search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செத்து விடு என காதில் யாரோ கூறியதால் மன அழுத்தத்தில் பெட்ரோல் குண்டை வீசினேன்
    X

    'செத்து விடு' என காதில் யாரோ கூறியதால் மன அழுத்தத்தில் பெட்ரோல் குண்டை வீசினேன்

    • 24 மணி நேரமும் மது குடித்துக் கொண்டே இருந்தேன்.
    • சிகிச்சைக்காக அனுமதிக்க கேட்டபோது மருத்துவ மனையில் சேர்க்க இயலாது என தெரிவித்து விட்டனர்.

    சென்னை:

    சென்னை பாரிமுனை கொத்தவால் சாவடியில் வீரபத்திரசாமி கோவிலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான முரளி கிருஷ்ணன் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அதன் விவரம் வருமாறு:-

    மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் மனரீதியாக மிகுந்த பிரச்சினைகள் இருந்ததால் மதுவிற்கு அடிமையாகி தினம்தோறும் குடித்து வருகிறேன். அடிக்கடி எனது காதில் வீட்டின் மேலே இருந்து குதித்து விடு, தற்கொலை செய்து கொள், எப்படி யாவது இறந்து விடு என ஒரு குரல் கேட்டுக் கொண்டே உள்ளது.

    அதனை மறக்க 24 மணி நேரமும் மது குடித்துக் கொண்டே இருந்தேன். இதுகுறித்து மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்க கேட்டபோது மருத்துவ மனையில் சேர்க்க இயலாது என தெரிவித்து விட்டனர்.

    எனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு மருத்துவர்கள் உதவ முன்வராததால் உயிரிழந்து விடலாம் என பெட்ரோலை வாங்கி உதவி செய்யாத வீரபத்திரர் மீது வீசி விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தபோது கோவில் பூட்டி இருந்ததால் மறைத்து வைத்திருந்ததேன். மறுநாள் காலை பல நாட்களாக வழிபட்டு வரும் எனக்கு எந்த உதவியும் வீரபத்திரன் அளிக்கவில்லை என ஆத்திரத்தில் பீர் பாட்டிலை மது போதையில் இருந்த போது வீசிவிட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்த போது அருகில் இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டனர்.

    இவ்வாறு வாக்கு மூலம் அளித்துள்ளான்.

    Next Story
    ×