search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russian President"

    • உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 143 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் ரஷியாவை உலுக்கியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய 4 பேர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல், ரத்தம் தோய்ந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல். இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை சுட்டுக் கொன்று பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    எல்லையை கடக்க முயன்ற அவர் களை ரஷிய அதிகாரிகள் பிடித்தனர். பயங்கரவாதியாக இருப்பவர்கள், தாக்குதலுக்கு திட்டமிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதிகள் கொலைகாரர்கள், தவிர்க்க முடியாத விதியை எதிர்கொள்வார்கள்.

    உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    • செப்டம்பர் 9, 10 தேதிகளில் புது டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது
    • சீன-அமெரிக்க உறவு சமீப காலங்களில் சீர்குலைந்திருக்கிறது

    உலகின் 19 நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு ஜி20.

    உலக பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அமைக்கப்பட்ட இக்கூட்டமைப்பு, முதல் முறையாக 2008-ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் சந்தித்தது.

    தற்போது இம்மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் புது டெல்லியில் இதன் அடுத்த உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் புதினுக்கு பதிலாக ரஷிய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் ரஷியாவின் சார்பில் பங்கேற்பார் என ரஷியா அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    ரஷிய உக்ரைன் போரில், ரஷியாவிற்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டு வரும் நிலையில், ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பது தவிர்க்க முடியாததாகும். சமீப காலங்களாக வர்த்தக மற்றும் புவிசார் அரசியல் காரணங்களுக்காக சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கசப்பான நிலையை அடைந்திருக்கிறது.

    இப்பின்னணியில் அமெரிக்க அதிபரை சந்திப்பதை தவிர்க்கும் விதமாக, ரஷிய அதிபர் புதினை போல சீன அதிபரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன அதிபருக்கு பதிலாக அந்நாட்டு தூதர் லி கியாங், சீனாவின் சார்பாக புது டெல்லிக்கு வருகை தருவார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இது குறித்து சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த வெளியுறவு துறையின் செய்தித்தொடர்பாளர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    அண்மை காலங்களில், கடந்த 2022 நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் உள்ள பாலியில் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெர்மனியில் ஹிட்லர் பாடி டபுள்களை பயன்படுத்தினார்
    • ராணுவ உளவுத்துறை செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிபடுத்தினார்

    திரைப்படங்கள் உருவாக்கப்படும் போது ஒருவரை போன்றே அச்சு அசலாக தோற்றமளிக்கும் பாடி டபுள் எனும் மற்றொரு நபரை பல்வேறு காரணங்களுக்காக சில காட்சிகளில் பயன்படுத்துவது வழக்கம்.

    அவ்வாறு தோற்றமளிக்கும் பாடி டபுள் நபர்களை, பொது வெளியில் தனக்கு பதிலாக நடமாட விடும் வழிமுறையை இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் ஜெர்மனியில், ஹிட்லர் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தியதாக இன்றும் நம்பப்படுகிறது.

    ரஷிய அதிபர் புதின், எதிரிகளால் பொதுவெளியில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சி தன்னை போலவே தோற்றமளிக்கும் பாடி டபுள்களை பொதுவெளியில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

    நடை, உடை, பாவனை, பேசும் விதம் உட்பட அனைத்து விஷயங்களிலும் அவர்களுக்கு புதினை போலவே நடந்து கொள்ள பயிற்சியளிக்கப்பட்டு இருப்பதாக அத்த தகவல்கள் கூறின.

    புதின் ஒருசில பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து, தனக்கு பதிலாக தனது பாடி டபுள் ஒருவரை பயன்படுத்துகிறார் என கடந்த ஜூன் மாதம், உக்ரைன் ராணுவ உளவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி யூஸோவ் என்பவரும் உறுதிபட தெரிவித்திருந்தார்.

    ரஷிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இச்செய்திகளை முற்றிலுமாக மறுத்தார். இந்நிலையில் ரஷிய நாட்டின் தேசிய திட்டங்களுக்கான மையத்தின் ஒரு சந்திப்பில் புதின் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சி குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நேரத்தை தெரிந்து கொள்வதற்காக புதின் எதேச்சையாக தனது இடக்கரத்தை பார்க்கிறார். அக்கரத்தில் கடிகாரம் இல்லாததால் உடனடியாக தனது வலக்கரத்தை பார்த்து நேரத்தை தெரிந்து கொள்கிறார்.

    இதனையடுத்து, அந்நிகழ்ச்சியில் பங்கேற்றது புதின் அல்ல என்றும் அவரை போன்று தோற்றமளிக்கும் ஒரு பாடி டபுள் என்றும் இது சம்பந்தமாக இத்தனை காலம் வெளியான செய்திகள் உண்மை எனவும் இச்சம்பவம் குறித்து பலரும் விமர்சிக்கிறார்கள்.

    இடது கர பழக்கம் உள்ள புதின் தனது வலக்கரத்தில் கைக்கடிகாரம் அணிவது வழக்கம். எனவே நேரத்தை தெரிந்து கொள்ள இடக்கர பழக்கம் உள்ளவர்கள் வலக்கரத்தைதான் பார்க்க வேண்டும் எனும் கருத்தை இவர்கள் முன்வைக்கிறார்கள்.

    பல நாட்களோ, வாரங்களோ பொதுவெளியில் இருந்து அதிபர் புதின் காணாமல் போய், பிறகு திடீரென தோன்றுவதும் ரஷியாவில் சகஜமான ஒன்று என்பதால் இந்த விமர்சனங்களில் உண்மை இருக்கலாம் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.

    • மேக் இன் இந்தியா என்ற அவரது திட்டம் பொருளாதார ரீதியாக மிக முக்கியமானது.
    • பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த இந்தியா, அபரிமித வளர்ச்சியை அடைந்துள்ளது.

     மாஸ்கோ:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மாஸ்கோவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்து நவீன நாடாக மாறியுள்ள இந்தியா வளர்ச்சியில் அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்திய மக்கள் மற்றும் உறுதியான வளர்ச்சியே, அனைவருக்கும் இந்தியா மீதான மரியாதை மற்றும் அபிமானத்தை வழங்குகின்றன.

    இந்தியாவுடன் எங்களுக்கு (ரஷியாவிற்கு) சிறப்பான உறவு உள்ளது. இது பல தசாப்தங்களாக நெருங்கிய நட்பால் உருவாக்கப்பட்டது. நாங்கள் ஒருபோதும் கடினமான சிக்கல்களை எதிர்கொண்டதில்லை, ஒருவருக்கொருவர் ஆதரவளித்தோம், அது இப்போது நடக்கிறது. எதிர்காலத்தில் இது நடக்கும் என்று நான் நம்புகிறேன்.

    இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது, நாங்கள் வர்த்தக அளவை அதிகரித்துள்ளோம். இந்திய விவசாயத்திற்கு மிகவும் முக்கிய உரங்களின் விநியோகத்தை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன் அளவை 7.6 மடங்கு அதிகரித்துள்ளோம். விவசாய வர்த்தகம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. 


    பிரதமர் மோடி தனது நாட்டின் தேசபக்தர். மேக் இன் இந்தியா என்ற அவரது திட்டம் பொருளாதார ரீதியாகவும் நெறிமுறையிலும் மிக முக்கியமானது. அதன் எதிர்காலம் இந்தியாவுக்கே சொந்தம், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொள்ளலாம்.

    உள்நாட்டில் சில தடுப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் தனது தேசத்தின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் திறன் கொண்டவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். இவ்வாறு புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    • ஏழு மாதமாக நடைபெற்று வரும் போர் மூலம் நான்கு பிராந்தியங்கள் ரஷியா வசம் வந்தன.
    • ரஷியாவுடன் இணைவது குறித்து உக்ரைன் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    மாஸ்கோ:

    உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள்  வசம் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்கள் வந்துள்ளன. கடந்த ஏழு மாதமாக நடைபெற்று வரும் போர் மூலம் இந்த பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. அவற்றை சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் ஆணைகளில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். முன்னதாக இந்த 4 பிராந்தியங்களை  ரஷியாவுடன் இணைத்துக் கொள்வது குறித்து அந்த பகுதிகளை சேர்ந்த மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ள ரஷியா அங்கு பொதுவாக்கெடுப்பை நடத்தியது.

    இதில் அந்த பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான உக்ரைன் மக்கள், ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து முதல் கட்டமாக உக்ரைனின் இந்த 4 பிராந்தியங்களையும் சுதந்திர பிரதேசங்களாக ரஷியா அங்கீகரித்துள்ளது.

    அடுத்ததாக அவற்றை அதிகாரபூர்வமாக ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி ரஷிய அதிபர் மாளிகையில் இன்று கோலகலமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு பிராந்தியங்களின் தலைவர்கள் மாஸ்கோ சென்றுள்ளனர். இந்நிலையில் உக்ரைன் பகுதிகளில் ரஷியா நடத்திய வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும், மக்களை கட்டாயப்படுத்தி நடத்தப்பட்ட மோசடி என்றும் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • உக்ரைன் போர் குறித்து ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
    • ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

    வாஷிங்டன்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

    அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த பிறகு புதினும் மோடியும் நேருக்கு நேர் முதல் முறையாக சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, இது போருக்கான காலம் அல்ல என உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

    ஐ.நா. பொதுச்சபையின் 77-வது கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பேசுகையில், ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை வரவேற்றார்.

    இந்நிலையில், ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா வரவேற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன், நீண்ட காலமாக ரஷியாவுடன் உறவு பாராட்டி வரும் இந்தியாவின் பிரதமர், போரை முடிவுக்கு கொண்டு வருமாறு புதினிடம் வலியுறுத்தியது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.

    மாஸ்கோவில் நடந்த செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய 66 வயதான ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், 2-வது திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார். #VladimirPutin #LyudmilaPutina
    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (66). இவர் 1983-ம் ஆண்டு லியுத்மிலா புதினா என்பவரை திருமணம் செய்தார். அப்போது அவர் விமான பணிப்பெண்ணாக இருந்தார்.

    இவர்களுக்கு மரியா (32). கத்ரீனா (35) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு புதின் கடந்த 2014-ம் ஆண்டு தனது மனைவி லியுத்மிலாவை விவாகரத்து செய்தார்.

    இதற்கிடையே புதினுக்கும், ரஷிய முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (34) என்பவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை புதின் மறுத்தார்.

    அலினா 3 வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றவர் ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்க பதக்கங்களை வென்று இருக்கிறார். 2 தடவை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

    சமீபத்தில் மாஸ்கோவில் செய்தியாளர்கள் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட புதினிடம் நிருபர் ஒருவர் அவரது 2-வது திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார்.

    அதற்கு ‘‘நான் ஒரு மதிப்பிற்குரிய நபரை திருமணம் செய்ய இருக்கிறேன்’’ என புதின் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். ஆனால் அவரது பெயரை வெளியிட மறுத்துவிட்டார். #VladimirPutin #LyudmilaPutina
    அடுத்த ஆண்டு நடைபெறும் ரஷிய பொருளாதார மன்றத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்தார். #PutininIndia
    புதுடெல்லி:

    இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்தார். டெல்லியில் பிரதமர் மோடியுடன் நேற்று அவர் பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர், ரஷியாவில் அடுத்த ஆண்டு (2019) நவம்பர் மாதம் நடைபெறும் பொருளாதார மன்றத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதை பிரதமர் ஏற்றுக்கொண்டது தொடர்பான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

    இந்த சந்திப்பை தொடர்ந்து டெல்லியில் நடந்த வர்த்தக கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை பட்டியலிட்டார். மேலும் இவற்றை பயன்படுத்தி வர்த்தகம் செய்யுமாறு ரஷிய முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

    குறிப்பாக இந்தியாவில் ராணுவ தொழிற்பூங்கா அமைக்குமாறு ரஷிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, இதன் மூலம் இருநாட்டு உறவுகள் மேலும் விரிவடையும் என தெரிவித்தார். #VladimirPutin #PMModi #PutininIndia
    ×