என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police raids"
- சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
- பஸ்-ரெயில் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு தமிழகத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த வகையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் வாளையாறு, ஆனைக்கட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகளில் தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அந்த வழியாக செல்லும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவற்றின் டிரைவர்களிடம் உரிய போக்குவரத்து ஆவணங்களை கேட்டு வாங்கி சோதனை செய்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
கோவையில் பஸ்-ரெயில் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகள் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் அவர்களது உடைமைகளையும் போலீசார் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதுதவிர இரவுநேரங்களில் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக ரோந்துப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இதுதவிர கோவையில் உள்ள விடுதிகளில் சந்தேகப்படும்படி யாராவது தங்கி உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரிபவர்களை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்களிடம் வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண்ணை சேகரித்து அனுப்பி வருகின்றனர். கோவை ஓட்டல்களில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு செல்வதற்காக பிரத்யேக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் விடிய-விடிய வாகன தணிக்கை சோதனைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி தமிழகம்-கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள கக்கநல்லா சோதனைச்சாவடியில் கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அங்கு கூடலூர் போலீஸ் டி.எஸ்.பி வசந்தகுமார் தலைமையில் போலீசார் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- கதிர்வேல் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டி ருந்தார்.
- கதிர்வேல் கீழே இறங்கி வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கதவின் அருகே நின்று கொண்டு இருப்பது தெரிய வந்தது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 34) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மேல் மாடியில் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது கீழ் வீட்டில் உள்ள அறை யில் கதிர்வேல் அண்ணன் பெருமாள் மனைவி கவிதா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டப்ப டாமல் சாத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் வீட்டில் கதவை உடைப்பது போல் சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த கதிர்வேல் கீழே இறங்கி வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கதவின் அருகே நின்று கொண்டு இருப்பது தெரிய வந்தது. இவரைப் பார்த்த கதிர்வேல் கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் இருந்து தப்பி ஓடினர். உள்ளே சென்று பார்த்த போது கவிதா படுத்திருந்த அறையை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோ கதவை உடைத்து அதிலிருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குண சேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்த னர். மேலும் கைரேகை நிபுணர் ராஜவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தார். இது குறித்து கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காசிராமன் சென்னை யில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
- யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாக ராஜபுரத்தை சேர்ந்தவர் காசிராமன் (வயது 40). சென்னை யில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் தியாகராஜபுரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த காசிராமன் வீட்டை திறந்து பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன.
அதில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், 3 வெள்ளி குத்து விளக்கு உட்பட வெள்ளி பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து காசிராமன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து வீட்டின் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
- பண்ருட்டி அருகே 17 வயது சிறுமி கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒரவர் திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வாணியம்பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கடத்தல் வழக்காக பதிவு செய்து விசுவநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்