என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "roberry"
- சம்பவத்தன்று சிவா மற்றும் அவருடன் வேலை பார்க்கும் 3 வட மாநில தொழிலாளர்கள் வேலை முடிந்து நிறுவனத்தை விட்டு வெளியே வந்தனர்.
- அவர்களிடமிருந்து ஆதார் கார்டு மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நெல்லை:
பேட்டையை சேர்ந்தவர் சிவா. இவர் சத்யா நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
சம்பவத்தன்று சிவா மற்றும் அவருடன் வேலை பார்க்கும் 3 வட மாநில தொழிலாளர்கள் வேலை முடிந்து நிறுவனத்தை விட்டு வெளியே வந்தனர்.
அப்போது அவர்களை வழிமறித்து பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த நாகு என்ற நாகராஜ் (வயது 26), பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முத்து என்ற முத்தார் (22) மற்றும் சுடலை முத்து (34) ஆகிய 3 பேரும் சேர்ந்து அரிவாளை காட்டி மிரட்டி சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புடைய 4 செல்போன்கள் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த பேட்டை இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் போலீசார் நாகராஜ் உட்பட 3 பேரையும் ஒருமணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஆதார் கார்டு மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
கோவை
கோவை செல்வபுரம் திருநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ஞானசரஸ்வதி (வயது 65). இவர் கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அவரது வீட்டில் சி.சி.டி.வி காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவாகும் காட்சிகளை தனது செல்போனில் பார்க்கும்படி இணைத்து வைத்திருந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு அவர் தனது செல்போன் மூலம் சி.சி.டி.வி காட்சிகளை பார்த்தார்.
அப்போது வீட்டின் மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தது. மேலும் சி.சி.டி.வி காமிரா திருப்பி வைக்கப்பட்டு இருந்தது.இதனால், சந்தேகமடைந்த அவர் இது குறித்து உடனே செல்போன் மூலம் பக்கத்து வீட்டுக்காரர்களை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
அவர்கள் சென்று பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே பக்கத்து வீட்டினர் ஞானசரஸ்வதியிடம் அதனை தெரிவித்தனர். அவர் மதுரையில் இருந்து கோவைக்கு விரைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதும், தங்களது உருவம் சி.சி.டி.வி காமிராவில் பதிவாக கூடாது என்பதற்காக அதனை திருப்பி வைத்து விட்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து ஞானசரஸ்வதி செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- கடந்த 11-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பாப்பம்பட்டியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றார்.
- பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணாம் பாளையத்தை சேர்ந்தவர் அமர்நாத் சிங் (வயது 25). என்ஜினீயர். கடந்த 11-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பாப்பம்பட்டியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வளையல் உள்பட 34 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் வீட்டிற்கு திரும்பிய அமர்நாத் சிங் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அமர்நாத் சிங் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்க ப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் வீட்டில் 34 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளை யர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்