என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "public picketing"
- சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- கரட்டுப்பட்டி, மேல நாச்சிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு சரி வர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரை- திண்டுக்கல் சாலையில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், மதுரை மாநக ராட்சி குடிநீர் தேவைக்காக பைப்லைன் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் குழாய்களும் சேதமடைகிறது.
ஊராட்சி மன்ற நிர்வா கம் மூலம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவைகள் சரி வர சீரமைக்கப்படவில்லை. குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படு கிறது. இதனால் கரட்டுப்பட்டி, மேல நாச்சிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடையாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே சேதமைடைந்த குழாய்கள் சீரமைத்து தர வேண்டும் என்றனர். இதனை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டனர்.
- அவனியாபுரத்தில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல் செய்தனர்.
- அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
மதுரை
மதுரை மாநகராட்சி அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதை செய்து தரக்கோரி பலமுறை அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் விரக்தியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இன்று 100-க்கும் மேற்பட்டோர் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், கவுன்சிலர் முத்துலட்சுமி அய்யனார், மாநகராட்சி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை முறையாக நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- பாலமேடு அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ‘திடீர்’ மறியல் நடத்தினர்.
- சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக போலீசார் உறுதியளித்ததை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி-ராஜக்காள்பட்டி செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்தப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த வழியாக குவாரி களுக்கு அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. சாலை வழியாக வாகனங்கள் செல்லும் போது சாலையோரமாக குடியிருப்போர் வீடுகள் முழுவதும் புழுதி பரவி காற்று மாசு ஏற்படுகிறது. எனவே புழுதி பறக்காமல் இருக்க சாலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அந்தப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
ழைக்காலங்களில் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என்று இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், குண்டும் குழியுமான சாலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வாகனங்கள் செல்லும்போது வீடுகளுக்குள் அதிகளவில் புழுதி பறக்கிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே புழுதி பறக்காமல் இருக்க தினமும் சாலையில் தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த புழுதி காரணமாக குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே ஒருமுறை போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் இன்று 2-வது கட்டமாக போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.
கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவது பற்றி தெரியவந்ததும், பாலமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக போலீசார் உறுதியளித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
- பலத்த காயமடைந்த சந்திரகாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாசு (வயது60). இவர் நேற்று மாலை 5 மணியளவில் பரவலூர் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது விருத்தாசலம் நோக்கி வந்த கார் சந்திரகாசு மீது மோதியது . இதில் பலத்த காயமடைந்த சந்திரகாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை நேரில் பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.
பின்னர் விருத்தாசலம் வேப்பூர் சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் விருத்தாசலம் சேலம் சாலை மார்க்கத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தண்டையார்பேட்டை நேரு நகரில் 12 தெருக்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 20 ஆண்டாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது.
இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. லாரிகள் மூலம் வழங்கப்பட்ட குடிநீரும் சரியாக வழங்கவில்லை.
இதனால் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் நேரு நகர் ரெயில்வே கேட் அருகே திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதானம் செய்தனர்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-வது மற்றும் 3-வது தெருவில் பழைய குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்கள் அமைக்கும் பணி நடந்தது. அதன்பின் அப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.
இதனை கண்டித்து இன்று தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகரில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்