search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Refreshment Scheme"

    • இலவச நல உதவிகள்-காலை சிற்றுண்டி திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
    • இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

    மதுரை

    மதுரை மங்கலபுரம் பகு–தியில் உள்ள கேப்ரன் ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 188-வது விளை–யாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பி–னரும், கிறிஸ்தவ நல் லெண்ண இயக்க தலைவ–ருமான இனிகோ இருதய–ராஜ் எம்.எம்.எல்.ஏ., தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் மற்றும் ஜெனிவா உலக திருச்சபை மாமன்ற உறுப்பினர் வழக்க–றிஞர் பெர்னாண்டஸ் ரத் தினராஜா மற்றும் மதுரை ராமநாதபுரம் திருமண்டில பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த–னர்.

    இதில் சிறப்பு விருந்தின–ராக கலந்து கொண்ட தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தின–ராஜா பேசுகையில், தமிழகத் தில் முதலமைச்சர் மு.க.–ஸ்டாலின் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார்.

    அரசு பள்ளிகளில் பயி–லும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் வழங்கப்படும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாண–வர்களுக்கும் வழங்க வேண் டும்.

    அதுபோல அரசு பள்ளி–களில் பயிலும் மாணவர்க–ளுக்கு வழங்கப்படும் இல–வச நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி ஆகியவையும் அரசு உதவி பெறும் சிறு–பான்மை பள்ளிகளான கிறிஸ்தவ பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து விரை–வில் இதனை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    இதையடுத்து தலைமை உரையாற்றிய இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக முதலமைச்சர் மு.க.ஸ்டா–லின், சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது, நான் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். இலவச நலத்திட்டங்கள் மற்றும் காலை சிற்றுண்டி ஆகிய திட்டங்களை சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசி இருக்கிறேன். எனவே முதலமைச்சர் மு.க.–ஸ்டாலின் இந்த கோரிக்கை–களை விரைவில் நிறை–வேற்றி அதற்கான அறி–விப்பை வெளியிடுவார் என்று உறுதியாக நம்புகி–றேன்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    இதைத்தொடர்ந்து பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஜெபம் செய்து ஆசிர்வாதம் வழங்கினார். விழாவில் பல்வேறு போட்டி–களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை பார்ச் சூன் பொன்மலர் ராணி வரவேற்று பேசினார்.

    முடிவில் பள்ளி தாளா–ளர் அருள் தாஸ் நன்றி கூறினார். இந்த விழாவில் மதுரை ராமநாதபுரம் திரு–மண்டல முதன்மை பணியா–ளர்கள் மற்றும் போதகர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு செய்ய வேண்டும்
    • கதிர் ஆனந்த் எம்.பி. பேச்சு

    வேலூர்:

    வேலூர் காட்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடக்க விழா இன்று காலை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் கதிர் ஆனந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    வேலூர் மாநகராட்சியில் உள்ள 48 பள்ளிகளில் சிறுவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் உன்னதமான திட்டம் ஆகும். காலையில் பள்ளிக்கு வரும் சிறுவர்கள் உணவு அருந்தாமல் வருகின்றனர். இதனால் 11 மணிக்கெல்லாம் அவர்கள் மயக்கம் அடைந்து விடுகின்றனர். இதனால் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தில் கற்றல் திறன் இருக்காது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தால் மாணவர்களின் கல்வி இடை நிற்றல் தவிர்க்கப்படும்.

    தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தால் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் ரூ 1000 வழங்கும் திட்டம் சமூக சிக்கலுக்கு தீர்வு காணும் புதுமையான திட்டம்.புதுமைப்பெண் திட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல்.

    வேலூர் மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது. அதனை மாற்றி தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக கொண்டு வரப்படும் இவ்வாறு பேசினார்.

    இதையடுத்து கதிர் ஆனந்த் எம்.பி பேசுகையில், ஒரு கட்சி தேர்தலில் போட்டியிடும் போது பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கின்றனர். சில கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இல்லை.

    ஆனால் தி.மு.க தேர்தல் அறிக்கையில் இல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் சிறுவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் தேர்தல் வாக்குறுதியில் கூறப்படாத ஒரு திட்டமாகும். இந்தியாவிலேயே பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் மாநிலம் தமிழகம் மட்டும்தான்.

    இந்த திட்டம் சிறப்பாக செயல்பட அந்தந்த பகுதி பிரதிநிதிகள் பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அணைக்கட்டு பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×