என் மலர்
நீங்கள் தேடியது "Samatthuva makkal kalagam"
- தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
- மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார்.
மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கடந்த 6-ந் தேதி சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும், கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை ) தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு சமத்துவ தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் சமத்துவ மக்கள் கழக மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், துணை செயலாளர் மில்லை தேவராஜ், வக்கீல் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மீனவர் அணி செயலாளர் விக்ரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ராஜன்,மாநகர செயலாளர் உதயசூரியன், அவைத்தலைவர் மதியழகன், செல்வராஜ், காமராஜ்,நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட பொருளாளர் சுப்பையா உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.