என் மலர்
நீங்கள் தேடியது "rat medicine"
- காலாப்பட்டு அருகே பல் வலியால் அவதியடைந்ததால் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமிக்கு பல் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பாலில் எலி மருந்து கலந்து குடித்து விட்டார்.
புதுச்சேரி:
காலாப்பட்டு அருகே பல் வலியால் அவதியடைந்ததால் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காலாப்பட்டு அருகே பிள்ளைசாவடி தெருக்குளம் வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி (வயது32). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். முருகன் கடப்பாக்கத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக லட்சுமி பல்வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பல்வலி முற்றிலுமாக குணமாகவில்லை. அடிக்கடி பல் வலி ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமிக்கு பல் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பாலில் எலி மருந்து கலந்து குடித்து விட்டார்.
பின்னர் இதுபற்றி அதே பகுதியில் வசிக்கும் தனது தந்தை கோவிந்தசாமிக்கு எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றதை போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனே அவரது தந்தை கோவிந்தசாமி விரைந்து வந்து மயங்கி கிடந்த லட்சுமியை அவரது தாய் மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு லட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் லட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
- வாலிபர் காதலியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லூர்:
விழுப்புரம் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த என்ஜினீயரிங் மாணவி குடும்பத்துடன் தலை மறைவாகிவிட்டார்.
விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் பிளஸ்-2 வரை படித்து விட்டு, தனது வீட்டில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய மாணவி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டுபடித்து வருகிறார்.
இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனிலும் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. காதலுக்கு வாலிபர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே கடந்த சில நாட்களாக வாலிபர், தனது காதலியுடன் பேசுவதை தவிர்த்தார். இருப்பினும் அந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.
ஆனால் வாலிபரோ, இனிமேல் பேசவும் மாட்டேன், உன்னை திருமணமும் செய்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் மாணவி, தனது தோழிகள் மற்றும் உறவினர்களிடம் கூறி புலம்பியுள்ளார். அப்போது, இருவரில் (காதலன்-காதலி) யாரேனும் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வது போல் நடித்தால் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று யோசனை கூறியுள்ளனர்.
அதன்படி காதலனை தனது வீட்டிற்கு மாணவி அழைத்தார். அவரும் அங்கு சென்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது மாணவி, தனது காதலனுக்கு டீ போட்டுக்கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்தார்.
அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது. அப்போதுதான் அந்த மாணவி, டீயில் எலி மருந்து (விஷம்) கலந்து கொடுத்ததாக கூறினார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதனிடையே காதலனின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்மூலம் மாணவி தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என்று கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மாணவி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். அவர்கள் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை.
இதனால் யாரிடம் விசாரணை நடத்துவது என போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.
- அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவாணர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (வயது 23). இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் இருந்த அசோக் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் தெற்குமாட வீதியை சேர்ந்தவர் கண்ணப்பன் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காயத்திரி (வயது22). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவிக்கிடேயே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த காயத்திரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலிமருந்தை (விஷம்) தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கதினர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை காயத்திரி பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலய்யன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் மேட்டுப்பாளையம் அருகே தர்மாபுரி கண்ணதாசன் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது56), டெய்லர். இவருக்கு அஞ்சலாட்சி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.
இதற்கிடையே மதுகுடிக்கும் பழக்கத்தினால் ஆறுமுகத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நோய் கொடுமை அதிகமானதால் விரக்தி அடைந்த ஆறுமுகம் வீட்டில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் ஏட்டு சக்திமுருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை வீராம்பட்டினம் சிவாஜி நகரை சேர்ந்தவர் ஆனந்து. சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி செவ்வந்தி (வயது 24) இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. இதற்கிடையே செவ்வந்தி ஒற்றை தலைவலியால் அவதி அடைந்து வந்தார். மருந்து- மாத்திரை சாப்பிட்டும் நோய் குணமாகவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று செவ்வந்திக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செவ்வந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி பேஸ்டை (விஷம்) தின்று விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த செவ்வந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை செவ்வந்தி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.