search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "presented"

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்
    வீ.கே.புதூர்:

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி, பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பென்சிங் வேலி அமைக்க நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ. 1 லட்சத்தினை, தெற்கு மாவட்ட செயலாளர்  சிவபத்மநாதன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமாரிடம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி மருத்துவர் சுபா, கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரி,  மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன்,  அட்மா சேர்மன் காந்திராமன், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் முருகேசன், தர்மராஜ், ராஜேஸ்வரி, தி.மு.க. நிர்வாகிகள் வைத்தீஸ்வரி, அருள் டால்டன், சொட்டு சுப்பிரமணியன், கபில்தேவதாஸ், மாஸ்டர் கணேஷ், குருசிங், முத்துபாண்டி, டேனியல், ஸ்டீபன் சத்தியராஜ், கார்த்தி, காலசாமி, சாலிமேரி, சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம், கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    • கணவரை இழந்த ஜெயா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உதவி கேட்டு மனு கொடுத்தார்.
    • தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஜெயாவுக்கு காசோலை வழங்கினார்.

    உடன்குடி:

    திருச்செந்தூர் அருகே உள்ள கீழ நாலு மூலை கிணறு பகுதியை சேர்ந்த ஜெயா என்பவருக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இவருடைய கணவர்கடந்த 2021-ல் இறந்துவிட்டார். கணவரை இழந்த ஜெயா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உதவி கேட்டு விண்ணப்பம் மனு கொடுத்தார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆசாத் கோரிக்கையை ஏற்று ஆவண உதவி செய்வதாக உறுதியளித்தார்.

    அதன் அடிப்படையில் ஜெயா குடும்பத்திற்கு ரூ. 1.50 லட்சம் உடன்குடி வங்கியில் வரைவோலையாக காசோலை எடுக்கப்பட்டு ஜெயாவின் மகன் 8-ம் வகுப்புபடித்து வரும் ரூபனுக்கு (வயது12) ரூபன் பெயரில் டெபாசிட் செய்து அதன் நகலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஜெயாவுக்கு வழங்கினார்.

    உடன்குடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜோசப் நோலாஸ்கோ, மாவட்ட தலைவர் ஆசாத், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஐப்ரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உடன்குடி நகர பொருளாளர் அமித்அரசுமீரான், காயல் நகரச் செயலாளர் ஹசன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொன்டனர்.

    • ஆழ்வை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி 99-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • திருச்செந்தூர் முருகன் கோவிலை புதுப்பிக்க ரூ.300 கோடியும், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு ரூ. 30 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் ஆழ்வை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி 99-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய அவைத்தலைவர் கோவில் ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் கிருபா, காந்தி இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 410 பேருக்கு இலவச தையல் மிஷின்கள் மற்றும் கிரைண்டர்கள், வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    காமராஜர் பிறந்தநாளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏழை- எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். தி.மு.க.வை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. சாதி, திராவிட கொள்கை கொண்ட தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருக்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார்.

    மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலை புதுப்பிக்க ரூ.300 கோடியும், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு ரூ. 30 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பவுர்ணமி தோறும் 12 கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால் மக்களுக்காக உழைக்கின்ற தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் மண்ணை இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் பேசினர்.

    முன்னதாக மாவட்ட பிரதிநிதி ரகுபதி வரவேற்று பேசினார். மாநில மாணவரணி அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், சாத்தான்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலமுருகன், ஜோசப், நகர செயலாளர் மகா இளங்கோ, ஆழ்வை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர், மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், கருங்குளம் ஒன்றிய முன்னாள் செயலாளர் நல்லமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் மணி, முருகன், சரவணன், பாஸ்கர், ஒன்றிய பொருளாளர்கள் வடிவேலு, செல்வராஜ், ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் சுந்தர்ராஜ் உள்பட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு ஆழ்வை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பார்த்திபன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். கிளைச் செயலாளர் ஞான ஜேம்ஸ் நன்றி கூறினார்.

    700 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். #MarriageAssistance #KTRajendraBalaji
    சாத்தூர்:

    சாத்தூரில் சமூக நலத்துறை சார்பில் ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கான தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது. அப்போது 700 பெண்களுக்கு ரூ.4 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

    விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

    ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களினால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சுமார் ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்து, மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமனம் செய்து, நிவாரணப்பணிகளை மிக சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு கூறினார்.

    விழாவில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைதொடர்ந்து சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை கேட்கும் கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டதோடு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மேகதாது பிரச்சினையில் கர்நாடக அரசு மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக தமிழகத்திற்கு தண்ணீரை கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் இருமாநில பிரச்சினைகள் தீராது என்றார். ஆணவ கொலைகளுக்கு திராவிட கட்சிகள் காரணமில்லை என்றும் குறிப்பிட்டார்.

    மக்கள் நலனிற்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செல்வதாகவும் இதனை குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் வாசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை, வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கிருஷ்ணன், பொதுகுழு உறுப்பினர் வேலாயுதம் ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டதோடு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆலங்குளம் சிமெண்டு ஆலை விருந்தினர் விடுதிக்கு வந்த அவரிடம் பொது மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    அப்போது கலெக்டர் சிவஞானம், தாசில்தார் ராஜ்குமார், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. அவை தலைவர் அழகர்சாமி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஈஸ்வரி, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மாரியப்பன், திருப்பதி, புலிப்பாறைப்பட்டி மணிகண்டன், சங்கரமூர்த்திபட்டி முருகன், கரிசல்குளம் பரமானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
    தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 304 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். பிஆர்.செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது:- தமிழக அரசை முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் திறமையாக நடத்தி, பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர். அதன்படி அரசின் பல்வேறு திட்டங்கள் கிராமப் பகுதிகளிலுள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு வழங்கிடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் 304 பேருக்கு ரூ.3 கோடியே 21 லட்சத்து 16 ஆயிரத்து 677 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களாகிய நீங்கள் அரசின் திட்டங்களை பெறுவதில் அக்கறை காட்டி திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். மேலும் பெரியாறு பாசன கால்வாயிலும், வைகைப் பாசன கால்வாயிலும் முதற்கட்டமாக குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் விவசாயத்திறக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்துவோம்.

    அதேபோல் சிவகங்கை நகர்பகுதியில் நீர்வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாகாமல் குளங்களுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் நீர்வரத்துக்கால்வாய் சீர் செய்யப்படும். மேலும் வேளாண்மைத்துறையில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் ஆஷா அஜீத், தாசில்தார் மணிவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதி, துணை தாசில்தார் நேரு உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேவகோட்டையில் நடந்த புத்தகத்திருவிழாவை அமைச்சர் பாஸ்கரன் பார்வையிட்டார். அங்கு ஒவ்வொரு அரங்கமாக சென்று புத்தகங்களை பார்த்து, சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து பெற்றுக்கொண்டார். அமைச்சருடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிர்லா கணேசன், தேவகோட்டை நகர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் சுந்தரலிங்கம், தலைமை கழக பேச்சாளர் முகவை நெல்சன், பெருவத்தி, முருகன், தேவகோட்டை நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர்கள் ரமேஷ், சரவணன், நகர இளைஞரணி செயலாளர் சுபகார்த்திகேயன், முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வழங்கினார்.#DMK
    சென்னை:

    தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்புநிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப் பெறும் வட்டி தொகையை கொண்டு மாதந்தோறும் ஏழை-எளிய, நலிந்தோருக்கு உதவி தொகையாக கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. வைப்புநிதியாக போடப்பட்ட ரூ.5 கோடியில், 30-வது புத்தகக் கண்காட்சியை கருணாநிதி திறந்த வைத்த போது, கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார். இதையடுத்து ரூ.4 கோடியில் வரும் வட்டி தொகையில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து உதவி தொகை வழங்கப்படுகிறது.

    2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால், கடந்த மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை 15-ந் தேதி(நேற்று) வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×