என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Seawater"
- கொள்ளிடம் ஆற்றில் திருக்கழிப்பாலை அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வேண்டும்.
- தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் காவிரிப்படுகையில் கர்நாடக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.
சீர்காழி:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் திருக்கழிப்பாலை -மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வலியுறுத்தி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அளக்குடி பகுதியில் நேரில் சென்று கொள்ளிடம் ஆற்றில் பார்வையிட்டார்.
அப்போது பொதுப்பணித் துறை அதிகாரியிடம் திட்ட வரைப்படத்தினை பார்வையிட்டு விவரம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் திருக்கழிப்பாலை அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வேண்டும். இவ்வழியாக கடல் நீர் 22 கி.மீ உட்புகுந்துள்ளது. கோடை காலத்தில் நீர் நிலைகள் உப்பு நீராக மாறிவிடுகிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த நீண்ட நாளாக வலியுறுத்தப்படுகிறது.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தடுப்பணை கட்ட வலியுறுத்தினேன். அதன்படி இப்பகுதி ஆய்வு செய்யப்பட்டு ரூ.580 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனையில் உள்ளது. இதன் மூலம் 25 கிலோ மீட்டர் தண்ணீரை தேக்கிவைக்க முடியும். 200 கிராமங்கள் பயன் அடையலாம். அரசு உடனடியாக தடுப்பணை கட்ட வேண்டும்.காலநிலை மாற்றத்தினை எதிர் கொள்ளும் வகையில் அரசு திட்டங்கள் தயார் செய்து செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அதிக அளவு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றார்
.டெல்லி நீர் மேலாண்மை ஆணையம் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக திட்ட அறிக்கையைவிவாதிக்கும் வகையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த கூட்டம் வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழக அரசு தலையிட்டு உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியாக இதற்கு தடை பெற வேண்டும். தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் காவிரிப்படுகையில் கர்நாடக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடக பாஜக அரசுக்கு ஆதரவாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.2017ம் ஆண்டில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட ரூ.430 கோடி அப்போதைய அ.தி.மு.க அரசால் ஒதுக்கப்ப–ட்டது. முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தனது தொகுதிக்கு திட்டத்தை மாற்றி எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு உள்ளது. தற்போதைய ஆட்சியாளர்கள் உடனடியாக தடுப்பணை கட்டும் விவகாரத்தில் முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும். தடுப்பணை கட்ட தாமதித்தால் எனது தலை–மையில் போராட்டம் நடத்தப்படும். கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை நடப்பது தடுக்கப்பட வேண்டும் என்றார்.
அப்போது பா.ம.க மாவட்ட செயலாளர் சித்தமல்லி.ஆ.பழனிசாமி, மாவட்ட தலைவர் ரெ.அன்ப–ழகன், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் ஜி.வி.முருகவேல், ஒன்றிய கவுன்சிலர் சிவபாலன், ஒன்றிய செயலாளர்கள் பாலதண்டாயுதம், தியாகராஜன், குமார், நகர செயலாளர் சின்ணையன், செயற்குழு உறுப்பினர் தேனூர்.ரவிச்சந்திரன், நகர செயலாளர் சின்னையன், நீர்வளத்துறை காவிரி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் கே.மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்