என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Puja in temple"
- பவுர்ணமி பூஜை நடை பெற்றது.
- வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடை பெற்றது. இதை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெரு மானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்கா ரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உட்பிர காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில் உற்சவ அம்மன் பம்பை, மேளம் முழங்க விளக்கு பூஜை செய்யும் இடத்தில் எழுந்தருளினார்.பின்பு பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபா ராதனை காண்பித்தவுடன் விளக்கு பூஜை முடிவடைந்தது. விழாவுக்கான ஏற்பா டுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவான ந்தம் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்திருந்தனர்.
- அம்மாப்பேட்டையில் பிரசித்தி பெற்ற குஞ்சு காளியம்மன் கோவில் உள்ளது.
- நள்ளிரவில் நோட்டம் போட்டு அவற்றை மர்ம நபர்கள் திருடியிருப்பது தெரிய வந்தது.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டையில் பிரசித்தி பெற்ற குஞ்சு காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி நேற்று கோவிலில் பூஜை முடித்து விட்டு கதவை பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்தபோது அம்மனின் சூலாயுதம், கலசம் திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில் நோட்டம் போட்டு அவற்றை மர்ம நபர்கள் திருடியிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பூசாரி, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அம்மாப்பேட்டை சுப்பிரமணிசாமி கோவில் அறநிலைய துறை செயல் அதிகாரி விமலா, அங்கு வந்து கோவிலில் நடந்த ெகாள்ளை குறித்து விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.