search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reporters"

    • 2012-ம் ஆண்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
    • 2004 முதல் பணியில் அமர்த்தப்பட்ட 5,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம், நிர்வாக சீர்கேட்டால் 2012-ம் ஆண்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. எனவே 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ெஜயலலிதா பல்கலைக்கழகத்தை அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதற்காக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவதாஸ் மீனாவை நிர்வாக அதிகாரியாக நியமித்தார்.

    நிதி சிக்கலில் இருந்து மீட்கும் வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசுக்கு அவர் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் மிகை பணியாளர்களாக பணியாற்றிய 1,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 3,200க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத ஊழிய ர்களை தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து அயல் பணிக்கு அனுப்பினர்.கடந்த 2010-ம் ஆண்டு தனியார் நிர்வாகத்தில் பல்கலை கழகம் இருந்த போது 206 பேர் அலுவ லக உதவியாளர் முதல், தோட்ட பணியாளர் வரை மாதம் 1,500 முதல் 5,000 ரூபாய் வரை சம்பளத்தில் தொகுப்பூதிய அடிப்ப டையில் தற்காலிக பணியில் சேர்க்கப்பட்டனர்.

    ஆட்சி மன்ற குழு பரிந்து ரையின்படி 2 ஆண்டு களில் பணி நிரந்தரம் செய்ய ப்பட்டு காலமுறை ஊதியம் கிடைக்கும் என்ற நம்பி க்கை, அன்றைய நிர்வாகம் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், எதிர்பாராத வகையில், 2012ம் ஆண்டு ஏற்பட்ட நிதி சிக்கலில் பல்கலை அரசு ஏற்றதால், தொகுப்பூதியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாமல் போனது. கடந்த 12 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றினாலும், பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றி வந்தனர். பணி நிரந்தரம் கோரிக்கையை கடந்த ஆட்சியில் இருந்தே வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் இந்த மாதத்தோடு, இவர்களுக்கு வேலை இல்லை என எடுத்த ரகசிய முடிவு, ஊழியர்க ளுக்கு வாய்மொழியாக கூறப்பட்டுள்ளது. இதனால் பல்கலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு ள்ளது. ஊழியர்கள் போரா ட்டத்தில் இறங்க உள்ளனர். குறிப் பாக 10 ஆண்டுக்கு பின் அனைத்து ஊழியர் சங்கங்களும் கூட்டாக இணைந்து மீண்டும் 'ஜாக்' கூட்டமைப்பை உருவாக்கி தொடர்ச்சியாக போராட்ட ங்கள் நடத்த முடிவு செய்து ள்ளனர்.  இதுகுறித்து பாதிக்க ப்பட்ட தொகுப்பூயர்களில் ஒருவர் முத்துலிங்கம் கூறியதாவது:-

    அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொகுப்பூதிய ஊழியர்களாக 206 பேர் 2010-ல் தி.மு.க., ஆட்சியின் போது பணியில் சேர்ந்தோம். இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் என்ற அடிப்படையில் பணியில் சேர்ந்தோம். கடந்த 2004 முதல் பணியில் அமர்த்தப்பட்ட 5,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்; நாங்களும் நிரந்தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2013ல் அ.தி.மு.க., அரசு அரசுடமை யாக்கிய பின், பல்கலைக் கழகம் நிர்வாகம், நிதி நெருக்கடிகளை காரணம் காட்டி, பணி நிரந்தரத்தை நிறுத்தி வைத்தது. ஆனால் இதுவரை எங்களை, பணி நிரந்தரம் செய்யவில்லை. நாங்கள் பணியில் சேரும் போதும் தி.மு.க., ஆட்சி தான்; தற்போதும் அதே ஆட்சிதான். பணி நிரந்தரம் செய்யாமல் சொற்ப ஊதியமாக கொடுத்து 8 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    ×