search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sahitya akademi award"

    • 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை.
    • அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    விக்கிரவாண்டி:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து திருவாமத்தூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை. இது சட்டசபை இல்லை சாராய சபை. வேறு ஒன்றையும் பேசவில்லை. சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் இறந்துவிட்டான். குடிநீரில் கழிவு நீர் கலந்துவிட்டது. தண்ணீர் விஷம் ஆகிவிட்டது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.

    சாராயம், குடிநீர் அனைத்தும் இப்பொழுது விஷமாகிவிட்டது. இதை மாற்ற வேண்டும் பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு மாற்றம் வர வேண்டும் என சொல்கின்றனர்.

    அந்த மாற்றத்தை யார் கொண்டு வருவது, தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நாங்கள் தயாராக இல்லை, 7அடி தாண்டுவதற்கு 70 அடி பின்னோக்கி செல்ல வேண்டியது உள்ளது. மாற்றம் மாற்றம் என சொல்லிக் கொண்டிருந்தால் மாறாது மாற்றம் என்பது ஒரு செயல், நாம் தான் அதை மாற்ற வேண்டும். மாற்றத்தை தொடங்க வேண்டும் என்றால் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்,

    கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு 10 லட்சம், பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம், சாகித்யா அகாடமி விருது பெற்றவர்களுக்க ரூ,25 ஆயிரம். அப்படியென்றால் சாகித்ய அகாடமி விருதை விட கள்ளச்சாராயம் குடிப்பது உயர்வானதா?. இது அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    தமிழக மக்கள் நீங்கள் நன்றாக சிக்கிக் கொண்டீர்கள் இதற்கு ஒரே ஒரு வாய்ப்பு மைக் சின்னத்திற்கு வாக்களிப்பது தான், உழைத்து கலைத்த மக்களுக்கு ஒரு பானம் தேவைப்படுகிறது என்கிறார் அமைச்சர் துரைமுருகன். இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் நல்ல ஒரு அதிகாரத்தை, ஆட்சியை நம்மால் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

    • “தி பிளாக் ஹில்” நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் கண்ணையன் தட்சிணாமூர்த்தி.
    • சிறந்த தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு எனது பாராட்டுகள்.

    சென்னை:

    "தி பிளாக் ஹில்" நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு, அதனை மையமாக வைத்து, வடகிழக்குப் பகுதிகளின் பின்னணியில் புனையப்பட்ட "தி பிளாக் ஹில்" நாவலைத் தமிழில் மொழி பெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு எனது பாராட்டுகள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது
    • இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது

    இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

    அதில் 2024 ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழில் கண்ணையன் தட்சிணாமூர்த்தி என்பவர் மமாங் தய் எழுதிய the black hill என்ற நாவலை தமிழில் கருங்குன்றம் என்ற பெயரில் மொழி பெயர்த்ததற்காக சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார்.

    மேலும், கண்ணையன் தட்சிணாமூர்த்தி பல்வேறு மொழிலில் இருந்து எனது அரசியல் வாழ்க்கை, மகாத்மா காந்தியின் சிந்தனைகள், புரட்சி 185, இந்தியாவின் தேசியப் பண்பாடு, இந்திராகாந்தி , புத்தாக்க வாழ்வியல் கல்வி, அறிவுத்தேடலில் அறிவியல் உணர்வு, உறவுப்பாலம்: இலங்கைச் சிறுகதைகள், சுவாமி விவேகானந்தர்: இளையோரின் எழுச்சி நாயகன், கண்ணியமான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளனர்.
    • சாகித்ய அகாடமி விருதுடன் ரூ.1,00,000 வழங்கப்படுகிறது.

    சாகித்ய அகாடமி விருது என்பது இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் கௌரவமான விருது. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட இலக்கியத் தகுதியின் மிகச் சிறந்த புத்தகங்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

    சாகித்ய அகாடமியானது 1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி இந்திய அரசால் இலக்கிய உரையாடல், வெளியீடு மற்றும் ஊக்குவிப்புக்கான மைய நிறுவனமாக தொடங்கப்பட்டது. ஆங்கிலம் உட்பட 24 இந்திய மொழிகளில் இலக்கிய விருதாக சாகித்ய அகாடமி வழங்கப்படுகிறது.

    இந்த விருதை தமிழில் பல எழுத்தாளர்கள் ஒவ்வொரு வருடமும் பெறுகிறார்கள். கல்கி, பாரதிதாசன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எஸ்.செல்லப்பா, பிரபஞ்சன் மற்றும் பல தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளனர்.

    மேலும், சாகித்ய அகாடமி விருதுடன் சேர்த்து 2009-லிருந்து ரொக்கப் பரிசாக ரூ.1,00,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக பரிசுத் தொகையில் மாற்றம் இல்லாமல் அதே ரூ.1,00,000 வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, சாகித்ய அகாடமி விருதுடன் வழங்கப்படும் பரிசுத் தொகையை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • தேவிபாரதி என்ற புனைப்பெயரில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் எழுதிவருகிறார்.
    • கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்.

    2023-ம் ஆண்டுக்கான 24 மொழிகளில் சிறந்த புத்தககங்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த நாவலாக 'நீர்வழிப் படூஉம்' தேர்வு செய்யப்பட்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    தேவிபாரதி என்ற புனைப்பெயரில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் எழுதிவருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். இவருடைய மூன்றாம் நாவல்தான் 'நீர்வழிப் படூஉம்'. இந்நாவல், குடி நாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்வியலையும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உறவைப் பற்றி பேசும் நாவலாகும்.

    சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தேவி பாரதியின் மகள் நந்தினி கூறியுள்ளார்.

    • காளையார் கோவில் போரை முன் வைத்து எழுத்தப்பட்ட நாவலுக்கு மத்திய அரசின் விருது.
    • தமிழர்களின் வாழ்க்கை, சூழல், ஆங்கிலேயர்களின் நடவடிக்கை இதில் இடம் பெற்றுள்ளது.

    தமிழ், மலையாளம், கன்னடம் உள்பட 24 மொழிகளில் எழுதப்படும் சிறந்த இலக்கியம் சார்ந்து நாவல்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட காலா பாணி நாவலுக்கு நடப்பாண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் இந்த நாவலை எழுதி உள்ளார். இதற்கு முன்னர் தமது எழுத்துப் பணிக்காக டான்சீறி சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் 1801-ம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன் வைத்து காலா பாணி நாவலை அவர் எழுதியுள்ளார். நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை என்ற இந்த நாவலில் அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை, சூழல், ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். #RIPThoppilMohamedMeeran #SahityaAkademi
    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வந்தார்.

    இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 

    இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல்நலக் குறைவால் இன்று  காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    #RIPThoppilMohamedMeeran #SahityaAkademi 
    ×