search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramasamy Raja Polytechnic"

    • ராமசாமி ராஜா பாலிடெக்னிக்கில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
    • ஏற்பாடுகளை மின்னியல் பேராசிரியர் வேல்முருகன், மெக்கானிக்கல் துறைத்தலைவர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம், இந்திய பொறியாளர்கள் அமைப்பு இணைந்து பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கை நடத்தியது. இதில் 25 பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் பங்கேற்று கட்டுரையை சமர்ப்பித்தனர். ெதாடக்க விழாவில் பி.ஏ.சி.ஆர். கல்வி அறக்கட்டளை தலைமை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ், முதல்வர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். நிறைவு விழாவில் மதுரை பிரிவு பொறியாளர்கள் அமைப்பை சேர்ந்த ராஜயோகன் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

    சிவில் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, மாடர்ன் ஆபிஸ் பிராக்டிஸ் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, மெக்கானிக்கல் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு நெல்லை சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி, எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு விருதுநகர் வி.எஸ்.வின் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு மீனாட்சியாபுரம் அம்மையப்பர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மாணவ-மாணவிகள் பெற்றனர். விழா ஏற்பாடுகளை மின்னியல் பேராசிரியர் வேல்முருகன், மெக்கானிக்கல் துறைத்தலைவர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை ஆட்சி மன்ற குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

    ×