search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sami role"

    • சாமி வேடங்கள் அணிந்து வந்து பக்தர்களை கவர்ந்த சிறுவர்-சிறுமிகள்.
    • இரவு மாசி வீதிகளில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 8-ம் நாள் திரு விழாவில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.

    அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சாற்றி, ரத்தினங்கள் இழைத்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று முதல் ஆவணி மாதம் வரை, மீனாட்சி அம்மனின் ஆட்சி மதுரையில் நடப்ப தாக ஐதீகம். பட்டத்து ராணியாக, மீனாட்சி அம்ம னும், பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் வலம் வந்தனர். 4 மாசி வீதிகளிலும் திரண்டிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் காத்தி ருந்து தரிசனம் செய்தனர்.

    கடந்த 23-ந் தேதி முதல் சித்திரை திருவிழாவில் தினமும் இரவு மாசி வீதிகளில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள். அப்போது நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஒவ்வொரு நாள் நடக்கும் வீதிஉலாவின்போது சுவாமி-அம்பாள் வாக னத்தின் முன்பு சிறுவர், சிறுமிகள் கடவுள் வேட மணிந்து செல்கின்றனர். மேலும் கலைஞர்கள் மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்டவற்றையும் ஆடி வருவது பக்தர்களை கவர்கிறது.

    சிவன், மீனாட்சி அம்மன், பத்ரகாளி, கிருஷ்ணர், கருப்பசாமி, அழகர், முருகன், விநாயகர் உள்ளிட்ட கடவுளின் வேட மணிந்து சிறுவர், சிறுமிகள் பெற்றோர் தோள் மீது அமர்ந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அது பக்தர்கள் மனதை மிகவும் மகிழ்வித்தது.

    ×