என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sangadahara Chaturthi"
- ஒவ்வொரு விரதங்களும் ஒவ்வொரு வகையான பலன்களை வழங்கும்.
- நம்பிக்கையோடு விரதத்தை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விரதங்கள் ஏராளமாக இருக்கின்றன. வார விரதம், தினசரி விரதம், மாத விரதம், திதி விரதம், வருட விரதங்கள், சிறப்பு விரதங்கள், பிரதோஷ விரதம், நட்சத்திர விரதங்கள் என பல வகை உண்டு. ஒவ்வொரு விரதங்களும் ஒவ்வொரு வகையான பலன்களை வழங்கும். விரதங்களின் மூலம் வாழ்வை மட்டுமல்ல, உடலையும் நலமாக்கிக் கொள்ள இயலும். நம்பிக்கையோடு விரதத்தை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஜாதக ரீதியாக நமக்கு யோக பலன் தரும் கிரகம் எது என்று அறிந்து, அதற்குரிய நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் பார்த்து விரதம் இருக்க வேண்டும். விரதம் இருக்கும் நாளில் அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நற்பலன் கிடைக்கும். தோஷங்கள் அனைத்தும் மாறி சந்தோஷங்கள் நம்மை நாடி வரும்.
நவக்கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் அமைந்தால் வாழ்க்கை சக்கரம் சீராக சுழல முடியும். ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு அமைப்பில் அமைந்திருக்கும். எந்த கிரகம் பலமிழந்து இருக்கின்றதோ அந்த கிரகத்தை பலப்படுத்துவதற்குரிய வழிபாடுகள். விரதங்களை மேற்கொண்டால் வாழ்வில் வளம் காண இயலும்.
பொதுவாக வாரத்தின் ஏழு நாட்களில் எந்த கிரகத்திற்குரிய கிழமையில் விரதம் இருக்க வேண்டும் என்பதை அறிந்து விரதம் மேற்கொள்ள வேண்டும்.
சூரியன் அருள்பெற விரும்புபவர்கள், ஞாயிற்றுக்கிழமை அன்று 'ஆதிவார விரதம்' இருப்பது நல்லது. சூரியன் உதிக்கும் முன்பாக எழுந்து சூரிய வழிபாட்டோடு சிவனையும் வழிபடுங்கள். கோதுமை தானம் செய்வது நல்லது.
சந்திர பலம் வேண்டுபவர்கள் சந்திர பகவானின் அருளைப் பெற திங்கட்கிழமை அன்று விரதம் இருப்பது நல்லது. அன்றைய தினம் தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு ஒரு சிலருக்காவது அரிசி தானம் செய்யலாம்.
செவ்வாய் என்னும் அங்காரகன் அருளைப்பெற விரும்புபவர்கள், ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டு துவரை தானம் செய்வது நல்லது.
புதனின் அருளைப்பெற விரும்புபவர்கள், கல்விஞானம் பெற விரும்புபவர்கள், புதன்கிழமை விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டு வருவதுடன் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது. பாசிப்பயிறு தானம் செய்வது நல்லது.
'குரு பார்க்க கோடி நன்மை' என்பதால் குருவின் அருளைப் பெற விரும்புபவர்கள், வியாழக்கிழமை விரதம் இருந்து முல்லைப்பூ மாலை அணிவித்து குருவை வழிபட்டு, சுண்டல் தானம் கொடுப்பது நல்லது.
சுக்ரன் அருளைப் பெற விரும்புபவர்கள் வெள்ளிக் கிழமை விரதம் இருந்து, மாலை நேரத்தில் சிவாலயத்திற்குச் சென்று வெண் தாமரை பூ மாலை அணி வித்து லட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. அன்றைய தினம் அன்னதானம் செய்வது மிகவும் உகந்தது. மொச்சை தானம் செய்யலாம்.
சனி பகவானின் அருளைப்பெற விரும்புபவர்கள், சனிக்கிழமை அன்று விரதமிருந்து எள்தீபம் ஏற்றி வழிபட்டு வருவது நல்லது. திசை மாறிய தெய்வ வழிபாடு மிகவும் நற்பலனை வழங்கும். எள்ளோதரை நைவேத்தியம் அல்லது எள் தானம் செய்யலாம்.
ராகுவின் அருளைப்பெற விரும்புபவர்கள். செவ்வாய்க்கிழமை தோறும் வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது.
கேது வின் அருளைப்பெற விரும்புபவர்கள், கேது இருக்கும் இடத்திற்குரிய நாளில் விநாயகப் பெருமானை முறையாக வழிபட்டு வருவது நல்லது. ராகுவிற்குரிய உளுந்து, கேதுவிற்குரிய கொள்ளு தானம் செய்வது சிறந்தது.
ஒவ்வொரு வாரத்திலும் அந்தந்த கிரகத்திற்குரிய கிழமையில் தொடர்ந்து விரதம் இருந்து வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற நற்பலன் தரும் கிரகத்திற்குரிய கிழமையில் விரதம் இருப்பதால் குடும்ப முன்னேற்றமும், செல்வச்செழிப்பும், செல்வாக்கும் உயரும். வாழ்வில் வளம் காண இந்த விரதங்கள் உறுதுணையாக அமையும்.
எந்த விரதம் இருப்பவர்களாக இருந்தாலும் முதன் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகு விரதத்தை தொடங்குவது நல்லது. விநாயகர் வழிபாடு வெற்றியை வழங்கும். பொதுவாக அனைவரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து ஆனைமுகப்பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் அகலும்.
- இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள் விநாயகர்.
- தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை எழுதியவர்.
விநாயகப் பெருமானை இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள். தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை எழுதியவர். விநாயகனை வழிபட சிறந்த நாள் சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில் விநாயகரை வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட அனைத்தும் கிடைக்கும்!
சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப்பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான்.
முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், ராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கவுதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
- கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
- இதனையொட்டி வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய அய்யர் செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலார் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.
- திருச்சி பாலக்கரை பகுதியிலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார்.
- செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வழிபட்டால் நாக தோஷம் விலகும்.
ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதிதேவி தனியாக தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்த திருவுருவத்தையே, அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தாராம்.
இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகில் உள்ள திருவேள்விக்குடி திருத்தலத்தில், சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். 'ஆதி இரட்டை விநாயகர்' என்று போற்றப்படுபவரும் இவரே.
அதுபோலவே திருச்சி பாலக்கரை பகுதியிலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும் திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாக கருதப்படுகிறது.
தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். மேலும் கார் அரிசியில் மோதகம் (கொழுக் கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.
திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும்.
விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறை வேறும்.
பொதுவாக, செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் நாக தோஷம் விலகும். சனிக்கிழமைகளில் கனி வர்க்கத்தில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.
இத்திருக்கோவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இதேபோல், தஞ்சை திருவையாறு ஐயானரப்பன் கோவிலில் அருள்பாலிக்கிறார் இரட்டைப்பிள்ளையார். இவர் சன்னதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
திருமணமாகாத பெண்கள் சந்தனாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால், குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும்.
மேலும், ஸ்ரீரங்கத்திற்கு அருகில் உள்ள உத்தமர் கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தலை வாசலை அடுத்த ஆறகலூரில் இருக்கும் கோவில், ஊட்டி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள விநாயகர் கோவில் போன்ற இடங்களிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது. இரட்டை விநாயகரை ஒரே சன்னதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பார்கள்.
- விநாயக பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் வட்டாரத்தில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு, பல்லடம் செல்வ விநாயகர் திருக்கோவில், அங்காளம்மன்கோவில், பொன்காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், வடுகபாளையம் சக்தி விநாயகர் கோவில், சந்தைபேட்டை கோட்டை விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சங்கடகர சதுர்த்தி பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப்பெருமானை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- கோவில்பட்டி செல்வ மங்கள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
- விழாவில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சாய்சிட்டி நகரில் அமைந்துள்ள செல்வ மங்கள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 9 மணிக்கு செல்வ மங்கள விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர், தேன், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணியன் அய்யர் செய்தார். விழாவில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பல்லடம் :
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பல்லடம் செல்வ விநாயகர் திருக்கோவில், அங்காளம்மன்கோவில், பொன்காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், வடுகபாளையம் சக்தி விநாயகர் கோவில், உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
- அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்,திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமாரவலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிரம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.
- விநாயகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது.
பல்லடம்
பல்லடம் பகுதியில் உள்ள கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன்படி பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை கோவிலில் விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் பல்லடம் செல்வ விநாயகர் திருக்கோவில், பொன்காளியம்மன் கோவில்,சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டை உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது.
- கோடி சக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பிறகு ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சொர்ணமலை திருச்செந்தூர் பாதயாத்திரை மற்றும் அன்னதான குழு, முருகன், பிரேமா ஆகியோர் செய்திருந்தனர்.
- விசாலாட்சி விநாயகர் கோவிலில் 10-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.
- 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.
மதுரை
மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலையைில் நடக்கிறது.
மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்து மடப்புரம் விலக்கு பேருந்து நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.
இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.
- சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டை,உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- பால், தயிர், தேன், சந்தனம், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது.
பல்லடம்:
சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு பல்லடம் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன்படி பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை கோவிலில், விநாயகப் பெருமானுக்கு, பால், தயிர், தேன், சந்தனம், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .இதே போல், பல்லடம் செல்வ விநாயகர் திருக்கோவில், பொன்காளியம்மன் கோவில், சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டை,உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்