என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Saradha College"
- விழாவில் திருவாதிரைக்களி நடனம் உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நெல்லை:
பாளை சாரதா மகளிர் கல்லூரியில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். யதீஸ்வரி முகுந்த பிரியா அம்பா சிறப்புரை வழங்கினார். குழுப்பாடல் (மலையாளம்), திருவாதிரைக்களி நடனம், கவிதை வாசித்தல் (மலையாளம்) ஆகிய கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகள் பேரவை தலைவி தமயந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கு பார்வதி தேவி ஏற்பாடு செய்திருந்தார்.
சாரதா மகளிர் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் உடற்கல்வி, விளையாட்டு அறிவியல் மற்றும் யோகா துறையால் கொண்டாடப்பட்டது. கோ-கோ, டேபிள் டென்னிஸ், கயிறு தாண்டுதல், செஸ், வாக் ரோஸ், பந்தய போட்டிகள் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி அம்பா மற்றும் முதல்வர் பரிசுகளை வழங்கினர். இப்போட்டியில் மொத்தம் 147 மாணவர்களும், 29 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
- சர்வதேச கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார்.
- சிறப்பு விருந்தினராக ம.தி.தா. கல்லூரி உதவிபேராசிரியர் வேல்மணி கலந்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை சாரதா மகளிர்கல்லூரியில் கணினி பயன்பாட்டுத்துறையில் வயர்லெஸ் மற்றும் மொபைல் நெட்வொர்க் பாதுகாப்பு என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரிச்செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியாஅம்பா ஏற்பாட்டில் கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். கணிணி பயன்பட்டுத்துறை உதவி பேராசிரியர் பார்வதி தேவி தலைமை உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ம.தி.தா. இந்துக்கல்லூரி கணினி அறிவியல் துறை உதவிபேராசிரியர் வேல்மணி கலந்து கொண்டு 'சுற்றுப்புற நுண்ணறிவு, தொழில்நுட்பங்கள் மற்றும் பயன் பாடுகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
2-வது அமர்வில் ஆசிய பசிபிக்தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் ஸ்கூல் ஆப்டெக்னாலஜி இணைப்பேராசிரியர் டாக்டர்செல்வகுமார் சாமுவேல் 'டிஜிட்டல் சிந்தனை திறனுடனான பெருந்தரவு பகுப்பாய்வு' பற்றி உரையாற்றினார்.
3-வது அமர்வில் சீனா அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி 'கம்பி
யில்லா தொலைத்தொடர்பில் நிகழ் ஆராய்ச்சிகள்' பற்றி உரையாற்றினார். பல்வேறு கல்லூரிகளில் இருந்து 55 மாணவிகள், ஆராய்ச்சி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளையும் வழங்கி னார்கள். முடிவில் கணினி பயன்பட்டுத்துறை உதவி பேராசிரியர் சுடர்வேணி என்ற சுபா நன்றி கூறினார்.
- சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு தமிழ்த்துறை உதவிப்பேராசிரியரும், பொதிகை இலக்கிய மன்றத்தின் துணைத்தலைவருமான கார்த்திகா வரவேற்றார்.
- நிகழ்ச்சியில் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர் விளக்கமளித்தார்.
நெல்லை:
நெல்லை ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பொதிகை இலக்கிய மன்றத்தின் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா- தேசிய மொழிகள் தினத்தையொட்டி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியரும், பொதிகை இலக்கிய மன்றத்தின் துணைத்தலைவருமான கார்த்திகா வரவேற்றார். கல்லூரி முதல்வர் கமலா தலைமை தாங்கி பேசினார்.
சிறப்பு விருந்தினராக, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதுநிலை வணிக சந்தையாளரும் மகாகவி சுப்ரமணிய பாரதியின் பேரனுமாகிய ராஜ பரத்வாஜ் ராஜகோபாலன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.
மேலும் கனவு மெய்ப்பட மாணவிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை எடுத்துக்கூறியும் தன்நிலை உணர்ந்து இலக்கைத் தேர்ந்தெடுத்து பயணியுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கலந்து ரையாடல் நிகழ்ச்சியில் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர் தக்க சான்றுகளுடன் விளக்க மளித்தார்.
நிகழ்ச்சியில் கணித வியல் துறையின் இயக்குநர் இந்திராணி, தமிழ்த்துறைத் தலைவர் தனலெட்சுமி கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை, மூன்றாமாண்டு மாணவி தீபிகா நன்றி கூறினார். இளநிலை மூன்றாமாண்டு மாணவி வைஷ்ணவி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், இளநிலை மூன்றாமாண்டு மற்றும் முதுநிலை மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கல்லூரி செயலர் யத்தீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா முன்னிலை வகித்தார்.
- நேர்காணலில் 31 மாணவிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
நெல்லை:
நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் தனியார் நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெற்றது. கல்லூரி செயலர் யத்தீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வரும், பொருளியல் துறை தலைவருமான கலாவதி வரவேற்று பேசினார்.
தனியார் நிறுவன விநியோக தலைவர் பேச்சிமுத்து, கிருஷ்ணவேணி, அகிம்சா மூர்த்தி, கணபதி வாசுகி, அஜய் நிஷாந்த் ஆகியோர் நிறுவனம் மற்றும் நேர்காணல் குறித்து அறிமுக உரையாற்றினர். நேர்காணலில் 31 மாணவிகள் பங்கேற்று பயன் பெற்றனர். கணிதவியல் துறை தலைவரும், பயிற்சி, மாணவர் வளர்ச்சி பிரிவு தலைவருமான ரேவதி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு அதிகாரியும், பொருளியல் துறை பேராசிரியையுமான மிருணாதேவி செய்திருந்தார்.
- நெல்லை ஸ்ரீ சாரதா மகளிர் கல்வி நிறுவனங்கள், நெல்லை மற்றும் விருதுநகர் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்திய தன்னம்பிக்கை உரை நிகழ்ச்சி கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு தன்னம்பிக்கை கதைகளை கூறி வாழ்வியல் அரங்கல் பற்றியும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மாணவிகளுக்கு அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.
நெல்லை:
நெல்லை ஸ்ரீ சாரதா மகளிர் கல்வி நிறுவனங்கள், நெல்லை மற்றும் விருதுநகர் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்திய தன்னம்பிக்கை உரை நிகழ்ச்சி கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது.
கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்கா பிரியா அம்பா ஆசியுரை வழங்கினார். பள்ளி செயலர் யதீஸ்வரி தவப்பிரியா அம்பா, கல்லூரி முதல்வர் கமலா, பள்ளி முதல்வர் சுந்தரலட்சுமி, கல்வியியல் கல்லூரி முதல்வர் பாக்கியலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் கார்த்திகா வரவேற்று பேசினார். நெல்லை ரோட்டரி கிளப்பின் ரோட்டேரியன் மேஜர் டோனர் முத்தையா பிள்ளை உரையாற்றினார்.
வணிக நிர்ம செயல்பாட்டு துறை தலைவர் அருணா தேவி அறிமுக உரை ஆற்றினார். நெல்லை ரோட்டரி கிளப் தலைவர் ராஜேந்திர ரத்தினம், ஆய்வு இயக்குனர் விஜயகுமாரி ஆகியோர் உரை ஆற்றினார்கள்.
சாரதா வித்யாலயா பள்ளி ஆசிரியை சுவர்ணலதா சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுக உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு தன்னம்பிக்கை கதைகளை கூறி வாழ்வியல் அரங்கல் பற்றியும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மாணவிகளுக்கு அவசியம் என்றும் அறிவுறுத்தினார். பின்னர் மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். மாணவி பொன் மீரா நன்றி கூறினார்.
மாணவிகள் பேரவை துணை தலைவர் அனுஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சாரதா கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள், கல்வியியல் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்