search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quarrying of stone"

    • அசோக் (வயது 20). தறி தொழிலாளி. இவர் நேற்று தன்னுடைய நண்பர்களுடன் கோரிமேட்டை அடுத்த ஜீவா நகரில் உள்ள கல்குவாரி அருகே மது அருந்திவிட்டு அங்குள்ள குட்டையில் குளித்தார்.
    • அப்போது அசோக் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நல்லறம் பட்டியலைச் சேர்ந்தவர் அசோக் (வயது 20). தறி தொழிலாளி. இவர் நேற்று தன்னுடைய நண்பர்களுடன் கோரிமேட்டை அடுத்த ஜீவா நகரில் உள்ள கல்குவாரி அருகே மது அருந்திவிட்டு அங்குள்ள குட்டையில் குளித்தார்.

    அப்போது அசோக் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தண்ணீரில் அசோக் மூழ்கியுள்ளார். அவருடைய நண்பர்கள் அவரை மீட்க முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அசோக் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

    அசோக் உடலை மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • குவாரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களால் எவ்வாறு புரிந்துகொண்டு, கருத்து தெரிவிக்க முடியும்.
    • அறிக்கைகளை தமிழில் தயாரித்த பின்னரே கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளத்தில் குவாரிகள் அமைக்க ஜனவரி 6ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.இது குறித்து பல்லடத்தில் உள்ள திருப்பூா் மாவட்ட ( தெற்கு) மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை செயற்பொறியாளா் சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் மைவாடி கிராமம் க.ச.எண் 688, 689, 657 ஆகிய இடங்களில் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குழுமம் சாா்பில் 10.98 ஹெக்டோ் பரப்பளவில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைக்க மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஜனவரி 6ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் உண்மை விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதால் கல்குவாரி குறித்த கருத்துகேட்பு கூட்டத்தை ரத்து செய்யவேண்டும் என நேர்மை மக்கள் இயக்கம் திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மடத்துக்குளம் தாலுகா, மைவாடி கிராமத்தில் தனியார் கல்குவாரி குறித்த கருத்து கேட்பு கூட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தமிழில் இல்லை. 176 பக்க அறிக்கை ஆங்கிலத்தில் உள்ளதால், குவாரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களால் எவ்வாறு புரிந்துகொண்டு, கருத்து தெரிவிக்க முடியும்.

    கல்குவாரிகளால் என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்கும். அதை எவ்வாறு சரி செய்வார்கள் என்கிற அறிக்கை தாய்மொழியில் இருந்தால்தான் மக்கள், அதனை புரிந்துகொண்டு தங்கள் கருத்து தெரிவிக்க முடியும்.

    சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தமிழில் இல்லாததாலும், உண்மை விவரங்கள் மறைக்கப்படுவதாலும் கல்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்யவேண்டும். அறிக்கைகளை தமிழில் தயாரித்த பின்னரே கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • லாரிகளை மடக்கி பொதுமக்கள் வாக்குவாதம்
    • அதிகாரிகள் உத்தரவின் பேரில் கலைந்து சென்றனர்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அடுத்த முசிறி கிராமத்தில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரியிலிருந்து லாரிகள் மூலம் அதிக பாரத்தில் கற்களை ஏற்றிக்கொண்டு முசிறி-வாலாஜாப்பேட்டை சாலையில் செல்வதாக கூறப்படுகிறது.இதனால் முசிறி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் கற்கள் மேலே விழுமோ என்ற அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லாததால், நேற்று கற்களை ஏற்றி கொண்டு வந்த லாரிகளை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் அதிக பாரம் ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உத்தரவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கல்குவாரியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் குடியிருப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
    • வருங்காலத்தில் கருத்து கேட்பு கூட்டங்களை அந்தந்த கிராமத்தில் நடத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் காங்கயம் தாலுகா பரஞ்சேர் வழி ஊராட்சி நால்ரோடு கிராமத்தில் அமைய உள்ள 2 கல்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.

    கல்குவாரியால் தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஊராட்சிக்கு தேவையான திட்டங்கள் கிடைக்கும். எங்கள் பகுதியில் பாதிப்பு இல்லை என பெரும்பாலானவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும்போது, 'கல்குவாரியை முறைப்படி நடத்த வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். வருங்காலத்தில் கருத்து கேட்பு கூட்டங்களை அந்தந்த கிராமத்தில் நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். கனிமத்துறை உதவி இயக்குனர் அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். நால்ரோடு கல்குவாரியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் குடியிருப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு வீடுகள் உள்ளன. தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல் குவாரிகளை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். கல்குவாரியில் வேலை செய்பவர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. உள்ளிட்டவை பிடித்தம் செய்யப்படுகிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்' என்றார்.

    ×