search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private bus conductor"

    • சுப்பிரமணி நெல்லை சந்திப்பு பகுதியில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார்.
    • காயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது21), தனியார் பஸ் கண்டக்டர். சுத்தமல்லி மேலத்தெருவை சேர்ந்தவர் தாமரை கண்ணன் என்ற மதன் (27). இவரும் தனியார் பஸ் கண்டக்டராக உள்ளார். இவர்கள் இருவரு க்கும் இடையே பயணிகளை ஏற்றுவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று சுப்பிரமணி நெல்லை சந்திப்பு பகுதியில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தாமரை கண்ணன் மற்றும் அவரது நண்பரான நம்பிராஜன் என்ற சுந்தர் ஆகிய 2 பேர் சுப்பிரமணியை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.

    சத்தம் கேட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் முருகன் ஓடி வந்தார். உடனே தாமரை கண்ணன், நம்பிராஜன் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் தாமரைக்கண்ணன், நம்பிராஜன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மந்தாரக்குப்பம் அருகே குடிபோதையில் தனியார் பஸ் கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    நெய்வேலி:

    கடலூர் டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி (வயது 35). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை கடலூரில் இருந்து விருத்தாசலம் சென்ற பஸ்சில் பணியாற்றி கொண்டிருந்தார். அந்த பஸ் வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் என்ற இடத்தில் நின்றது.

    அப்போது விருத்தாசலம் காமராஜர் நகரை சேர்ந்த முருகன் (28) என்பவர் அந்த பஸ்சில் ஏறினார். அவரிடம் கண்டக்டர் சுந்தரமூர்த்தி டிக்கெட் கொடுத்து பணம் கேட்டார். அப்போது முருகன் பணம் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது முருகன் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து டிரைவர் பஸ்சை மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி சென்றார். பின்பு கண்டக்டர் சுந்தரமூர்த்தி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த முருகனை கைது செய்தார்.

    கரூரில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை காதலனே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கரூர்:

    கரூர் அருகே வாங்கலில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த கிடந்த பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்து கொன்று வாய்க்காலில் வீசியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கொலை செய்தது யார்? அவரது பெயர், ஊர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூர் சங்கரன்பாளையம் மீனாம் பள்ளி பகுதியை சேர்ந்த பிரேமானந்தம் மகள் பேபி (வயது 21) என்பதும், அவரை கொலை செய்தது அவரது காதலன் நாமக்கல் மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த அன்பரசு (22) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து இன்று அன்பரசுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பேபியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியானது.

    பேபி நாமக்கல் மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் அன்பரசுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். 

    சம்பவத்தன்று இருவரும் கரூர் வாங்கல் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பகுதிக்கு வந்து அங்கு கரையில் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது பேபி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அன்பரசுவிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசு , பேபியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார். 

    இதையடுத்து என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த அன்பரசு, பேபியின் கழுத்தை சேலையில் இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை வாய்க்காலில் தூக்கி போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்தநிலையில் போலீசார் விசாரணையில் அவர் சிக்கிக்கொண்டார். 

    கைதான அன்பரசுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த கொலை சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. காதலியை காதலனே கொலை செய்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ×