search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reconstruction work"

    • வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.
    • ஏறத்தாழ 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிட்டன.

    வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.8.14கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை இன்று (09.07.2024) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வைத்திநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சதீஷ்குமார், மோகனகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் கேரள மாநில தொடர்பு அலுவலர் உண்ணிகிருஷ்ணன், ஆகியோர் உடனிருந்தனர்.


    பின்னர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

    1924ஆம் ஆண்டு வைக்கத்தில் உள்ள கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம். இதற்காக அப்பகுதி தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள். முக்கிய தலைவர்கள் கைதான நிலையில் போராட்டத்தை தொடர்ந்து, தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் சென்று அந்தப் போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார்.

    அதன் நினைவாக, 1985 ஆண்டு கேரளா அரசு வழங்கிய நிலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டது. மேலும், அங்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நூலகம், அவர் பயன்படுத்திய பொருட்கள், அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள், வைக்கப்பட்டிருந்தது. நினைவகம் கட்டப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆனதால், அதனை இன்றைய காலகட்டத்திற்கு, ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்கள்.

    இப்புனரமைப்பு பணிகளுடன், அதிக புத்தகங்களை கொண்டதாக நூலகம் விரிவுப்படுத்தப்பட்டு அமைக்கப்படவுள்ளது. மேலும், பெரியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக விடுபட்டிருந்த புகைப்படங்களும் அமைக்கப்படவுள்ளது. காலத்தால் அழியாத ஒரு நினைவு சின்னமாக விளங்கும் வகையில் இதனை அமைப்பதற்கான காரணம், கோயிலில் ஒரு குறிப்பிட்ட சமூகம் நுழையக்கூடாது என அந்த காலத்தில் அறிவித்திருந்த சமயத்தில், மகாத்மா காந்தி அவர்களின் உத்தரவை ஏற்று தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். கருதப்படுகின்றது. இது ஒரு சமூக நீதி போராட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புகள் பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஏறத்தாழ 95 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டன.

    பெயிண்டிங், மின்இணைப்பு பணிகள் மழையின் காரணமாக தாமதம் ஆகியுள்ளன. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

    • கால்வாயில் பக்கவாட்டு சுவர்கள் பல இடங்களில் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.
    • வரும் ஜூன் மாதத்தில் வைகை அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் பிக்கப் அணையை அடைந்து அங்கு இருந்து தண்ணீரை பிரித்து பாசன கால்வாய் வழியாகவும், ஆற்றின் வழியாகவும் செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது.

    மதுரை, திண்டுக்கல் மாவட்டத்துக்கு செல்லும் நீர் விரயமாகாமல் விரைந்து செல்ல பல ஆண்டுகளுக்கு முன் வைகை அணை அருகே பேரணை மெயின் கால்வாய் அமைக்கப்பட்டது. தற்பொழுது தண்ணீர் செல்லும் கால்வாய் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீர் வளத்துறை மூலம் ரூ.23 கோடியே 98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வைகை அணை அருகே பிக்கப் அணையில் தொடங்கி சங்கரமூர்த்தி பட்டி, அணைக்கரைப்பட்டி, மூணாண்டிப்பட்டி, தர்மத்துப்பட்டி, விராலிப்பட்டி, விருவீடு ஆகிய ஊர்களை கடந்து பேரணையில் சேர்கிறது. கால்வாயில் பக்கவாட்டு சுவர்கள் பல இடங்களில் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.

    எனவே சேதம் அதிகமாக உள்ள இடங்களில் கால்வாய் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஜூன் மாதத்தில் வைகை அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். அதற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் பணிகள் முடியவில்லை என்றால் நீர் திறப்பு காலத்திற்கு மீண்டும் நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆனைக்குட்டம் அணையை புனரமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த திட்டம் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் அணையில் ரூ.49கோடியில் புனரமைக்கப்படும் பணி தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனைக்குட்டம் அணையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அணையின் தன்மை, மதகில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து செயற்பொறியாளர் மூலம் அணை பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பு கண்காணிப்பு பொறியாளரை தொடர்பு கொண்டு இந்த திட்டம் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், உதவி செயற்பொறியாளர் அமுதா, உதவி பொறியாளர் சுந்தரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆய்வின் போது, காங்கயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    • கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 கோடியில் புனரமைப்பு பணி நடக்கிறது.

    காங்கயம்

    காங்கயம் நகராட்சியில் பதுமன் குளம் உள்ளது. இந்த குளம் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 கோடியில் புனரமைப்பு பணி நடக்கிறது. இந்த பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சி 18-வது வார்டு அகிலாண்டபுரத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4கோடியில் பதுமன் குளம் புனரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த குளத்தினை தூர்வாரி குளத்தினை சுற்றியுள்ள கரைகளை கான்கிரீட் சுவர் கொண்டு பலப்படுத்தும் பணிகள், குளத்தினை சுற்றிலும் மின் விளக்குகள் அமைத்தும், கம்பிவேலிகள், சுற்றிலும் பேவர் பிளாக் சாலைகள் அமைத்தும், குளத்தின் முகப்பு பகுதியில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல்கள் அமைக்கப்படவுள்ளது. மேலும் கழிப்பிடங்கள், வாகனங்கள் நிறுத்தம், காவலர் அறைகள் அமைக்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, காங்கயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மூலி குளத்தை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ. 59. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • காங்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மூலிகுளத்தை புனரமைத்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று மூலி குளத்தை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ. 59. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க. செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் புனரமைப்பு பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.மூலிகுளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்தல், உட்புற கற்கள் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பி.ஆர். செந்தில்குமார்,  வாலிபாளையம் பகுதி செயலாளர் மு.க.உசேன், 33-வது வார்டு செயலாளர் ஸ்டார் மணி என்ற பொன்னுச்சாமி, பகுதி துணை செயலாளர் கோகுலகிருஷ்ணன், வார்டுபிரதிநிதிகள் தங்கவேல், சுப்பிரமணி, தியாகராஜன், அரிசி மணி, ஒர்க்‌ஷாப் வினோத், 33வது வார்டு தகவல் தொழில் நுட்பம் மணிகண்டன், ஆலய ரவி, பஞ்சாயத்து தலைவர் எம். ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நொய்யல் வீதி ரைஸ்மில் காம்பவுண்ட் பகுதியில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.39.50 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் காங்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

    • பாகூர் தொகு–திக்குட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
    • இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் தொகு–திக்குட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டிடத்தை புனரமைத்து மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியால், பொதுப்பணித்துறை சார்பில் இப்பள்ளி கட்டிடத்தை ரூ.35 லட்சம் செலவில் புதுப்பித்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ஜெயமாறன்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கட்டிட ஒப்பந்ததாரர் ஆனந்தன், தி.மு.க., தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜூலை 9-ந்தேதி மறுகட்டமைப்புக்கான கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • பராமரிப்பு நிதியை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதை இக்குழு தீர்மானிக்கும்.

    உடுமலை :

    உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய எஸ்.எம்.சி., குழுக்கள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஏற்படுத்தப்பட்டன.அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஜூலை 9-ந்தேதி மறுகட்டமைப்புக்கான கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு ஒரு வாரம் முன்பே தகவல் தெரிவிக்கப்படும். இது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஏற்கனவே நடத்தப்பட்டன.

    இது குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 86 உயர்நிலை மற்றும் 76 மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், துணைத்தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், 12 பெற்றோர் பிரதிநிதிகள், ஒரு ஆசிரியர், தலைமையாசிரியர், கல்வியாளர் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர் என 20 பேர் கொண்ட குழு உருவாக்கப்படுகிறது.

    பராமரிப்பு நிதியை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதை இக்குழு தீர்மானிக்கும். பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதி, வகுப்பறை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை, சுற்றுச்சுவர் இல்லை, இரவு பாதுகாவலர் இல்லை, பெண் குழந்தைகளுக்கு இன்சினரேட்டர், சானிட்டரி நாப்கின் வசதியின்மை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    தஞ்சாவூரில் மின்னல் தாக்கி சேதம் அடைந்த பெரியகோவில் கோபுர சிற்பத்தை பழமை மாறாமல் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் புனரமைக்கும் பணிக்காக சாரம் அமைக்கும் பணி தொடங்கியது.
    தஞ்சாவூர்:

    மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில், ஆயிரம் ஆண்டுகளை கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து இருக்கிறது. தனித்துவமான கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவிலின் முகப்பில் கேரளாந்தகன் கோபுரமும், அடுத்ததாக ராஜராஜன் கோபுரமும் உள்ளது.

    பெருவுடையார் சன்னதிக்கு மேல் பகுதியில் 216 அடி உயர கோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோவிலின் முகப்பில் உள்ள கேரளாந்தகன் கோபுரத்தின் முதல் தளம் தவிர மற்றவை சிறப்பான தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    5-ந் தேதி தஞ்சையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கேரளாந்தகன் கோபுரத்தில் மின்னல் தாக்கியதில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கீர்த்தி முகத்தில் இருக்கும் சிற்பம் உடைந்து சேதம் அடைந்தது.

    3-வது முறையாக மின்னல் தாக்கியதில் கோபுரத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து தொல்லியல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கோபுரத்திற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

    இதையடுத்து சேதம் அடைந்த சிற்பத்தை பழமை மாறாமல் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் புனரமைக்கும் பணிக்காக சாரம் அமைக்கும் பணி தொடங்கியது.

    90 அடி உயரத்திற்கு இரும்பு கம்பிகளால் ஆன சாரம் அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சாரம் அமைக்கப்பட்டவுடன் சிற்பத்தை புனரமைக்கும் பணி நடைபெறும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×