search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road maintenance work"

    • மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
    • முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.

    கூடுவாஞ்சேரி:

    வண்டலூர் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பிரதான சாலையை ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கவும், வண்டலூர்- வாலாஜாபாத் நோக்கி செல்லும் மேம்பாலம் கீழ்பகுதியில் காஞ்சிபுரம் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைப்ப தற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா காட்டாங் கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான வி.எஸ்.ஆராமுதன் தலைமையில் நடைபெற்றது. வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி விஜயராஜ், தி.மு.க. கிளை செயலாளர்கள் சத்ய நாராயணன், வாசு, காசி, லோகநாதன், குணசேகரன், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் செல்வம் எம்.பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக பூமி பூஜை போட்டு, அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினர்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ட ராகவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கெஜலட்சுமி சண்முகம், நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீசீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வண்டலூர் குணசேகரன், காரணைப் புதுச்சேரி பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.

    • அங்காளன் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    • இளநிலைப் பொறியாளர் தமிழரசன் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை செல்லிப்பட்டு சாலை, விநாயகம்பட்டு, சோரப்பட்டு இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்து டனே அவ்வழியாக பொதுமக்கள் வாகனத்தில் சென்று வந்தனர் இந்நிலையில் சாலையை சீரமைத்து தரக்கோரி தொகுதி எம்.எல்.ஏ. அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து பொதுப்பணி துறையின் மூலம் ரூ. ஒரு கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு செல்லிப்பட்டு, விநாயகபட்டு , சோரப்பட்டு இணைப்பு சாலையை மறு சீர் அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அங்காளன் எம்.எல்.ஏ.கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜீ, உதவி பொறியாளர் சீனிவாச ராம், இளநிலைப் பொறியாளர் தமிழரசன் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்ற நிலையில் வரும் 6-ம் தேதி திருவண்ணாமலை தீப திருவிழா நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    புதுவை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பல தடவை தடைபட்டு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது இதனால் ஆங்காங்கே சில இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்ற நிலையில் வரும் 6-ம் தேதி திருவண்ணாமலை தீப திருவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழகஆளுநர் ரவி கலந்து கொள்ள உள்ளார். மேலும் இதில் நீதிபதிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்னையில் இருந்து திண்டிவனம் , செஞ்சி வழியாகத்தான் திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும். இதனால் இப்போது தற்காலிகமாக பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    இந்தச் சாலையின் வழியாக திருவண்ணாமலை தீபத்தன்று சென்னை புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது

    • சாலை விரிவாக்கம் காரணமாக சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
    • போத்தனூர் சாலை விரிவாக்க பணியானது போத்தனூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்

     குனியமுத்தூர்,

    போத்தனூர் சாலை ஆனது பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் இணைப்பு திட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பலமுறை தோண்டப்பட்டு சரி செய்யாமல் குண்டும் குழியுமாக காணப்பட்டு வந்தது.

    இதனால் மழைநேரங்களில் சேரும் சகதியுமாக காணப்பட்டு, நீர் நிரம்பி குளம் போல் காட்சி அளித்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

    திருமலை நகர், நேரு நகர், வசந்தம் நகர் , கருப்பராயன் கோவில், சாய் நகர், உமர் நகர், ஜம்ஜம் நகர், சத்யா நகர், எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர் பகுதியில் வசிப்பவர்கள் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும். இப்பகுதியில் வசிக்கும் அனைவரும் போத்தனூர் சாலையை சீரமைக்க கோரி பலமுறை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் முதல் கட்டமாக நேற்று சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    குறிச்சி பிரிவிலிருந்து போத்தனூர் வரை கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சாலை விரிவாக்கம் காரணமாக சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.

    இது குறித்து 95-வது வார்டு கவுன்சிலரும், குறிச்சி பகுதி செயலாளருமான எஸ்.ஏ.காதர் கூறியதாவது:-

    போத்தனூர் சாலை விரிவாக்க பணியானது போத்தனூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இச்சாலையை சீரமைக்க கோரி ஒரு வருட காலமாக அதிகாரிகளிடம் பலமுறை நான் வலியுறுத்தி வந்தேன். ஆனால் அதிகாரிகள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

    அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முறையிட்டு, அவரே நேரடியாக அதிகாரிகளிடம் உத்தரவிட்டு, பின்னர் இறுதி முடிவுக்கு வந்தது. கோவை மாநகரில் 144 கிலோ மீட்டர் சாலை பணிகளுக்கு ரூபாய் 211.80 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். போத்தனூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இச்சாலை விரிவாக்க பணி துரிதமாக நடைபெற்று விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்பதையும் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கான சாலை பராமரிப்பு பணியில் முறைகேடு நடைபெறவில்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். #TamilnaduHighWays #MinisterJayakumar
    சென்னை:

    மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2012-2013-ம் ஆண்டில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை அனுபவமும், தொழில் நுட்ப ஆற்றலும் உள்ள ஒப்பந்ததாரர்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிக்க செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (பி.பி. எம்.சி.) என்ற நடைமுறை உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.

    இத்திட்டம் விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திலும் இவ்வாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறையின்படி, ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் ஐந்து ஆண்டு காலத்திற்கு சாலைகளை அடிப்படை சீரமைத்தல், காலமுறை பழுதுபார்த்தல், சிறு அளவிலான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல், அவசரகால சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிபடுத்துதல், சிறுபாலங்கள் கட்டுதல், பாலங்களை தேவைக்கேற்ப அகலப்படுத்துதல், தடுப்பு சுவர்களை அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல்;

    மேலும், சாலை பாதுகாப்பு பணிகளான கிலோ மீட்டர் கற்கள் அமைத்தல், எல்லைக் கற்கள் அமைத்தல், விபத்துகளை தவிர்க்க இரும்பு தடுப்புகள் அமைத்தல், உயர்மட்ட பெயர் மற்றும் வழிகாட்டு பலகைகளை அமைத்தல், சாலைகளின் மையத்திலும், ஓரங்களிலும் ஒளிரும் குறியீடுகளை அமைத்தல்,

    சாலை ஓரப்புதர்களை அகற்றுதல், தாழ்வான சாலை ஓரங்களை சீர்செய்தல், சாலைகளின் மையத்தடுப்பாண்களில் சேரும் மண்ணை அகற்றுதல், பாலங்களின் கீழ் தண்ணீர் செல்லும் பகுதிகளில் புதர்கள் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுதல், சாலை அமைத்த இடங்களில் கருப்பு வெள்ளை வர்ணம் பூசுதல், சாலைகளில் ஏற்படும் மேடுபள்ளங்களை சீர்செய்தல் ஆகிய பல்வேறு பணிகளையும் தொடர்ச்சியாக செய்யவேண்டும்.

    மழைக்காலங்களில் ஏற்படும் அனைத்து வகையான அவசர சாலைப் பணிகளையும் உடனுக்குடன் ஒப்பந்ததாரர் மேற்கொள்ள வேண்டும். இவ்வகையான ஒப்பந்தங்கள் மூலம் சாலைகள் பராமரிக்கப்படுவதால் சாலைகள் செம்மையாகவும், உடனுக்குடன் பழுது நீக்கப்பட்டு, செப்பனிடப்படுகின்றன.

    எனவே மத்திய அரசு இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவிகளை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த நடைமுறை செயல்திறன் சிறப்பாக உள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டு இருப்பதுடன் பல நாடுகளில் இது நடைமுறையில் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

    ஆனால் இந்த திட்டத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அந்தச் செய்தியில், தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு 5 கோட்டத்துக்காக ரூ.500 கோடிக்கு பதிலாக ரூ.2,083 கோடி அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நடை முறைக்கு பொருந்தாத ஒரு கற்பனை குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது. நிதி முறைகேடு என்பது தவறான தகவல் ஆகும்.

    அனைத்து பணிகளையும் உள்ளடக்கிய செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்திற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது. இப்படி இருக்கையில், சாதாரண பராமரிப்பு பணிக்கான மனிதவளக்கூறு மதிப்பீட்டை மட்டும் சுட்டிக் காட்டி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி கோட்டத்தில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (பி.பி.எம்.சி.) மூலம் பணியை மேற்கொள்ளாமல் தனித்தனியாக திட்டப் பணிகள் மூலம் சாலைகளை மேம்படுத்தி இருந்தால் ரூ.278 கோடி நிதி தேவைப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது பி.பி.எம்.சி. மூலம் ரூ.55.46 கோடியை அரசு சேமித்துள்ளது.

    அந்த வகையில் பொள்ளாச்சி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருது நகர் கோட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு ரூ.527.73 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TamilnaduHighWays #MinisterJayakumar
    ×