என் மலர்
நீங்கள் தேடியது "ration rice-kerosene"
- சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரேசன் அரிசி மற்றும் ரேசனில் வழங்கப்படும் மண்எண்ணை உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ஒரு வீட்டில் சுமார் 95 மூட்டைகளில் 4,750 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
நெல்லை:
சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரேசன் அரிசி மற்றும் ரேசனில் வழங்கப்படும் மண்எண்ணை உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரேசன் அரிசி சிக்கியது
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான போலீசார் அங்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். சிவகுருநாதபுரம் திருமலை ஆண்டவர் கோவில் தெருவில் சோதனை செய்தபோது, ஒரு வீட்டில் சுமார் 95 மூட்டைகளில் 4,750 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் அந்த வீட்டின் மற்றொரு அறையில் 160 கிலோ ரேசன் கோதுமையும், 17 லிட்டர் ரேசன் மண்எண்ணையும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
2 பேர் கைது
பின்னர் அவற்றை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில், சிவகுருநாதபுரத்தை சேர்ந்த பழனிசாமி(வயது 74), தங்கபாண்டி(55) ஆகியோர் என்பதும், அவர்கள் குறைந்த விலையில் வீடுகளில் அரிசிகளை வாங்கி கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மொபட்டுகள் மற்றும் ஒரு மினி லோடு வேனையும் பறிமுதல் செய்தனர்.