search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "purity awareness"

    • மாணவ பிரதிநிதி ரத்தினகணேஷ் முன்னிலையில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஈடுபட்டனர்.
    • நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் என் குப்பை, எனது பொறுப்பு, என் நகரம் -எனது பெருமை என்ற திட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு பகுதியில் உள்ள உழவர் சந்தையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.

    அலகு -2 மாணவர்கள் ஒருக்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான உழவர் சந்தை சுற்றுச் சுவரில் பிளாஸ்டிக்கை விடு... துணிப் பையை எடு... மரம் வளர்ப்போம் போன்ற ஓவியத்தை வரைந்தனர். மாணவ பிரதிநிதி ரத்தினகணேஷ் முன்னிலையில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஈடுபட்டனர். கண்கவர் விழிப்புணர்வு ஓவியம் அப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    ருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே சுகாதார துறை, எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
    திருச்சி:

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே சுகாதார துறை, எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் முதலாவது நடைமேடையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு திருச்சி கோட்ட முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் சவுந்திரராஜன் தலைமை தாங்கி கொடியசைத்து வைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும் மதுரை- சென்னை சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை அதிகாரிகள் வழங்கினர். ரெயில் மற்றும் ரெயில் நிலைய நடைமேடைகள், வளாகத்தை தூய்மையாக வைத்தல், குப்பைகளை குப்பை தொட்டிகளில் போடுதல் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

    நிகழ்ச்சியில் கூடுதல் முதன்மை மருத்துவ கண்காணிப் பாளர் பாஸ்கரன், உதவி நல அதிகாரிகள் சந்திரசேகரன், ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் கல்யாணசுந்தரம், சுதாகர், ரேவதி மற்றும் எக்ஸ்னோரா அமைப்பினர், பள்ளி மாணவ-மாணவிகள், பிரம்ம குமாரிகள் அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர், ரெயில்வே துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். துப்புரவு பணியாளர்களிடம் ரெயில்வே அதிகாரிகள் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதாக அறிவுறுத்தினர். 
    ×