என் மலர்
நீங்கள் தேடியது "police guard"
- பெட்ரோல் குண்டை வீசியதாக கைதான முரளி கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.
- போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.
ராயபுரம்:
சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி கோவிந்தப்பன் நாயக்கன் தெரு சந்திப்பில் ஸ்ரீ வீரபத்ர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் மீது கடந்த 10-ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொத்தவால் சாவடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சவுகார் பேட்டை ஆதியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த வியாபாரி முரளி கிருஷ்ணா என்பவர் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி கோவில் மீது அவர் வீசியது தெரியவந்தது. தினமும் சாமி தரிசனம் செய்து வந்த போதிலும் எனக்கு கடவுள் அருள் தரவில்லை என்று கூறி பெட்ரோல் குண்டை வீசியதாக கைதான முரளி கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.
இருப்பினும் போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து வியாபாரி முரளி கிருஷ்ணனை காவலில் எடுக்க முடிவு செய்தனர். இதன்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இன்று 7 நாட்கள் காவலில் எடுத்தனர். பெட் ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
"கடவுள் எனக்கு அருள் தரவில்லை. அதனால் பெட்ரோல் குண்டை வீசினேன்" என்று முரளிகிருஷ்ணன் வாக்குமுலம் அளித்திருந்தாலும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காகவே முரளி கிருஷ்ணனை காவலில் எடுத்துள்ளோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில்தான் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- 24 மணி நேரமும் மது குடித்துக் கொண்டே இருந்தேன்.
- சிகிச்சைக்காக அனுமதிக்க கேட்டபோது மருத்துவ மனையில் சேர்க்க இயலாது என தெரிவித்து விட்டனர்.
சென்னை:
சென்னை பாரிமுனை கொத்தவால் சாவடியில் வீரபத்திரசாமி கோவிலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான முரளி கிருஷ்ணன் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அதன் விவரம் வருமாறு:-
மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் மனரீதியாக மிகுந்த பிரச்சினைகள் இருந்ததால் மதுவிற்கு அடிமையாகி தினம்தோறும் குடித்து வருகிறேன். அடிக்கடி எனது காதில் வீட்டின் மேலே இருந்து குதித்து விடு, தற்கொலை செய்து கொள், எப்படி யாவது இறந்து விடு என ஒரு குரல் கேட்டுக் கொண்டே உள்ளது.
அதனை மறக்க 24 மணி நேரமும் மது குடித்துக் கொண்டே இருந்தேன். இதுகுறித்து மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்க கேட்டபோது மருத்துவ மனையில் சேர்க்க இயலாது என தெரிவித்து விட்டனர்.
எனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு மருத்துவர்கள் உதவ முன்வராததால் உயிரிழந்து விடலாம் என பெட்ரோலை வாங்கி உதவி செய்யாத வீரபத்திரர் மீது வீசி விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தபோது கோவில் பூட்டி இருந்ததால் மறைத்து வைத்திருந்ததேன். மறுநாள் காலை பல நாட்களாக வழிபட்டு வரும் எனக்கு எந்த உதவியும் வீரபத்திரன் அளிக்கவில்லை என ஆத்திரத்தில் பீர் பாட்டிலை மது போதையில் இருந்த போது வீசிவிட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்த போது அருகில் இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டனர்.
இவ்வாறு வாக்கு மூலம் அளித்துள்ளான்.
- பெண்ணிடம் காவலர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலானது.
- ரோந்து காவலர் ராஜ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இருவரிடம், 'நீங்கள் தம்பதியா?' என கேட்ட காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் பெண் ஒருவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, ரோந்து பணியில் இருந்த காவலர் 'நீங்கள் கணவன் மனைவியா?' என கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனை சம்பந்தப்பட்ட பெண் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் ராஜ்குமாரை பணியிட மாற்றம் செய்ய காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.