என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rajiv Gandhi Government Hospital"
- சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
- ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நகர் முழுவதும் தேவையான வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன
சென்னை மீஞ்சூரில் கடும் வெயிலில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி சச்சின் (25), 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னையில் கடுமையான வெப்பம் தாக்குவதால் வெப்பத்தால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக நகரில் உள்ள 140 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர்.
சென்னை:
சென்னை கொளத்தூரில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 5 குழந்தைகள். மாரிமுத்துவின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் பஞ்சந்திருத்தி இருளர் குடியிருப்பு ஆகும்.
மாரிமுத்து தனது மூத்த மகன் முத்துக்குமரன்(13) என்பவனை திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு மற்ற 4 குழந்தைகளுடன் சென்னை யில் வசித்து வந்தார். கடந்த 27-ந்தேதி முத்துக்குமரன், தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு 12 வயது நண்பனுடன் வெளியில் சென்றார்.
திருப்பாச்சூர் அருகே திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது திருத்தணி நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கடந்த 30-ந்தேதி முத்துக்குமரன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர். அதன்படி சிறுவனின் உடல் உறுப்புகள் மற்ற நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.
மேலும் விபத்து தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
- கிட்டத்தட்ட 7 முறை அவருக்கு சி.பி.ஆர். மற்றும் ஷாக் கொடுக்கப்பட்டது.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜேஷ் (38). இவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.
ஆசிரியர் பணி செய்து வந்த ராஜேசுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரை சைதாப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
முதலுதவி அங்கு செய்யப்பட்டபிறகு ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போதே இதயத் துடிப்பு முற்றிலும் நின்று போய்விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது இதயத்துடிப்பு சீர் இல்லாத நிலையில் இருந்தது.
கிட்டத்தட்ட 7 முறை அவருக்கு சி.பி.ஆர். மற்றும் `ஷாக்' கொடுக்கப் பட்டது. அதன்பிறகு இதயத் துடிப்பு சீரானது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ராஜேசின் இதய ரத்த குழாயில் அடைப்பு மோசமான நிலையில் இருந்ததை இதயவியல் நிபுணர்கள் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டனர். இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி ரத்தக்குழாயின் அடைப்பை சீர் செய்ய `ஸ்டெண்ட்' அமைக்கப்பட்டது. ஆஞ்சியோ பிளாஸ்டு சிகிச்சை முடிந்த வுடன் அவரது இதயத்துடிப்பு சீராகும் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் மீண்டும் ராஜேசுக்கு இதயத்துடிப்பு நின்று போனது. அதையடுத்து 30 நிமிடங்களுக்கு சி.பி.ஆர். செய்து இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசத்தில் இருந்த அவர் படிப்படியாக மீண்டு வந்தார். பின்னர் செயற்கை சுவாசம் இல்லாமல் சுயமாக மூச்சு விடவும், பேசவும் தொடங்கினார்.
இதையடுத்து செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு நடக்கவும், சாப்பிடவும் ஆரம்பித்தார்.
இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் தேரணி ராஜன் கூறியதாவது:-
ஆசிரியர் ராஜேசுக்கு 6 முறை இதயத்துடிப்பு நின்றுவிட்டது. ஒருமணிநேரத்தில் 5 முறை இதயத்துடிப்பு இல்லாமல் போனது. பின்னர் அதனை மருத்துவர் கள் சீராக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகு ஒரு முறை இதயத்துடிப்பு நின்று விட்டது.
ஆனாலும் மருத்துவர்கள் தொடர்ந்து போராடினார்கள். அதிகபட்ச மருத்துவ முயற்சி எடுத்தனர். இதயத் துடிப்பு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நின்றுவிட்டால் மரணம் ஏற்பட்டுவிடும். ஆனால் இறுதிக்கட்டம் வரை மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
அவரது இதயத்துடிப்பு படிப்படியாக சீராகி முன்னேற்றம் ஏற்பட்டது மருத்துவத்துறையில் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்று நிகழ்வது அரிதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே 2 முறை இதே பிரச்சினைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மீண்டும் இதே பிரச்சினைக்காக நேற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தா.பாண்டியனின் உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். #DPandian #RajivGandhiHospital
நேற்று தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த தா.பாண்டியன், கருணாநிதி விரைவில் நலம் பெறுவார் என்றும் தமிழ் உள்ளவரை அவர் வாழ்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #DPandianHospitalised
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
‘மருத்துவத் துறையில் செவிலியர்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றனர். மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் செவிலியர்கள் பாலமாக விளங்குகின்றனர். அரசு மருத்துவமனைகளில் சேவை மனப்பான்மையோடு செவிலியர்கள் நோயாளிகளைப் பராமரித்து வருகிறதை நான் பாராட்டுகிறேன். மருத்துவமனையின் இதயத் துடிப்பே செவிலியர்கள் தான்’, என்றார்.
நிகழ்ச்சியின்போது செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தின விழா உறுதிமொழி எடுத்தனர். அதனைத்தொடர்ந்து மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி ‘கேக்’ வெட்டி செவிலியர்கள் அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, மருத்துவ நிலைய அதிகார் டாக்டர் இளங்கோ, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்