான் மேட்டு ப்பாளையத்தில் உள்ள வியாபாரிகளுக்கு சரக்கு வேனில் புகையிலை பொருட்கள் கடத்தி செல்ல ப்பட்டதாக இருவரும் தெரிவித்தனர்.

    இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்ற வாளியான பவனை பிடிக்க சத்தியமங்கலம் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பவன் பிடிபட்டால்தான் புகையிலை கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரிய வரும் என போலீசார் தெரி வித்தனர்.

    ×