search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "popular brand of india"

    • இந்த அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுக–ளுக்கு தடை செய்துள்ளது.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது.

    திருப்பூர்:

    இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு சட்ட விரோதமான பண பரிவர்த்தனை செய்ததாலும், பயங்கரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டியதாகவும்கூறப்படுகிறது. இதனால் இந்த அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளது.

    இந்த அமைப்பை ஏற்கனவே தடை செய்ய வேண்டும் என்று 2018-ம் ஆண்டு எனது சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அரசாங்கம் தான் இதுபோன்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தது. எனவே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை
    • மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு

    வேலூர்:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் சாலை சந்திப்புகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் அதற்கு ஆதரவாக யாரும் பேசக்கூடாது‌. அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இதே போல திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பஸ் நிலையம் ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று காலை முதல் இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாஜக கட்சி அலுவலகங்கள் பாஜக இந்து முன்னணி பிரமுகர்கள் வீடுகளிலும் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா அமைப்பை தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ஐகோர்ட்டில், இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கோபிநாத் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு, தடை செய்யப்பட்ட சிபி அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளது.

    இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மீது கேரளாவில் ஏராளமான வழக்குகள் உள்ளன. புனே குண்டு வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்களிலும் தொடர்பு உள்ளன. எனவே இந்த அமைப்பை தடை செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி. ஆஷா ஆகியோர், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஒரு அமைப்பை தடை செய்வது என்பது ஐகோர்ட்டின் வேலை இல்லை. ஒரு அமைப்பை தடை செய்யவேண்டும் என்றால், மத்திய அரசை தான் மனுதாரர் அணுக வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #tamilnews
    ×