என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rites Scheme"
- அரசு திட்டங்களும் எளிதாக மாற்றுத்திறனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
- ரைட்ஸ் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்கப்படவேண்டும்.
தாராபுரம் :
மாற்றுத்திறனாளிகளுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் ரைட்ஸ் திட்டம் துவங்கப்படும் என 2021 பட்ஜெட்டில் நிதியமைச்சர் தியாகராஜன் அறிவித்தார். நோய் தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவை, வேலைவாய்ப்பு உள்பட அனைத்து அரசு திட்டங்களும் எளிதாக மாற்றுத்திறனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.இதற்காக ஒன்றிய அளவிலான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.திட்டத்துக்காக உயர்மட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் திட்டம் முழு செயல்வடிவம் பெறாமலேயே உள்ளது.
வருகிற 17ந் தேதி சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் துறைக்கான மானிய கோரிக்கையில் ரைட்ஸ் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்கப்படவேண்டும் என்கின்றனர் திருப்பூர் மாற்றுத்திறனாளிகள்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், அடையாள அட்டை பெறுவது உள்பட எந்த ஒரு அரசு திட்டங்களை பெறுவதற்கும் மாவட்ட அளவிலான அலுவலகத்தையே நாடவேண்டியுள்ளது. ரைட்ஸ் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். ஒன்றிய அளவில் மையங்கள் அமைவதால் அனைத்து அரசு திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் அருகாமையிலேயே எளிதில் பெறமுடியும் என்றனர்.