என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "rat infestation"
- எலிகள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும்.
- எலி அதிகமாகிவிட்டாலே கிட்சன் நாசமாகிவிடும்.
எலிகள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும். எலி அதிகமாகிவிட்டாலே கிட்சன் நாசமாகிவிடும். எலி, கரப்பான் பூச்சி போன்றவை வீட்டுக்குள் நுழைந்து விட்டாலே வீடு அசுத்தமாவதோடு பல்வேறு கொடிய நோய்க்கிருமிகளையும் அது பரப்பி விடும். குறிப்பாக எலிகள் பிளேக் வைரசை பரப்பும் ஆபத்து அதிகம். அதனால் முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதும் வீட்டில் உள்ள எலிகளை உடனடியாக விரட்டுவதும் மிக அவசியம்.
வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் பீநட் பட்டர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மிகப் பிடிக்கும். அதேபோல தான் பீநட் பட்டர் உங்களுடைய வீட்டில் உள்ள எலிகளுக்கும் பிடிக்கும்.
பொதுவாக எலிகளை பிடிக்க வீட்டில் எலிப்பொறியில் தக்காளி அல்லது தேங்காய் துண்டு, கருவாடு ஆகியவற்றை வைப்பதுண்டு. ஆனால் எலிப்பொறியில் சிறிதளவு பீநட் பட்டர் தடவி, அதன் அருகிலும் சிறிது பீநட் பட்டரை உள்ளுக்குள் வைத்துவிடுங்கள். பீநட் பட்டரை சாப்பிட முயற்சிக்கும்போது அதில் உள்ள பிசுபிசுப்புத் தன்மையால் சிறிது நேரம் நன்கு அவற்றின் கால்கள் மாட்டிக் கொள்ளும். அடுத்த நாள் காலையில் எலிப்பொறியில் நிச்சயம் எலி மாட்டியிருக்கும்.
எப்படி விரட்டுவது?
புதினா
புதினா இலைகள் எலிகளுக்கு எதிரி என்றே சொல்லலாம். புதினா இலைகளில் இருந்து வரும் நல்ல நறுமணம் எல்லோருக்கும் பிடிக்கும். எலி அடிக்கடி வந்து போகும் இடங்களில் ஃபிரஷ்ஷான புதினா இலைகளைக் கசக்கி போட்டு வைக்கலாம். அதேபோல புதினா சேர்க்கப்பட்ட டூத்பேஸ்ட்டுகள் கடைகளில் நிறைய கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, எலி அடிக்கடி வந்து போகும் இடங்களில் சிறிய சிறிய உருண்டைகளாக தடவி வைக்கலாம். புதினாவின் வாசனையில் எலி மயங்கிவிடும்.
பிரிஞ்சுஇலை
பிரியாணி இலை என்று அழைக்கப்படுவது தான் பிரிஞ்சி இலை. இதில் நல்ல வாசனை இருக்கும். பிரியாணி, மாமிச உணவுகள் செய்யும்போது வாசனைக்காகவும் ஜீரண சக்திக்காகவும் சேர்த்துக் கொள்ளப்படும் வாசனை மிகுந்த இலை தான் இந்த பிரிஞ்சி இலை.
இந்த இலைகளில் இருந்து வரும் நறுமணம் எலிகளுக்குப் பிடிக்காது. பிரிஞ்சி இலையை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்தோ அல்லது கொரகொரப்பான பொடியாகவோ செய்து எலி வரும் இடங்களில் ஒரு பேப்பரில் அல்லது தட்டில் போட்டு வைத்துவிட வேண்டும். எலிகள் அந்த இலைகளை நுகரும்போது மயங்கிவிடும். இதனால் எலி மறுபடியும் வராது.
கம்பி வலை
பொதுவாக வீட்டில் ஏதேனும் சில வழிகளை எலிகள் நுழைவதற்காகத் தேர்வு செய்து வைத்திருக்கும். அந்த வழித்தடங்களைக் கண்டு பிடித்துவிட்டால் போதும் நீங்கள் உங்களுக்கு சவால் விடும் எலிகளை மிஞ்சி விடலாம். மெல்லிய இரும்பு அல்லது எஃகினால் ஆன கம்பி வலைகள் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வீட்டில் எலிகள் நுழையும் ஓட்டை, வாஷ்பேஷன் டியூப் போன்ற இடங்களில் அடைத்து வைக்க வேண்டும். எலிகள் உள்ளே நுழையாமல் இருக்கும். சில சமயங்களில் நுழைய முயற்சி செய்யும் போது எலிகளின் கால்கள் வலைக்குள் மாட்டிக் கொள்ளும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா எல்லோருடைய வீடுகளிலும் வைத்திருப்பது மிகவும் நல்லது. இது பாத்திரங்கள் சுத்தம் செய்வது தொடங்கி, வீட்டை சுத்தப்படுத்த, கறைகளை நீக்க, சருமத்துக்கு பயன்படுத்த என பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுகின்றன. எலிகளை விரட்டுவதிலும் பேக்கிங் சோடாவிற்கு மிக முக்கியப் பங்குண்டு. எலிகள் அடிக்கடி வரும் இடங்களில் பேக்கிங் சோடா கரைசலை தெளித்து விட வேண்டும். பேக்கிங் சோடாவில் சிறிது வினிகர் சேர்த்தும் தெளிக்கலாம். அது இன்னும் விரைவான பலன்களைத் தரும்.
- மோகனூர் சாலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
- இந்த மருத்துவ மனையின் ஒரு பகுதியில் பச்சிளம் குழந்தைகள் வார்டு உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மோகனூர் சாலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனையின் ஒரு பகுதியில் பச்சிளம் குழந்தைகள் வார்டு உள்ளது. இங்கு நாமக்கல் மாவட்டம் முழுவ தும் இருந்து தினசரி ஏராளமான பெண்கள் பிரசவத்திற்கு வருகின்றனர்.
இந்த நிலையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் எலி தொல்லை அதிகம் உள்ள தாக அங்கு குழந்தையுடன் சிகிச்சை பெறும் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரசவம் முடிந்து பச்சிளம் குழந்தைகளுடன் வார்டில் அனுமதிக்கப்படும் பெண்களின் உடைமைகள், குழந்தைகளுக்கான மெத்தை விரிப்புகள், தலையணை மற்றும் உணவு பொருட்களை அங்கு உலவும் எலிகள் கடித்து நாசம் செய்கின்றன.
எலிகளின் கழிவுகள் குழந்தைகளின் மெத்தை விரிப்புகளில் பட்டு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மருத்து வமனை நிர்வாகத்தினர் எலி தொல்லையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்