search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prank Video"

    • பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை.

    தென்காசி அரசு மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்த இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் தனது கையில் அடிப்பட்டது போல கட்டுபோட்டுக் கொண்டு பிராங்க் வீடியோ பதிவு செய்துள்ளார்.

    இந்த பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்து வெளியிட்ட செங்கோட்டையை சேர்ந்த பீர் முகம்மது, சேக் முகம்மது ஆகியோரை கைது செய்துள்ளனர்.

    மேலும், பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று பிராங்க் வீடியோ எடுத்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் சர்ச்சையில் சிக்கினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் வகையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பிராங்க் வீடியோ எடுத்ததை தொடர்ந்து, டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, டிடிஎஃப் வாசன் மீது வழக்கு எண் 72/2024 பிரிவு 299 கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பினர்.

    டிடிஎஃப் வாசனுக்கு திருப்பதி காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், டிடிஎஃப் வாசனின் வழக்கறிஞர்கள் திருப்பதி விரைந்துள்ளனர்.

    • டிடிஎஃப் வாசன் மீது போலீசில் புகார் அளிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
    • விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

    காஞ்சிபுரத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் பல நாட்கள் சிறையில் இருந்தார். பலமுறை ஜாமின் கோரிய மனுக்கள் தள்ளுபடியான நிலையில் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை ஓட்டக் கூடாது, மதுரை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், டிடிஎஃப் வாசன் மீது போலீசில் புகார் அளிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    திருப்பதி மலைக்கு தன்னுடைய நண்பர்களுடன் சென்றிருந்த டிடிஎஃப் வாசன், சாமி தரிசன வரிசையில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். சாமி கும்பிடுவதற்காகக் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் விதத்தில் எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முதன்மை கண்காணிப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதனிடையே, இது குறித்து தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பதி மலையில் பக்தர்கள் மன வருத்தம் அடையும் வகையில் இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

    மேலும், டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கத் தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான விஜிலன்ஸ் துறை செய்து வருகிறது.

    ×