search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை
    X

    சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை

    • போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை
    • மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு

    வேலூர்:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் சாலை சந்திப்புகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் அதற்கு ஆதரவாக யாரும் பேசக்கூடாது‌. அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இதே போல திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பஸ் நிலையம் ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று காலை முதல் இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாஜக கட்சி அலுவலகங்கள் பாஜக இந்து முன்னணி பிரமுகர்கள் வீடுகளிலும் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×